Search
  • Follow NativePlanet
Share
» »நீண்ட தூர சைக்கிளிங் பயணம் போக பிடிக்குமா?

நீண்ட தூர சைக்கிளிங் பயணம் போக பிடிக்குமா?

By Staff

உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சமீபகாலத்தில் அக்கறைஎடுத்துகொள்ள ஆரம்பித்திருக்கிறோம் நாம். பூச்சி மருந்து தெளித்த காய்கறிகளை தவிர்த்து ஆர்கானிக் உணவுகளை சாப்பிடுவது, சர்க்கரைக்கு பதில் வெல்லம் & கருப்பட்டி பயன்படுத்த ஆரம்பித்திருப்பது, கே.எப்.சி போன்ற பன்னாட்டு மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுக்குப்பைகளை ஒதுக்குவது என நம்மிடையே திட்டமிட்டு பரப்பட்டட்ட நவநாகரீக வாழ்வியல் முறைகளின் தீங்குகளை பற்றிய விழிப்புணர்வு பெருமளவு அதிகரித்திருப்பது தமிழ் சமூகத்தில் ஆரோக்கியமான நிகழ்வாகும்.

அந்த வரிசையில் உடலை துடிப்புடன் வைத்திருக்க 'சைக்கிளிங்' செய்யும் பழக்கமும் நம்மிடையே அதிகரித்துள்ளது. நண்பர்கள் ஒன்றாக தினமும் அதிகாலை நீண்ட தூரம் செல்வது வழக்கமான நிகழ்வாக மாறியுள்ளது.

நீங்களும் அதுபோல சைக்கிளிங்கில் ஆர்வமுடன் ஈடுபட்டிருக்கிறீர்களா?. இந்தியாவில் நீண்ட தூர சைக்கிளிங் பயணம் போக மிகவும் சிறந்த சாலையை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

மணாலி - லெஹ்:

மணாலி - லெஹ்:

பயணம் செய்வதில் விருப்பம் கொண்ட ஒவ்வொருவருக்கும் கனவுப்பயணமாக இருப்பதுமணாலி - லெஹ் தான்.

482 கி.மீ தொலைவு கொண்ட இந்த பயணத்தின் போது இந்த பூமியில் இருக்கும் அற்புதமான இயற்கை காட்சிகளை காணலாம். ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள மணாலியில் இருந்து காஷ்மீரில் உள்ள லெஹ் நகரை சைக்கிள் மூலம் அடைய குறைந்தது 10 நாட்களேனும் ஆகும்.

Henrik Johansson

மணாலி - லெஹ்:

மணாலி - லெஹ்:

மணாலி - லெஹ் சாலையில் பயணம் போக ஜூன் - அக்டோபர் வரையிலான மாதங்கள் உகந்ததாகும். இந்த மாதங்களில் மட்டும் தான் பனி இல்லாமல் சாலைகள் பயணம் செய்ய ஏற்றதாக இருக்கின்றன.

Prabhu B Doss

மணாலி - லெஹ்:

மணாலி - லெஹ்:

தனியாக இல்லாமல் குழுவாக மட்டுமே இந்த சாலையில் சைக்கிளிங் பயணம் செய்ய வேண்டும். அதுவே பாதுகாப்பாகும். ஒரு நாளைக்கு 30-40கி.மீ என்ற விதத்தில் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளவேண்டும்.

மாற்று டயர், பம்ப், தேவையான அளவு தண்ணீர் மற்றும் குல்கோஸ், காயத்திற்கான மருந்துகள் போன்றவற்றை உடன் எடுத்துச்செல்ல வேண்டியது அவசியம்.

Henrik Johansson

மணாலி - லெஹ்:

மணாலி - லெஹ்:

சைக்கிளிங் பயணம் போவதில் பல வருடம் அனுபவம் கொண்டவர்கள் மட்டுமே இந்த பயணத்தில் ஈடுபடுவது நல்லது. பயணம் மிகக்கடினமானது என்றாலும் இங்கே பார்க்கக்கிடைக்கும் காட்சிகள் அவை எல்லாவற்றையும் மறக்கச்செய்யும்.

Henrik Johansson

மணாலி - லெஹ்:

மணாலி - லெஹ்:

இந்த பயணத்தின் முடிவாக நாம் சென்றடையும் லெஹ் நகரின் அழகை விவரிக்க வார்த்தைகள் போதாது. இங்குள்ள பாங்காங் ஏரி, லெஹ் பேலஸ், நுப்ரா பள்ளத்தாக்கு, ஷாந்தி ஸ்தூபா போன்றவற்றை காணத்தவறவேண்டாம்.

படம்: லெஹ் பேலஸ்

Prabhu B Doss

மணாலி - லெஹ்:

மணாலி - லெஹ்:

விமானம் அல்லது ரயில் மூலம் டெல்லியை அடைந்து அங்கிருந்து வாடகை கார் மூலம் மணாலியை சென்றடைந்து ஒரு நாள் ஓய்வெடுத்துவிட்டு சைக்கிளிங் பயணத்தை துவங்கலாம்.

Peter Morgan

மணாலி - லெஹ்:

மணாலி - லெஹ்:

இந்த பயணத்தின் போது ஜிச்பா, சர்சு, கெய்லொங்க், டார்ச்சாபோன்ற இடங்களில் கேம்ப் அமைத்து தங்கலாம். இந்த பயணத்தின் போது வழியில் ரோஹ்டன் கணவாய், உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள சாலை இருக்கும் சிங்சிங் போன்றவற்றை கடக்க வேண்டும்.

Henrik Johansson

மணாலி - லெஹ் - புகைப்படங்கள்:

மணாலி - லெஹ் - புகைப்படங்கள்:

புகழ்பெற்ற ஆஸ்திரேலியா சைக்கிளிஸ்ட் ரால்ப் மேக்காக்னி தன்னுடைய மணாலி-லெஹ் பயணத்தின் போது எடுத்த அற்புதமான சில புகைப்படங்களின் தொகுப்பு.

Ralph McConaghy

Read more about: kerala alleppy chennai leh ooty
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X