Search
  • Follow NativePlanet
Share
» »இந்த இடத்துக்கெல்லாம் நைட்டு மட்டும் போய் பாருங்க!

இந்த இடத்துக்கெல்லாம் நைட்டு மட்டும் போய் பாருங்க!

நாட்டிலுள்ள பெருநகரங்கள் அதிக மக்கள் தொகையை கொண்டிருப்பதுடன், வாகனங்களும் அதிகளவில் காணப்படுகின்றன. இதன் காரணமாக எப்போதும் பரபரப்பாக இயங்கிவரும் முக்கிய நகரங்கள், பகலை விட இரவில் இன்னும் கூடுதல் சுறுசுறுப்புடன் இயங்குவது வழக்கமாகிவிட்டது. அந்தவகையில் இரவின் இருளை கிழித்துக்கொண்டு செல்லும் வாகனங்களும், மறுபக்கம் ஆரவாரமற்று மின் விளக்கின் ஒளியில் ஜொலிக்கும் பகுதிகளுக்கு ஒரு ரைடு போகலாம் வாங்க.

பெங்களூர்

பெங்களூர்

பரபரப்பான ஷாப்பிங் மால்கள், வாகனங்கள் நிறைந்து வழியும் சாலைகள், வானுயர கட்டிடங்கள் போன்றவற்றோடு காணப்படும் பெங்களூர், இந்தியாவின் புதிய முகம். பெங்களூரின் உயரமான கட்டிடங்களில் ஒன்றான UB சிட்டியும், அதற்கு பின்னால் கர்நாடக சட்டசபையான விதான சௌதா உள்ளிட்ட கட்டிடங்களும்.

wikimedia

கொல்கத்தா

கொல்கத்தா

கொல்கத்தா நகரத்தின் இரவு நேர பொழுதுபோக்கு அம்சங்கள் நாட்டிலேயே மிகச்சிறந்தவையாக பிரசித்தி பெற்றுள்ளன. இங்குள்ள நைட்கிளப்கள் சாதாரண நுழைவுக்கட்டணத்தை கொண்டுள்ளன. கொல்கத்தாவின் புகழ்பெற்ற ஹௌரா பாலம் இரவு நேர விளக்கொளியில் வண்ணமயமாக காட்சியளிக்கிறது.

Biswarup Ganguly

சென்னை

சென்னை

இந்தியாவின் முக்கிய மாநகரங்களில் ஒன்றான சென்னை நகரம் ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் கலாச்சார கேந்திரமாக சுதந்திர காலம் தொட்டு விளங்கி வருகிறது. சென்னை கோட்டை ரயில் நிலையத்துக்கு வெளியே சாலையில் செல்லும் வாகனங்களின் விளக்கொளி.

Simply CVR

மதுரை

மதுரை

வைகை ஆற்றின் கரையில் மதுரை எனும் இந்த புராதன தமிழ் நாகரிக நகரம் எழும்பியுள்ளது. வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஆல்பெர்ட் விக்டர் பாலம்.

wishvam

ஹைதராபாத்

ஹைதராபாத்

எப்போதும் வற்றாத நீர்த்தேக்கத்துடன் காட்சியளிக்கும் ஹுசேன் சாகர் ஏரி, ஹைதராபாத் மற்றும் செகந்தராபாத் இரண்டையும் இணைப்பது போன்று காட்சியளிக்கிறது. ஏரியை சுற்றிலும் ‘நெக்லஸ் ரோடு' எனும் பிரசித்தமான வீதி அமைந்துள்ளது.

Saikrishna Parnapalli

பாண்டிச்சேரி

பாண்டிச்சேரி

தனித்தன்மையான கலாச்சார குணாதிசயங்கள், அருமையான உணவு வகைப்பாடுகள் மற்றும் மாறுபட்ட பார்வையிடங்களை உடைய பாண்டிச்சேரியில் கடற்கரைக்கு அருகில் செல்லும் சாலை.

Sarath Kuchi

ஜெய்ப்பூர்

ஜெய்ப்பூர்

இந்தியாவின் பழமையான அழகு நகரமான ஜெய்ப்பூர் நகரம் ‘இளஞ்சிவப்பு நகரம்' என்று பிரியத்துடன் அழைக்கப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரமாகவும் விளங்கும் இங்கே உள்ள ஜெய்ப்பூரின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான சவாய் மான்சிங் அரண்மனை நிலவுடன் போட்டிபோட்டு ஜொலிக்கிறது.

Ritesh Salian

ஜம்ஷேட்பூர்

ஜம்ஷேட்பூர்

ஜார்கண்ட் மாநிலத்தின் எஃகு நகரமாக அறியப்படும் ஜம்ஷேட்பூர் நகரிலுள்ள டாட்டா ஸ்டீல் தொழிற்சாலை.

Ashokinder

அஹமதாபாத்

அஹமதாபாத்

குஜராத் மாநிலத்தின் பொருளாதார நகரமாகவும், மிகப்பெரிய நகரமாகவும் அறியப்படும் அஹமதாபாத்தில் நவராத்திரி திருவிழாவை ஒட்டி கர்பா நடனமாடும் கலைஞர்கள்.

Hardik jadeja

ஹரித்வார்

ஹரித்வார்

ஹரித்வாரில் கங்கை நதியோரம் அமைந்திருக்கும் புனித இடமான ஹர் கி பௌரி.

NID

அம்ரித்ஸர்

அம்ரித்ஸர்

அம்ரித்ஸரின் புகழ்பெற்ற தங்கக் கோயிலான ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப்.

shankar s.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X