Search
  • Follow NativePlanet
Share
» »உங்கள் எல்லாப் பிரச்சனைகளையும் தீர்க்கும் அந்த அற்புத ரகசியத்தை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்

உங்கள் எல்லாப் பிரச்சனைகளையும் தீர்க்கும் அந்த அற்புத ரகசியத்தை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்

By Staff

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற 6 அம்மன் கோயில்கள்!

பிரச்சனைகளே இல்லாத வாழ்க்கை ஒருவனுக்கு அமையுமானால் அவனுக்கு பைத்தியம் பிடித்துவிடும் என்று கிராமப்புறங்களில் சொல்வதுண்டு.  குடும்பம், வேலை, கல்வி, தொழில் என நாம் அன்றாடம் இயங்குகிற இடங்களிலெல்லாம் பல்வேறு பிரச்சனைகளை தினம்தினம் சந்திக்கிறோம்.  பிரச்சனைகளுக்கு எதிரான போராட்டமும் அது தரும் அயர்ச்சியில் இருந்து மீண்டு வருதலும் வாழ்கையில் தொடர்ச்சியாக நடக்கும் சம்பவமாகும். 

என்னதான் இவற்றை சமாளிக்கும் திறன் பெற்றிருந்தாலும் ஒரு கட்டத்தில் வாழ்கையின் மேல் சலிப்பு ஏற்படுவது எல்லோருக்கும் நடப்பது தான். இதிலிருந்து மீண்டு வர நமது அன்றான வாழ்கையிலிருந்து சில நாட்கள் விலகியிருப்பது மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சியை தரும். 

வாழ்கையின் மீதான விருப்பம் குறையும் போது சில நாட்களுக்கு அமைதியான பசுமையான ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்றுவருவது மிகவும் உதவிகரமாக இருக்கும். வாருங்கள் இந்தியாவிலிருக்கும் மூன்று சிறந்த ஆன்மீக ஸ்தலங்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.   

போதை மலை குள்ளர்களின் மர்மக்கதை தெரியுமா?

புத்த கயா:

புத்த கயா:

"ஆசை தான் துன்பத்துக்கு காரணம். அந்த ஆசையை ஒழிக்க ஆசைப்படுங்கள் " என்று உலகுக்கு போதித்த பேராசான் புத்தர் ஞானமடைந்த இடம் தான் பீகார் மாநிலத்தில் இருக்கும் புத்த கயா என்ற இடமாகும்.

புத்தர் இங்கே உள்ள புனித நதியான ப்ஹல்கு நதிக்கரையில் ஒரு அரச மரத்தின் அடியில் தொடர்ந்து மூன்று இரவு பகல் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார்.

Matt Stabile

புத்த கயா:

புத்த கயா:

பீகாரின் தலைநகரான பாட்னாவில் இருந்து 90 கி.மீ தொலைவில் கயா மாவட்டத்தில் 'புத்தகயா' என்ற இந்த இடம் அமைந்திருக்கிறது. இங்கே தான் புத்தர் ஞானமடைந்த 'மஹா போதி' அரச மரமும், மிகப்பெரியதொரு புத்த கோயிலும் அமைந்திருக்கிறது.

உலகமெங்கிலும் இருந்து வரும் பௌத்தர்கள் இந்த மகா போதி மரத்தை சுற்றியமர்ந்து தியானத்தில் ஈடுபடுகின்றனர்.

Matt Stabile

புத்த கயா:

புத்த கயா:

புத்தர் ஞானமடைந்து கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு பின் அதாவது கி.மு 250 ஆம் ஆண்டு இங்கே வருகை தரும் அசோக மன்னர் போதி மரத்துக்கு நேர் கிழக்கே மஹாபோதி என்ற மிகப்பெரியதொரு கோயிலை கட்டியிருக்கிறார்.

இக்கோயில் 2000 வருடங்கள் பழமையானது ஆகும். மேலும் இந்தியாவில் செங்கல்லை கொண்டு கட்டப்பட்ட மிகப்பழமையான கட்டிடமும் இது தான்.

Lyle Vincent

புத்த கயா:

புத்த கயா:

புத்த கயாவை பற்றிய மேலும் பல தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள். புத்த கயா சென்றால் அங்கே தங்குவதற்கான ஹோட்டல்கள் பற்றிய விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

Flip Nomad

காசி:

காசி:

என்று தோன்றியது என்றே அறிய முடியாத அளவு பழமையானது ஹிந்து மதம் ஆகும். இதனை ஹிந்து மதம் என்பதைக்காட்டிலும் இந்திய மதம் என்றே சொல்லலாம். இந்திய திருநாட்டில் தோன்றிய நம்பிக்கைகளின் கூட்டு சங்கமமே ஹிந்து மதம் ஆகும்.

அந்த நம்பிக்கைகளின் தலைநகரமாக திகழ்வது தான் இன்று உலகில் தொடர்ந்து இயங்கிவரும் மிகப்பழமையான நகரம் என்று பெருமைக்குரியது தான்காசி ஆகும்.ஹிந்துவாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்கையில் ஒருமுறையேனும் வர வேண்டிய இடம் இது.

Arian Zwegers

காசி:

காசி:

காசியில் இருக்கும் மிக முக்கியமான ஆன்மீக ஸ்தலம் விஸ்வநாதர் கோயில் ஆகும். இந்தியாவெங்கும் இருக்கும் 12 ஜோதிர்லிங்க கோயில்களில் முதன்மையானதாக விஸ்வநாதர் கோயில் திகழ்கிறது. புண்ணிய நதியான கங்கையில் ஸ்நானம் செய்து காசி விஸ்வநாதரை வழிபட்டால் வாழ்கையில் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி மோக்ஷம் கிட்டும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

காசி:

காசி:

காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த இடமென்றால் அது கங்கைக்கரையில் அமைந்திருக்கும் படித்துறைகள் தான். தஸ்வமேத காட், பஞ்சகங்கா காட், மணிகர்ணிகா காட் மற்றும் ஹரிஷ்சந்திர காட் ஆகிய படித்துறைகளில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இயற்கைஎய்திய தம் முன்னோர்களுக்கான சடங்குகளை மேற்கொள்கின்றனர்.

காசி:

காசி:

அதேபோல ஒவ்வொரு நாளும் மாலை ஆறுமணிக்கு தஸ்வமேத படித்துறையில் கங்கா ஆரத்தி நடக்கிறது. வேத ஸ்லோகங்கள் முழங்க வேத சாலை மாணவர்கள் மேற்கொள்ளும் இந்த பூஜையை காண அத்தனை அற்புதமாக இருக்கும்.

காசி:

காசி:

வாழ்கையின் வேறு பரிமாணங்களை புரிந்துகொள்ள காசி பயணம் மிகப்பெரிய உந்துகோளாக இருக்கும். பல நிலைகளில் இருந்தும் இங்கு வந்து வாழும் மக்கள், ஆன்மீக ஞானம் தேடி வந்திருக்கும் வெளிநாட்டவர், இறப்பை நோக்கி காத்திருக்கும் முதியவர்கள் போன்றோரிடம் இருந்து நிறையவே கற்றுக்கொள்ளலாம்.

காசி நகரை பற்றிய முழுமையான பயண தகவல்களையும், அங்கிருக்கும் தங்கும் விடுதிகள் பற்றிய விவரங்களையும் தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

வெள்ளியங்கிரி மலை:

வெள்ளியங்கிரி மலை:

தமிழகத்தின் மிகமுக்கியமான சைவ திருத்தளங்களில் ஒன்றான வெள்ளியங்கிரி மலை கோவை மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையில் இயற்கை எழில் சூழ அமைந்திருக்கிறது.

ஆண்டுதோறும் சித்திரை பௌர்ணமி தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கடுமையான மலைப்பாதையை கடந்து வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க வருகின்றனர்.

sri kanth

வெள்ளியங்கிரி மலை:

வெள்ளியங்கிரி மலை:

வெள்ளியங்கிரி மலை பிரபஞ்சத்திலேயே மிகவும் சக்திவாய்ந்த இடமாக சொல்லப்படும் இமய மலையின் மேல் அமைந்திருக்கும் கயிலாய மலைக்கு இணையாக போற்றப்படுகிறது.

கயிலாய மலையை போன்றே இந்த வெள்ளியங்கிரி மலையிலும் சிவ பெருமான் வீற்றிருப்பதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. வெள்ளியங்கிரி மலையில் ஒரு குகையினுள் சுவயம்பு லிங்கமாக காட்சி தருகிறார்.

sri kanth

வெள்ளியங்கிரி மலை:

வெள்ளியங்கிரி மலை:

இந்த வெள்ளியங்கிரி மலையில் மொத்தம் ஏழு குன்றுகள் இருக்கின்றன. இவற்றை கடந்தே நம்மால் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க முடியும்.

ரத்தினகிரி, தக்ஷின கைலாசம், பூலோக கயிலாயம் என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த மலையில் தான் தனது உமையாள் பார்வதி தேவியின் கோரிக்கைக்கு இணங்க பிரணவ தாண்டவத்தை சிவபெருமான் ஆடியதாக கூறப்படுகிறது.

sri kanth

வெள்ளியங்கிரி மலை:

வெள்ளியங்கிரி மலை:

இந்த வெள்ளியங்கிரி மலைக்கு யாத்திரை வர பிப்ரவரி முதல் ஜூன் மே மாதம் வரையிலான காலகட்டம் உகந்ததாக சொல்லப்படுகிறது. குறிப்பாக சித்திரா பௌர்ணமி பண்டிகையின் போது ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருகின்றனர்.

2 - 45 வயதுடைய பெண்கள் இந்த மலையின் மீது ஏற அனுமதியில்லை. மலையேற ஏற ஆக்சிஜன் அளவு குறையும் என்பதால் சுவாச கோளாறு இருப்பவர்கள் இந்த மலையேற்றத்தை தவிர்ப்பது நல்லது.

sri kanth

வெள்ளியங்கிரி மலை:

வெள்ளியங்கிரி மலை:

வெள்ளியங்கிரி மலையில் அதிகாலை நிகழும் சூரிய உதயம் நாம் தவற விடக்கூடாத விஷயங்களில் ஒன்றாகும். படந்திருக்கும் பனி மெல்ல விலக இளஞ்சிவப்பு நிறத்தில் சூரியன் தன் கரம் பரப்புவது பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

sri kanth

வெள்ளியங்கிரி மலை:

வெள்ளியங்கிரி மலை:

இயற்கையும் ஆன்மீகமும் உங்களுக்கு மிகவும் விருப்பமானவை என்றால் நிச்சயம் இந்த வெள்ளியங்கிரி மலைக்கு வருகை தாருங்கள். வாழ்கையில் என்றென்றைக்கும் மறக்க முடியாத அனுபவமாக அது நிச்சயம் அமையும்.

Read more about: spiritual tour bihar varanasi

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more