Search
  • Follow NativePlanet
Share
» »ஒரே நாளில் ஊட்டியை சுற்றி பார்க்கணுமா? நீங்கள் பார்க்க வேண்டிய சூப்பரான இடங்கள் இவைகள் தான்

ஒரே நாளில் ஊட்டியை சுற்றி பார்க்கணுமா? நீங்கள் பார்க்க வேண்டிய சூப்பரான இடங்கள் இவைகள் தான்

நீலகிரி மலை, குறிஞ்சி மலைகளால் சூழப்பட்ட நகரம் ஊட்டி. இந்தியாவின் மிக அழகான மலை பிரதேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. இதன் மலைப்பாறைகள், பசுமைச்சிறந்த தேயிலை தோட்டங்கள் மற்றும் தென்றல் வீசும் குளிர் காலநிலை இதற்கு ஒரு தனித்துவத்தை அளிக்கின்றன. ஒரே நாளில் ஊட்டிக்கு போய் சுற்றி பார்த்து விட்டு வர வேண்டும் என்றால், நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய சூப்பரான இடங்களை குறிச்சு வச்சுக்கோங்க.

Hills

தாவரவியல் பூங்கா (Botanical Garden)

1857-ல் நிறுவப்பட்ட Botanical Garden, ஊட்டியின் முக்கியமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடங்களில் ஒன்றாகும். மணம் கமழும் மலர்ப்பூக்கள்
,உயரமான மரங்கள், அரிய வகை மலர்கள் மற்றும் 650க்கும் மேற்பட்ட தாவர இனங்கள் கொண்ட அமைதியான சோலையாகும்.

ஊட்டி ஏரி

பள்ளத்தாக்குகளால் சூழப்பட்ட ஊட்டி ஏரி, பனிமயமான நீர் மேற்பரப்பிற்கு பிரபலமானது. இங்கு படகு சவாரி செய்வது, நீரில் பயணித்தபடியே மலைப்பிரதேசத்தை ரசிப்பது உங்களின் ஊட்டி டிரிப்பை வேற லெவலுக்கு கொண்டு செல்லும்.

தொட்டபெட்டா

மலை நகரங்களில் ஒன்றாக விளங்கும் தொட்டபெட்டா, ஊட்டியின் மிக உயர்ந்த சிகரமாகும். இங்கிருந்து நீங்கள் அழகான பசுமை நிறைந்த பள்ளத்தாக்குகளை காணலாம். மழை பொழியும் நேரங்களில், மேகங்கள் தங்களை உங்கள் அருகில் வந்து தொட்டுவிட்டுச் செல்லும் வண்ணம் தோன்றும். இங்கிருந்து மொத்த ஊட்டியின் அழகையும் உங்களால் கண்டு ரசிக்க முடியும்.

தேயிலை தோட்டங்கள்

ஊட்டியின் தேயிலை உற்பத்தியின் வரலாறு மற்றும் தேயிலை தோட்டங்களை பற்றி அறிந்து கொள்ள தேயிலை அருங்காட்சியத்திற்கு சென்று பார்வையிடலாம். இந்த அருங்காட்சியகம் தேநீர் தயாரிக்கும் செயல் முறைகளை விளக்குவதுடன், தேநீர் சுவைகளையும் வழங்குகிறது.

ஊட்டி ரோஜா தோட்டம்

இது இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் அழகான ரோஜா தோட்டங்களில் ஒன்றாகும். இது நீலகிரி மலையின் பசுமை சூழலில் அமைந்துள்ளதால், இங்கு வரும் பயணிகள் பலவிதமான வண்ணமயமான ரோஜாக்களை ரசிக்கலாம். உலக ரோஜா சங்கம் (World Federation of Rose Societies) ஊட்டி ரோஜா தோட்டத்திற்கு "Garden of Excellence" விருதினை வழங்கியுள்ளது. இது இந்தியாவின் மிகச்சிறந்த ரோஜா தோட்டங்களில் ஒன்றாக இது விளங்க காரணமாகும்.

சேரிங் கிராஸ் (Charing Cross)

சேரிங் கிராஸ் என்பது ஊட்டியின் மையப் பகுதியாக விளங்கும் ஒரு முக்கியமான வணிக மையம் மற்றும் சுற்றுலா தலமாக கருதப்படுகிறது.இது வளமான வரலாறு, ஷாப்பிங் செய்து உள்ளூர் பொருட்களை வாங்கவும்,சிறந்த உணவகங்களில் உள்ளூர் சிற்றுண்டிகளை உண்டு மகிழவும் ஏற்ற இடமாகும். மேலும் ஊட்டியின் சிறப்பு பொருட்கள், கைத்தறி வேலைப்பாடுகள், தேயிலை, தேன், வீட்டிலேயே தயாரிக்கப்படும் சாக்லேட்டுகள், வண்ணமயமான வண்ணக் குடைகள் மற்றும் வனத்திலிருந்து கிடைக்கும் அரிய பொருட்களை வாங்கலாம்.

More News

    Read more about: ooty tamil nadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+