Search
  • Follow NativePlanet
Share
» »வருகின்ற வார இறுதியில் இந்த இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமே – சூப்பரான சுற்றுலாத் தலங்கள்!

வருகின்ற வார இறுதியில் இந்த இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமே – சூப்பரான சுற்றுலாத் தலங்கள்!

சுதந்திர தினம் 2023 வருவதையொட்டி பலரும் நீண்ட வார இறுதிக்காக பல்வேறு சுற்றுலாப் பயணங்களை ஏற்கனவே பிளான் செய்து விட்டனர். ஆனால் நீங்கள் எந்த பிளானும் இல்லாமல் இருக்கிறீர்கள் என்றால் கவலை வேண்டாம், உங்கள் நகருக்கே அருகே அமைந்துள்ள சூப்பரான ஸ்பாட்டுகளுக்கு உடனடி சுற்றுலா செல்லலாம்!

1

சென்னை மக்கள் இந்த இடங்களுக்கு செல்லலாம்

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இருந்து மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் சுலபமாக செல்லும் வசதி உண்டு. சென்னை விமானம், ரயில் மற்றும் பேருந்து மூலம் நாட்டின் முக்கிய நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று நாட்களில் நீங்கள் கீழ்க்கண்ட இடங்களுக்கு தாராளமாக சுற்றுலா செல்லலாம்.

1. பிரஞ்சு கலாச்சாரம், பலவகை கஃபேக்கள், வண்ணமயமான ஷாப்பிங், கண்கவர் கடற்கரைகள், அழகிய ஆரோவில் அமைந்துள்ள புதுச்சேரி.

2. இரவு வாழ்க்கை, ஷாப்பிங், மால்கள், தியேட்டர்கள், பூங்காக்கள் மற்றும் எண்ணற்ற பொழுதுபோக்குகள் நிறைந்த பெங்களூர்.

3. கிளியூர் நீர்வீழ்ச்சி, லேடி சீட், பட்டுப் பண்ணை, ரோஜா பூங்கா, மான் பூங்கா, கரடிகள் குகை, கொட்டச்சேடு தேக்கு காடு அமைந்த ஏற்காடு.

4. பழத்தோட்டங்கள், ரோஜா தோட்டங்கள் மற்றும் பசுமையான பள்ளத்தாக்கு ஆகியவற்றால் சூழப்பட்ட ஏலகிரி.

5. புலிகாட் ஏரி மற்றும் நெலப்பட்டு பறவைகள் சரணாலயம் போன்ற சுவாரஸ்யமான இடங்கள் நிறைந்த நெல்லூர்.

2

கோயம்பத்தூர் மக்களுக்கான இடங்கள்

மேற்கு தொடர்ச்சி மலைகளின் சாரலில் நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்துள்ள கோயம்புத்தூர் தென்னிந்தியாவின் முக்கியமான மற்றும் மிக அழகான நகரமாகும். நீங்கள் கோயம்புத்தூரில் வசிக்கிறீர்கள் அல்லது கோயம்புத்தூரில் இருந்து இந்த வார இறுதிப் பயணத்தைத் திட்டமிடுகிறீர்களானால் கீழ்க்கண்ட இடங்களுக்கு செல்லலாம்.

1. சிம்ஸ் பார்க், லாம்ப்ஸ் ராக், ஹை ஃபீல்ட் டீ எஸ்டேட் அமைந்த அழகிய குன்னூர்.

2. மலம்புழா அணை, பாலக்காடு கோட்டை, பேண்டஸி பூங்கா மற்றும் பல இயற்கை பொக்கிஷங்கள் நிறைந்த பாலக்காடு.

3. அரண்மனைகள், பல வண்ண பூங்காக்கள் நிறைந்த கலாச்சாரமும், வரலாறும் அடங்கிய மைசூர் நகரம்.

4. ஏரிகள், ரோஸ் கார்டன்கள், தாவரவியல் பூங்காக்கள், மௌண்டெயின் ரயில்வே கொண்ட மலைகளின் ராணியான ஊட்டி.

5. பாணாசுர மலை, செம்ப்ரா, எடக்கல் குகைகள் மற்றும் பல நீர்வீழ்ச்சிகள் சூழ்ந்த வயநாடு.

3

திருச்சி மக்களுக்கான இடங்கள்

பல்வேறு கோவில்கள், தேவாலயங்கள், கோட்டைகள் நிறைந்த திருச்சியே ஒரு அழகிய சுற்றுலாத் தலமாகும். திருச்சியில் சொந்த விமான நிலையமும், ரயில் நிலையமும் உள்ளது. மாநிலத்தின் முக்கிய நகரங்களுடன் தொடர்புடைய பேருந்து நிலையமும் உள்ளது. நீங்கள் திருச்சியில் இருந்தால் இந்த வார இறுதியில் கீழ்க்கண்ட இடங்களுக்கு சுற்றுலா செல்லுங்கள்.

1. தமிழர் பெருமையான பிரகதீஸ்வரர் கோயில், சிவகங்கைத் தோட்டம், அரச மாளிகை, நாயக் தர்பார் ஹால், பல அருங்காட்சியகங்கள் கொண்ட தஞ்சாவூர்.

2. ஆதி கும்பேஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், ராமசுவாமி கோவில், சக்ரபாணி கோவில், நாகேஸ்வரன் கோவில், பட்டீஸ்வரம் கோவில், ஐராவதேஸ்வரர் கோவில், சுவாமிமலை ஆகியவை அடங்கிய கும்பகோணம்.

3. கொல்லி மலை, தாவரவியல் பூங்கா, நீர்வீழ்ச்சிகள் மற்றும் பல கோவில்கள் நிறைந்த நாமக்கல்.

4. ஏரிகள், சிகரங்கள், நீர்வீழ்ச்சிகள், ஹேர் பின் பெண்டுகள் நிறைந்த மலைகளின் இளவரசியான கொடைக்கானல்.

4

மதுரை மக்கள் சுற்றுலா செல்ல வேண்டிய இடங்கள்

1. மதுரை நம்பமுடியாத சமூக-கலாச்சார பாரம்பரியத்தை கொண்டுள்ளது. மதுரை விமானம், ரயில் மற்றும் பேருந்து மூலம் நாட்டின் முக்கிய நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. நீங்கள் மதுரையில் இருந்தால் இந்த வார இறுதியை கீழ்க்கண்ட இடங்களில் செலவிடலாம்.

2. ஜீப் சவாரிகள், வனவிலங்கு சஃபாரி, தோட்ட நடைகள், மூங்கில் ராஃப்டிங், படகு சவாரி கொண்ட குமுளி.

3. வனவிலங்கு சஃபாரி, முகாம், மலையேற்றம், படகு சவாரி, ஷாப்பிங் செய்வதற்கு ஏற்ற தேக்கடி.

4. கொழுக்குமலை, லக்கம் நீர்வீழ்ச்சி, குந்தலா ஏரி, கார்மேலகிரி யானைகள் பூங்கா மற்றும் பிற ஈர்ப்புகள் அடங்கிய மூணார்.

5. அணைகள், ட்ரெக்கிங், பாராகிளைடிங், பல ரிசார்ட் ஸ்டே அடங்கிய இடுக்கி.

6. பைன் காடுகள், நீர்வீழ்ச்சிகள், பசுமை பள்ளத்தாக்குகள் நிறைந்த கொடைக்கானல்.

தமிழ்நாட்டின் பெரு நகரங்களில் வசிக்கும் நீங்கள், எங்கு செல்லலாம் என்று தேடிக் கொண்டிருக்காமல், உடனே நண்பர்களுடன் அல்லது குடும்பத்தினருடன் மேற்க்கண்ட இடங்களில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தேடுத்து ஒரு சிறு சுற்றுலா சென்றுவிட்டு வாருங்கள்.

More News

Read more about: travel guide tamil nadu
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+