Search
  • Follow NativePlanet
Share
» »டிக்கெட் இல்லாத பயணிகளிடம் அபராதம் விதித்து 300 கோடி ஈட்டிய மத்திய ரயில்வே!

டிக்கெட் இல்லாத பயணிகளிடம் அபராதம் விதித்து 300 கோடி ஈட்டிய மத்திய ரயில்வே!

இந்தியாவில் உள்ள போக்குவரத்து முறைகளிலேயே கட்டணம் குறைவாக இருப்பது ரயில் போக்குவரத்தில் தான். ஆனால் அதிலும் கூட பலர் டிக்கெட் எடுக்காமல் செல்வதை பழக்கமாக வைத்துள்ளனர். அப்படி செய்வது சட்டப்படி குற்றமாகும், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் பயணிகள் இந்திய இரயில்வேயிற்கு அபராதம் செலுத்த நேரிடும். இங்கு அது போல தான் 2022-23 நிதியாண்டில் 46.32 லட்சம் வழக்குகளுக்கு அபராதம் விதித்ததன் மூலம் ரூ.300 கோடிக்கு மேல் வருவாயுடன் டிக்கெட் சரிபார்ப்பு செயல்திறனில் மத்திய ரயில்வே சாதனை படைத்துள்ளது. வியப்பாக இருக்கிறது அல்லவா?

 indian railways, irctc

300 கோடி ரூபாய் அபராதம்

பயணத்திற்கு முன் டிக்கெட்டுகளை வாங்க வேண்டும் என்று அரசாங்கம் பலமுறை மக்களுக்கு நினைவூட்டுகிறது, ஆனால் பலர் அவற்றைப் புரிந்துகொண்டு பயணிக்கத் தவறுகிறார்கள். இதனால் அவர்கள் டிக்கெட் சேகரிப்பாளர்களுக்கு அபராதம் செலுத்துகிறார்கள். இந்த 2022-23 நிதியாண்டில், டிக்கெட் இல்லாத பயணிகளிடம் இருந்து அபராதம் வசூலிப்பதில் மத்திய ரயில்வே அனைத்து மண்டல ரயில்வேகளையும் விஞ்சியுள்ளது. இந்த ஆண்டு டிக்கெட் இல்லாத பயணிகளிடம் இருந்து 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளனர்.

 indian railways, irctc

வரலாற்றிலேயே அதிக தொகை

2022-23 நிதியாண்டில், டிக்கெட் இல்லாத பயணிகளிடமிருந்து 300 கோடி வசூலித்து மத்திய ரயில்வே சாதனை படைத்துள்ளது. டிக்கெட்டுகளை சரிபார்த்ததில் சுமார் 46.32 லட்சம் டிக்கெட் இல்லாத பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதன் மூலம் இந்த ஒரு வருடத்தில் மட்டும் இத்தகைய பெரிய தொகையை மத்திய ரயில்வே ஈட்டியுள்ளது. மத்திய ரயில்வேயில் இருந்து 20க்கும் மேற்பட்ட டிக்கெட் பரிசோதகர்கள் தனித்தனியாக ரூ.1 கோடிக்கும் அதிகமான தொகைக்கு அபராத ரசீது செய்துள்ளனர்.

 indian railways, irctc

எப்பொழுதும் முதலிடம் பிடிக்கும் மத்திய ரயில்வே

ஒரு மண்டல ரயில்வே இவ்வளவு பெரிய சாதனையை எட்டுவது இதுவே முதல் முறை என்று அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் மும்பை பிரிவு மட்டும் ரூ.100 கோடியை எட்டியது. கடந்த ஆண்டு இதுபோன்ற பயணிகளின் மூலம் மத்திய ரயில்வேக்கு ரூ.214.41 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த எண்ணிக்கையுடன், மற்ற அனைத்து மண்டல ரயில்வேகளிலும் இதுவே முதலிடத்தைப் பிடித்தது. அதே போலவே இந்த ஆண்டும் மத்திய ரயில்வே முதலிடத்தை பிடித்துள்ளது.

 indian railways, irctc

2022-23 ஆண்டின் பகுதி வாரியாக அபராதம்

மும்பை பிரிவு 19.57 டிக்கெட் இல்லாத பயணிகளிடமிருந்து ரூ.108.25 கோடியை ஈட்டியுள்ளது. புனே பிரிவு டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த 3.36 லட்சம் பயணிகளின் மொத்த வருமானம் ரூ.24.27 கோடி ஈட்டியுள்ளது. 9.06 லட்சத்துக்கும் அதிகமான பயணிகளிடம் டிக்கெட் இல்லாததற்காக அபராதம் வசூலித்ததன் மூலம் புசாவல் பிரிவு ரூ.70.02 கோடி வருவாய் ஈட்டியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 6.16 லட்சம் பயணிகளுக்கு அபராதம் விதித்து நாக்பூர் கோட்ட ரயில்வே ரூ.39.70 கோடி ஈட்டியுள்ளது.

 indian railways, irctc

டிக்கெட் இல்லாத பயணம் தவறு

டிக்கெட் இல்லாத மற்றும் ஒழுங்கற்ற பயணத்தைத் தடுக்க, மத்திய ரயில்வே அதன் அனைத்துப் பிரிவுகளிலும் புறநகர், அஞ்சல் விரைவு, பயணிகள் சேவைகள் மற்றும் சிறப்பு ரயில்களில் விரிவான டிக்கெட் சோதனையை நடத்துகிறது. இது அனைத்து முறையான ரயில் பயனர்களுக்கும் வசதியான பயணம் மற்றும் சிறந்த சேவைகளை உறுதி செய்கிறது. எத்தனை இருந்தாலும் டிக்கெட் இல்லாமல் ஓசியில் பயணம் செய்ய பலர் முயலுகின்றனர்.

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+