Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவை அலறவிட்ட கோட்டை... இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் நிஜப் பேய்!

இந்தியாவை அலறவிட்ட கோட்டை... இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் நிஜப் பேய்!

இந்தியாவை அலறவிட்ட கோட்டை... இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் நிஜப் பேய்!

By IamUD

நவராத்திரியின் முதல் நான்கு நாட்களில் இரவில் இந்த கோட்டைக்கு அருகில் தென்படும் பேய் உங்களை நாளை வா என்று அழைக்குமாம். இஅமுகு படத்தில் வந்தது போன்ற பேயா என்கிறீர்களா? அதே பேயல்ல.. ஆனால் கிட்டத்தட்ட அதுமாதிரியான பேய் வாழ்ந்து வரும் கோட்டையைத் தான் இப்போது பாக்கப்போகிறோம். சாந்தேரி.. அழகிய சுற்றுலா கிராமம். அருகாமையில் அழகிய சுற்றுலா அம்சங்கள் கொண்ட பல இடங்களையும், ஆன்மீகத் தலங்களையும் கொண்ட இடம் இது. ஆனால் இரவில்....?

வாருங்கள் தெரிந்து கொள்வோம் இந்தியாவை அலறவிட்ட கோட்டை பற்றியும், அதன் அருகாமையிலுள்ள இடங்கள் பற்றியும்.

எங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் பாலோ செய்யுங்கள்.

எங்கேயுள்ளது?

எங்கேயுள்ளது?

பார்ப்பவர்களை பயமுறுத்தும் கன்னிப் பேய் இருக்கும் கோட்டைக்கு சாந்தேரிக் கோட்டை என்று பெயர். இது அமைந்துள்ள சாந்தேரி எனும் ஊரின் பெயராலேயே இது அழைக்கப்படுகிறது. வருடத்தின் மற்ற அனைத்து நாட்களிலும் அமைதியாகத்தான் இருக்கிறது இந்த கோட்டை. சுற்றுலாப் பிரியர்களும் கோட்டை பற்றி தெரிந்துகொள்ள ஆர்முடையவர்களும் அதிக அளவில் செல்லும் இந்த கோட்டை மத்தியப் பிரதேச மாநிலம், போபால் அருகே அமைந்துள்ளது.

MAYANK789

டிரெக்கிங்

டிரெக்கிங்

டிரெக்கிங் எனப்படும் மலையேற்றுப் பயணம் நிச்சயம் மிகச் சிறப்பானதாகவும், பொழுது போக்கும், சாகசமும் நிறைந்ததாகவும் அமையும். ஆனால் அந்த நான்கு நாட்களில் மட்டும் வேண்டாம். ஸ்திரி உங்களை அழைக்கக்கூடும். ஆம்.. அந்த கன்னிப் பேயின் பெயர் தான் ஸ்திரி.

Monish.syed.88

 எப்படி செல்வது

எப்படி செல்வது

இந்த கோட்டையை அடைவதற்கு இரண்டு வழித்தடங்கள் உள்ளன. இரண்டையும் இங்கே குறிப்பிடுகிறோம். உங்களுக்கு வசதியானதைப் பொறுத்து நீங்கள் பயணம் செய்யுங்கள்.

Sgupta2k2

முதல் வழித்தடம்

முதல் வழித்தடம்


கிலா கோத்தி எனப்படும் பகுதியிலிருந்து செல்லும் இந்த வழித்தடத்தில் நீங்கள் எளிமையாக கோட்டையை அடையலாம். இது கோட்டையின் ஒரு பக்கத்தில் அமைந்திருக்கும் வழித்தடமாகும். மற்றொரு வழித்தடமும் உள்ளது. அது சற்று சிரமமானது.

Itsmalay

இரண்டாவது வழித்தடம்

இரண்டாவது வழித்தடம்

செல்லும் தூரம் குறைவு என்றாலும், செல்லும் பாதை கொஞ்சம் கடினமானது. மேலும் இங்கு வண்டிகளை நிறுத்தவும் போதுமான அளவுக்கு வசதிகள் இல்லை. அதிலும், இந்த பகுதியில் வயதானவர்கள், குழந்தைகள் நடப்பதற்கு சிரமமப்படுவார்கள். முதன்மை வழியான கூனி தார்வாசா என்பதே அது.

LRBurdak

பயமுறுத்தும் கன்னிப் பேய்

பயமுறுத்தும் கன்னிப் பேய்

அழகிய முகம் கொண்டு, உங்களை அழைக்கும் அந்த பேய் கல் ஆனே என்று அழைப்பதாக கூறுகிறார்கள் மக்கள். அப்படி என்றால் நாளை வா என்பது பொருள். இந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு படங்கள் கூட எடுக்கப்பட்டிருக்கின்றன. கன்னிப் பேயின் அழைப்பை ஏற்று நீங்கள் சென்றால் அவ்வளவுதான் நீங்களும் பேயாகிவிடுவீர்கள்.

காணத் தகுந்த நேரம்

காணத் தகுந்த நேரம்

கவலையை விடுங்கள். சுற்றிப் பார்க்க எக்கச் சக்க இடங்கள் இருக்கின்றன இந்த பகுதியில்... ஆனால் எப்போது செல்லவேண்டும் என்பதே முக்கியம். இங்கு மிகவும் சிறப்பான காலநிலை மதிய வெய்யிலுக்கு பிந்தைய நேரமாகும். பொழுது சாயும் வேளையில்தான் இந்த கோட்டை மிகவும் ரம்மியமாக காட்சி தரும்.

புகைப்படமும் இன்ஸ்டாகிராமும்

புகைப்படமும் இன்ஸ்டாகிராமும்

உங்களுக்கு புகைப்படம் எடுக்க மிக ஆர்வம் இருக்கிறதுதானே... இயற்கையிலோ அல்லது இயற்கையின் நடுவிலோ உங்களை அழகுபடுத்தி காட்டிக்கொள்ள உங்கள் எண்ணங்களை சிறகடிக்க, உங்களை நீங்களே ரசிக்க புகைப்படமெடுத்துக்கொண்டு இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி நண்பர்களுடன் கலந்துரையாட வசதியான பொழுது இந்த மாலைப் பொழுதுதான்.

பின்புறத்தில் மங்கும் சூரிய வெளிச்சத்தில் தங்க ஒளியில் கோட்டையின் முன்புறம் நீங்கள். அழகிய புகைப்படங்களை எடுத்து பதிவேற்றுங்கள்.

 மக்கள் என்ன சொல்கிறார்கள்?

மக்கள் என்ன சொல்கிறார்கள்?

71 மீ உயரத்தில் மலையில் அமைந்திருக்கும் இந்த இடத்தை சந்தேரியின் கிரீடம் என்று சொன்னாலும் தப்பில்லை. அவ்வளவு அழகு. இங்கு சில அழிந்துவிட்டன மிச்சமிருப்பவை நாவ்குந்தா மஹால், மசூதி, கூனி தர்வாசா முதலியன மட்டுமே. ஜோகர் நினைவுச் சின்னங்களும், இசை கலைஞரான பைஜூ பாவாரா என்பவரின் சாமாராக் நினைவு இடமும் இங்கு சிறப்பானதாகும்.

 உலகப் புகழ் பெற்ற கைத்தறி

உலகப் புகழ் பெற்ற கைத்தறி

வழக்கமாக ஒரு இடத்துக்கு பயணப்பட்டால், வெறுமனே சுற்றுலா மட்டுமல்ல, உணவுகளும், நினைவுப் பொருள்களையும் அனுபவிப்பது பார்வையிடுவது வழக்கம்தானே. அப்படி சாந்தேரியில் என்ன சிறப்பு?

கைத்தறி நெசவில் நெய்யப்பட்ட அழகிய சேலைகள் உலகம் முழுவதும் பிரபலம்.

மினார் இல்லாத இந்தியாவின் ஒரே மசூதி இதுதான்.

மகாபாரதத்தின் கதாபாத்திரமான சிசுபாலன் என்பவர் இந்த பகுதியை ஆண்டு வந்துள்ளார்.

சமண மதத்தின் பெரும்பான்மை நினைவுச் சின்னங்களைக் கொண்ட பகுதி இது.

இங்கு 1200 படிக் கிணறுகள் இருந்தனவாம்.

 காணவேண்டிய இடங்கள்

காணவேண்டிய இடங்கள்

பாதல் மஹால், இட்கா மசூதி, பாட்டிசி பவோலி, கோஷாக் மஹால், பரமேஸ்வர் தால், புத்தி சந்தேரி, ஜமா மசூதி, சந்தேரி கோட்டை, சந்தேரி அருங்காட்சியகம், ஷேஜாடி கா ரோஜா என நிறைய இடங்கள் காணவேண்டிய சுற்றுலா அம்சங்களாக உள்ளன.

விமான பயண உதவிகளுக்கு

விமான பயண உதவிகளுக்கு

அருகாமையில் இருக்கும் விமான நிலையங்கள் - குவாலியர், போபால், ஹோல்கர் மற்றும் இந்தூர்,

இங்கிருந்து டெல்லி, மும்பை, வாரணாசி, லக்னோ, காத்மண்டு, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா.

விமான பயண புக்கிங்குக்கு நமது இணைய தளத்தின் முகப்பு பக்கத்துக்கு சென்று தேடுக.

 ரயில் மூலம் பயணிக்க

ரயில் மூலம் பயணிக்க

லலித்பூர் வெறும் 36 கிமீ தொலைவில் இருக்கும் ரயில் நிலையம் ஆகும். 38 கிமீ தொலைவில் முங்கோலி மற்றும் 46 கிமீ தொலைவில் அஷோக் நகர் ரயில் நிலையங்கள் உள்ளன.

ரயில் புக்கிங்குக்கு நமது இணைய தளத்தின் முகப்பு பக்கத்துக்கு சென்று தேடுக

விழாக்கள்

விழாக்கள்

ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் ஜக்கேஸ்வரி தேவி திருவிழா இந்நகரத்திற்கு பெருமளவு சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் திருவிழாவாகும். மேலும், சாந்தேரி நகரம் அதன் கைவினைப் பொருள் தொழில்களுக்காகவும், மிகவும் தரமான, தங்க ஜரிகை கொண்ட சேலைகளுக்காகவும் புகழ் பெற்ற இடமாகும்.

 அடையும் வழி முறைகள்

அடையும் வழி முறைகள்

அருகிலுள்ள நகரங்களிலிருந்து டாக்ஸிகள் மற்றும் பேருந்துகள் வழியாக சாந்தேரி நகரத்தை அடைந்திட முடியும். சாந்தேரியில் சுற்றுலாப் பயணிகளுக்கேற்ற வகையில் சர்க்யூட் ஹெளஸ், டாக் பங்களா மற்றும் ரெஸ்ட் ஹெளஸ் போன்ற பல்வேறு விடுதிகள் உள்ளன. சாந்தேரிக்கு குளிர்காலங்களில் வருவது மிகச்சிறந்த சுற்றுலா அனுபவத்தைத் தரும்.

All Photos are taken from

mptourism.com

Read more about: travel fort
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X