Search
  • Follow NativePlanet
Share
» »நடைமேடையை விட பெரிதாக இருக்கும் சென்னை எக்ஸ்பிரஸ் – ரயில் ஏறமுடியாமல் பயணிகள் அவதி!

நடைமேடையை விட பெரிதாக இருக்கும் சென்னை எக்ஸ்பிரஸ் – ரயில் ஏறமுடியாமல் பயணிகள் அவதி!

குறைந்த கட்டணத்தில் வசதியான பயணம் என பெரும்பாலான மக்கள் உபயோகப்படுத்தும் சேவையாக இருக்கிறது - ரயில் போக்குவரத்து! இந்நிலையில் நடைமேடையில் (Platform) நின்று ரயில் ஏறுவதே பெரிய சிக்கலாக இருந்தால் என்ன செய்வது? ஆம், சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் நடைமேடையை விட பெரிதாக இருப்பதால் கடைசி பெட்டிகளில் ஏற செல்லும் பயணிகள் இன்னலுக்கு ஆளாகுகின்றனர். சுமார் 2 வாரங்களாக இந்த பிரச்சினை பெறும் பேசுப்பொருளாக மாறியுள்ளது! எப்போது இந்த பிரச்சினை முடிவுக்கு வரும் என்று தெரியவில்லை!

chennaiexpresscover1

சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸில் வெடிக்கும் பிரச்சினை

ஒரு ரயில் திட்டமிடப்பட்ட நடைமேடையை விட நீளமாக இருந்தால் என்ன நடக்கும் என்று எப்போதாவது கற்பனை செய்து பார்த்தது உண்டா? குறுகலான ஸ்டேஷனுக்குள் ரயில் எப்படி நிற்கும், பயணிகள் எப்படி ஏறுவார்கள் அல்லது இறங்குவார்கள்? இது ஒரு உண்மையான பிரச்சனை மற்றும் இது சுமார் 2 வாரங்களாக நடக்கிறது. கடந்த சில நாட்களாக, CSMT-சென்னை எக்ஸ்பிரஸ் (ரயில் எண். 22157) சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸில் குறிப்பிட்ட நடைமேடையை விட ரயில் நீண்டதாக இருப்பதால், பயணிகள் ரயில் ஏறுவதில் சில பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். விந்தையாக இருக்கிறது அல்லவா?

நடைமேடையை விட பெரிதாக இருக்கும் சென்னை எக்ஸ்பிரஸ்

சென்னை எக்ஸ்பிரஸின் மாற்றுத்திறனாளி பயணிகளுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டி, சிஎஸ்எம்டியில் பிளாட்பார்ம் வரம்புக்கு அப்பால் நிறுத்தப்படுவதால், அதில் ஏற விரும்புவோருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிரதீக் எஸ்.மிஸ்ரா என்ற ஆர்வலர், இந்த ரயிலில் பயணிக்கும் பயணிகளின் பிரச்னை குறித்து பேசினார். இந்த ரயிலின் பயணம் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் பிளாட்பார்ம் 9ல் இருந்து தொடங்குகிறது. மேலும் இந்த ரயிலின் ஒரு பெட்டி நடைமேடைக்கு வெளியே நின்றுகொண்டிருப்பதைக் காணலாம்.

chennaiexpress

இணையத்தில் வைரலாகிய வீடியோ

ரயில் பெட்டியை அணுகுவது எவ்வளவு கடினம் என்பதை அவர் வெளியிட்ட வீடியோ மூலம் ஒருவர் தெரிந்து கொள்ளலாம். பிளாட்பாரத்தின் ஓரத்தில் இருந்து உதவியோடு நடக்கவே முடியாத மூத்த குடிமகன், சிக்னல் போஸ்ட்களை கடந்தும் நடந்து சென்று, ரயில் பாதை மட்டத்தில் இருந்து மிகவும் சிரமப்பட்டு கோச்சினுள் ஏறுவதை வீடியோ காட்டுகிறது. இதில் மிக பெரிய வருத்தம் என்னவென்றால் இந்த நீளமான ரயிலின் கடைசி பெட்டி மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி, அதில் ஏற அவர்கள் பெறும் இன்னல்களுக்கு ஆளாகுவது வருத்தமாக இருக்கிறது.

சிரமத்திற்கு உள்ளாகும் மாற்றுத்திறனாளிகள்

ரயில்களை பிடிக்க முடியாமல் மாற்றுத்திறனாளிகள் சிரமப்படுவதால், நாளுக்கு நாள் பிரச்னை அதிகரித்து வருகிறது. CSMT-சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான நடைமேடையை மாற்றுவது இப்போது அவசரம் என்று பிரதீக் எஸ். மிஸ்ரா மற்றும் பல சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். நடைமேடைக்கு அப்பால் நிற்கும் ரயிலுக்குள் நுழைவது எவருக்கும் மிகவும் கடினமாக இருக்கும். உடல் குறைபாடுகள் உள்ள ஒருவர் அதைச் செய்ய வேண்டியிருக்கும் போது சிரமம் அதிகமாகிறது.

chennaiexpress

விரைவில் சீரமைக்கப்படும் நடைமேடைகள்

மத்திய ரயில்வேயின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், நடைமேடைகளை நீட்டிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். சிஎஸ்எம்டியில் நடைமேடைகளை நீட்டிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 24 பெட்டிகள் வரை இடமளிக்கும் வகையில் தளங்கள் கட்டங்களாக நீட்டிக்கப்படும். "முற்றத்தை சீரமைக்கும் பணியும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிளாட்ஃபார்ம் எண். 10 மற்றும் 11 விரிவாக்கம் தொடர்பான கட்டம்-I இன் பணிகள் ஓராண்டுக்கு முன் தொடங்கப்பட்டன. பிளாட்ஃபார்ம் எண். 12 மற்றும் 13 கட்டம்-II இல் நீட்டிக்கப்பட்டு, 2024 இல் முடிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என நம்பப்படுகிறது.

நீண்ட ரயில்களுக்கு ஏற்றவாறு கட்டப்படாத நடைமேடையில் இந்த ரயில் ஏன் நிற்கிறது? நிலைய இயக்குநரின் கடமை/பொறுப்பு என்ன? என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+