Search
  • Follow NativePlanet
Share
» » இந்தியாவிலேயே நீளமான ஸ்கைவாக் பிரிட்ஜ் நம்ம திநகரில் - தி.நகர் மார்க்கெட்டில் இருந்து ரயில் நிலையம் வரை!

இந்தியாவிலேயே நீளமான ஸ்கைவாக் பிரிட்ஜ் நம்ம திநகரில் - தி.நகர் மார்க்கெட்டில் இருந்து ரயில் நிலையம் வரை!

இனி மாம்பலம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து தி.நகர் பஸ் ஸ்டாண்ட்டிற்கு மிகவும் நெரிசலான மார்கெட் வழியாக செல்ல வேண்டாம். பொது மக்களின் தேவைக்காகவே தி.நகர் பஸ் ஸ்டாண்ட்டையும் தி.நகர் ரயில்வே ஸ்டேஷனையும் இணைக்கும் புதிய ஸ்கைவாக் பாலத்தை தமிழக அரசு திறந்துள்ளது. 28.45 கோடி செலவில் சென்னை மாநகராட்சியால் கட்டப்பட்ட இந்த 570 மீட்டர் நீளம் ஸ்கைவாக் பாலம் தான் இந்தியாவிலேயே மிக நீளமான ஸ்கைவாக் பாலமாகும். மாம்பலம் ரயில் நிலையம் மற்றும் தி.நகர் பேருந்து நிலையத்தை இணைக்கும் இந்த பாலத்தில் எஸ்கலேட்டர், CCTV கேமராக்கள், ஓய்வறைகள், காவல் கட்டுப்பாட்டு அறை, கழிவறை மற்றும் லிப்ட் வசதிகள் ஆகியவை கூட இருக்கின்றனவாம்!

1

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஸ்கைவாக் பாலம்

சென்னைவாசிகளின் விருப்பமான ஷாப்பிங் தலங்களில் ஒன்றான தி.நகர் தியாகராய நகருக்கு வரும் ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையம் அமைந்துள்ள தியாகராய நகர் மேட்லி சாலை சந்திப்பு வரை ஸ்கைவாக் கட்டப்பட்டது. சென்னை மாநகராட்சியில் மேம்பாலங்களை அழகுபடுத்துதல், புதிய மேம்பாலங்கள் கட்டுதல், பூங்காக்கள் புதுப்பித்தல், நீரூற்றுகள் அமைத்தல் போன்ற நவீன உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்கும் நோக்கத்துடன் சிங்கார சென்னை 2.0 திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பல்வேறு அதிநவீன வசதிகள் அடங்கிய கட்டமைப்பு

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், இந்தியாவின் மிக நீளமான ஸ்கைவாக் மே 16 ஆம் தேதி சென்னை தி.நகரில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. 570 மீட்டர் நீளம், 4.2 மீட்டர் அகலம் கொண்ட ஸ்கைவாக் மாம்பலம் ரயில் நிலையத்தை தி-நகர் பேருந்து நிலையத்துடன் இணைக்கும். 28.45 கோடி செலவில் சென்னை மாநகராட்சியால் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் எஸ்கலேட்டர்கள், 2 பயணிகள் லிப்ட்கள் மற்றும் மாம்பலம் காவல் நிலையத்துடன் இணைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள், பொது முகவரி அமைப்பு மற்றும் ஓய்வறைகள் உள்ளன. கூடுதலாக, இதில் குப்பைத்தொட்டிகள் மற்றும் கழிப்பறை வசதிகளும் உண்டு. பொதுமக்களின் வசதிக்காக பாலம் முழுவதும் மின்விளக்குகள் எரிய வைக்கப்பட்டுள்ளது.

2

கலை மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் ஓவியங்கள்

மேம்பாலத்தின் உள் பகுதிகளில் உள்ள தூண்களில் தமிழக கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் வர்ணம் பூசப்பட்டு, படிக்கட்டுகளில் அழகிய கலை வண்ணம் தீட்டப்பட்டுள்ளன. அதேபோல், ஸ்கைவாக் அருகே உள்ள மரங்களில் வண்ணமயமான பறவைகள் வரையப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி பயணிக்கும் வகையில் இந்த பாலத்தில் சக்கர நாற்காலி வசதியும் செய்யப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான மக்களுக்கு உதவிகரமாக இருக்கிறது

ரங்கநாதன் தெரு, மேட்லி சாலை, மார்க்கெட் தெரு ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், ஸ்மார்ட் சிட்டி நிதியின் கீழ், 28.45 கோடி ரூபாய் செலவில், கிரேட்டர் சென்னை மாநகராட்சியால் (ஜிசிசி) கட்டப்பட்ட ஸ்கைவாக்கை தினமுள் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உபயோகித்து வருகின்றனர்.

3

பண்டிகை நாட்களில் நெரிசலை குறைக்கும் பாலம்

தென்மாவட்டங்களில் இருந்து நகருக்கு வரும் மக்கள், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் ரங்கநாதன் தெருவில் கூடுவதால், ஸ்டேஷன் மற்றும் பஸ் ஸ்டாண்டுக்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். மக்கள் நெரிசலான தெருவில் கனமான பைகளுடன் தங்கள் இடத்தை அடைய வேண்டியிருந்தது, மேலும் இந்த பிரத்யேக நடைபாதை ஸ்கைவாக் பாலம் மிகவும் உதவிகரமானதாக இருக்கும்.

More News

    Read more about: chennai tamilnadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+