Search
  • Follow NativePlanet
Share
» » சென்னையில் இன்னும் மூன்றே மாதங்களில் அழகிய மிதக்கும் உணவகம் – நீங்கள் செல்லத் தயாரா?

சென்னையில் இன்னும் மூன்றே மாதங்களில் அழகிய மிதக்கும் உணவகம் – நீங்கள் செல்லத் தயாரா?

நமது சென்னையில் வித விதமான பல உணவகங்களை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். குழந்தைகளுக்கு ஏற்ற, ஆண்களுக்கு ஏற்ற, பெண்களுக்கு என பல பல தீம்களில் உணவகங்கள் உண்டு. கொரியன் BTS ரெஸ்டாரன்ட் முதல், சைனீஸ், பிரெஞ்சு, இத்தாலியன், பர்மீஸ் வரை பல வகையான ரெஸ்டாரன்ட்கள் உண்டு. ஆனால் இப்போது சென்னைக்கு அருகில் உள்ள முட்டுக்காடு படகு குழாமில் சென்னையிலேயே முதன் முதலாக இரண்டு அடுக்கு மிதக்கும் உணவகம் துவங்கப்படவிருக்கிறது. இனி நீங்கள் உப்பங்கழிகளில் இனிமையாக பயணத்தை முடித்த உடன் இந்த அழகிய சூழலில் இருக்கும் மிதக்கும் உணவகத்தில் சுவையான உணவுகளை ருசிக்கலாம் மக்களே!

muttukadu, Tamilnadu

ECR சாலையில் மிதக்கும் உணவகம்

சென்னை ECR சாலையில் முட்டுக்காடு படகு குழாமில் இரண்டு அடுக்கு மிதக்கும் உணவகம் அமைக்கும் பணியை தமிழக சுற்றுலாத்துறை ஏற்கனவே தொடங்கியுள்ளது. அடுத்த மூன்று மாதங்களுக்குள் முட்டுக்காடு படகு இல்லத்தில் 25 அடி அகலமும் 125 அடி நீளமும் கொண்ட மிதக்கும் உணவகம் செயல்பாட்டுக்கு வந்துவிடும். ஏற்கனவே நீங்கள் வாட்டர்ஃபால் ரெஸ்டாரன்ட் மற்றும் மீன் குளங்கள் நிறைந்த ரெஸ்டாரன்ட்களுக்கு சென்று இருந்தாலும், இந்த மிதக்கும் உணவகம் உங்களுக்கு ஒரு வித புது வித அனுபவத்தைக் கொடுக்கும்.

இரண்டு அடுக்கில் பிராமாண்டமாக தயாராகும் ரெஸ்டாரன்ட்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மிதக்கும் உணவகத்தில் ஒரே நேரத்தில் 100 பேர் வரை எளிதாக உணவருந்த முடியும். படகின் கீழ்த்தளத்தில் குளிரூட்டப்பட்ட டைனிங் ஹாலும், சிறு சிறு தனி அறைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேல் தளத்தில் திறந்தவெளி ரெஸ்டாரன்ட் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மாலை வேலையில் மேல் தளத்தில் அமர்ந்துக் கொண்டு இயற்கை அழகை ரசித்தப்படியே உணவருந்தினால் எவ்வளவு உற்சாகமாக இருக்கும் அல்லவா!

muttukadu, Tamilnadu

மூன்றே மாதங்களில் துவக்கம்

படகு அமைக்கும் பணியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மார்ச் 24 அன்று தொடங்கி வைத்தார். மாநிலத்தின் முதல் மிதக்கும் உணவகமாக இது அமையும், மேலும் மூன்று மாதங்களில் இதனை கட்டி முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.இதற்கு கிடைத்த வரவேற்பின் அடிப்படையில் இத்திட்டத்தை மற்ற சுற்றுலா தலங்களுக்கும் விரிவுபடுத்துகிறோம் என்றார். சிறிய சமூக விழாக்கள் மற்றும் அரசாங்கத் துறைகளின் கூட்டங்களை நடத்துவது சிறந்ததாக இருக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

உற்சாகத்தில் இருக்கும் பொதுமக்கள்

இந்த மிதக்கும் உணவகம் தமிழகத்திலேயே முதன்மையானது. இன்னும் மூன்று மாதங்களில் இந்தபுது வகையான மிதக்கும் உணவகத்தில் பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் உணவருந்தலாம். இந்த மிதக்கும் உணவகத்தை மக்கள் வெகுவாக விரும்புவார்கள் என்று எதிர்பார்க்க்கப்படுகிறது. கூடிய விரைவில், நீங்கள் இங்கே உணவருந்தலாம், படகோட்டி செல்லலாம் மற்றும் மற்ற சாகசச் செயல்களில் ஈடுபடலாம், அதே நேரத்தில் ஏரியிலிருந்து சுற்றியுள்ள பகுதியின் பரந்த காட்சியைப் பார்த்து ரசிக்கலாம்.

muttukadu, Tamilnadu

முட்டுக்காட்டில் நீங்கள் செய்ய வேண்டியவை

சென்னைக்கும் பாண்டிச்சேரிக்கும் இடையே அமைந்திருக்கும் முட்டுக்காடு ஒரு அழகிய கிராமமாகும். உப்பங்கழிகள், பனை பள்ளங்கள், பசுமையான சூழலுக்கு மிகவும் பிரபலமான முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ஒரு படகு குழாம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த இடத்திற்கு செல்லும் போது நீங்கள் கீழக்கண்ட செயல்களில் ஈடுபடலாம்.

1. படகு சவாரி

2. கயாக்கிங்

3. கேனோயிங்

4. தக்ஷின் சித்ரா (தென்னிந்தியாவின் கலை மற்றும் கட்டிடக்கலை மாதிரிகளை சித்தரிக்கும் ஒரு இடம்)

5. MGM Dizee World

6. VGP கோல்டன் பீச் ரிசார்ட்ஸ்

More News

    Read more about: chennai muttukadu tamilnadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+