Search
  • Follow NativePlanet
Share
» »சென்னையிலிருந்து கொல்கத்தாவிற்கு உலகத்தரத்தில் புதிய நெடுஞ்சாலை – பலனடையும் பொதுமக்கள்!

சென்னையிலிருந்து கொல்கத்தாவிற்கு உலகத்தரத்தில் புதிய நெடுஞ்சாலை – பலனடையும் பொதுமக்கள்!

இந்தியா உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் கட்டமைப்புகளில் அசத்தி வருகிறது. கோல்டன் நாற்கர பாதை (Golden Quadrilateral) என்பது பெருநகரங்களான சென்னை, கொல்கத்தா, டெல்லி மற்றும் மும்பை ஆகியவற்றை இணைக்கும் சாலை பாதையாகும். அதில் சென்னையிலிருந்து கொல்கத்தாவிற்கு அமைக்கப்படும் புதிய நெடுஞ்சாலை உலகத்தர கட்டமைப்பில் தயாராகி வருகிறது. அதன் புதிய புகைப்படங்களும், தகவல்களும் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. அதனால் பொதுமக்கள் அடையும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்!

chennaitokolkataquadrilateralcorridor

பெருநகரங்களை இணைக்கும் தங்க நாற்கர பாதை

"தங்க நாற்கர பாதை" என்பது இந்தியாவில் உள்ள நெடுஞ்சாலைகளின் ஒரு முக்கியமான நெட்வொர்க் ஆகும். கொல்கத்தா-சென்னை தங்க நாற்கர வழித்தடத்தின் சண்டிகோல்-பத்ரக் பகுதிக்கான பாதையில் ஒரு பெரிய வளர்ச்சி ஏற்படவிருக்கிறது. இதனால் சென்னையிலிருந்து கொல்கத்தாவிற்கு செல்லும் வழித்தடத்தில் உள்ள அனைத்து இடங்களும் மேம்படும். அதோடு சென்னையிலிருந்து நெரிசலின்றி அருகிலுள்ள இடங்களுக்கு செல்ல முடிவதோடு இது சுற்றுலாவையும் மேம்படுத்தும்.

நான்கு மாநிலங்கள் வழியாக நெடுஞ்சாலை

கொல்கத்தா-சென்னை தங்க நாற்கர பாதையின் சண்டிகோல்-பத்ரக் பகுதி தற்போது ஆறு வழிச்சாலையாக மேம்படுத்தப்படவிருக்கிறது. இந்த சாலை முழு நாட்டிலேயே மிக நீளமான நெடுஞ்சாலை நெட்வொர்க் ஆக இருக்குமாம். இந்த முக்கியமான சாலை நெட்வொர்க் ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் உட்பட நான்கு மாநிலங்கள் வழியாக செல்லும். ஒடிசாவின் கடலோரப் பகுதிகளுடன் இணைப்பை உருவாக்கும் முதன்மையான தமனி நெடுஞ்சாலையாக இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

chennaitokolkataquadrilateralcorridor1

முழுவீச்சில் நடைபெறும் கட்டுமானம்

கொல்கத்தா-சென்னை தங்க நாற்கர பாதையின் சண்டிகோல்-பத்ரக் பகுதியின் தற்போதைய புதுப்பிப்புகளை நிதின் கட்கரி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பகிர்ந்து கொண்டார். நெடுஞ்சாலைகளின் நெட்வொர்க்கின் இந்தப் பகுதி தற்போது கட்டுமானத்தில் உள்ளது. தங்க நாற்கர சாலைகளின் கட்டுமானம் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனவும் அவர் கூறினார். பல காரணங்களுக்காக மறுவடிவமைப்பு நிச்சயமாக மிகவும் உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

ஊக்குவிக்கப்படும் சுற்றுலா

இந்த சாலை மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு இடமளிக்க உதவுகிறது. இது விவசாய பொருட்கள், உற்பத்தி பொருட்கள், தொழில்துறை பொருட்கள் மற்றும் உள்ளூர் சுரங்க போக்குவரத்து ஆகியவற்றை எடுத்துச் செல்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும். போக்குவரத்துக்கு மட்டுமல்ல, அரதடி அகண்டல்மணி கோயில், பத்ரகாளி கோயில், சந்த்பாலி நதி துறைமுகம், தாம்நகர், பத்ரக் மாவட்டத்தின் தாம்ரா துறைமுகம், மா பிரஜா கோயில் மற்றும் ஸ்வேதா பராஹா போன்ற பல சுற்றுலாத் தலங்களுடன் இந்த சாலை இணைக்கப்பட்டுள்ளது.

chennaitokolkataquadrilateralcorridor1

உலகத்தர கட்டுமானம்

தங்க நாற்கர பாதை 12 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் வழியாக செல்கிறது. இந்தத் திட்டம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இது 2, 4,5, 8 மற்றும் 60 போன்ற தேசிய நெடுஞ்சாலைகளைக் கொண்டுள்ளது. இது கொல்கத்தாவிலிருந்து டெல்லி வரை 1,563 கிலோமீட்டர்கள், டெல்லி முதல் மும்பை வரை 1,419 கிலோமீட்டர்கள், மும்பை முதல் சென்னை வரை 1,290 கிலோமீட்டர்கள் மற்றும் கொல்கத்தாவிலிருந்து சென்னை வரை 1,684 கிலோமீட்டர்கள் வரை நீண்டுள்ளது.

இந்த புதிய நெடுஞ்சாலையின் நன்மைகள்

· இந்த மேம்பாடு தங்க நாற்கர வழித்தடம் மாநிலங்களுக்கு இடையேயான் போக்குவரத்திற்கு உதவும்.

· இதுமட்டுமின்றி, கட்டுமானமானது பாதுகாப்பான போக்குவரத்து ஓட்டத்துடன் பயணத்தை சீராக மாற்றும். இது சாலை திறன், பாதுகாப்பு மற்றும் வேகம் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தும்.

· இது பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கும்.

· இது மாநிலங்களுக்கு இடையேயான சரக்குகள் மற்றும் பயணிகள் நடமாட்டத்தை மேம்படுத்தும்.

· இதனால் வேலைவாய்ப்புகள் உருவாவதோடு, சுற்றுலாவும் மேம்படும்.

· சென்னையிலிருந்து போக்குவரத்து நெரிசலின்றி வெளியே செல்வதற்கு உதவும்

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+