• Follow NativePlanet
Share
» »சென்னையிலிருந்து திருப்பதிக்கு ஒரு நாள் ட்ரிப் – வெறும் ரூ.2,000 இருந்தால் போதும்!

சென்னையிலிருந்து திருப்பதிக்கு ஒரு நாள் ட்ரிப் – வெறும் ரூ.2,000 இருந்தால் போதும்!

உலகம் கூட சுற்றி வந்துவிடும் சிலரால் சென்னைக்கு அருகாமையில் இருக்கும் திருப்பதிக்கு செல்ல இயலவில்லை என்று கூறுவார்கள். அதற்கு காரணம் என்னவென்றும் அவர்களால் சரியாக சொல்ல இயலாது. ஆனால், நீங்கள் இப்படி எல்லாம் எதுவும் நினைக்க வேண்டாம். உங்களுக்காகவே ஒரே நாளில் திருப்பதிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு அன்றைய தினமே சென்னை திரும்புவது எப்படி என்று இங்கு நாம் பார்ப்போம்!

திருப்பதி செல்வதில் உள்ள சிக்கல் என்ன?

இந்தியாவின் பல பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் கூட பயணம் அல்லது வேலை நிமித்தமாக சென்று வரும் பலர், நாங்கள் எவ்வளவு முயன்றோம், ஆனால் திருப்பதிக்கு செல்ல இயலவில்லை என்று கூறுவார்கள். அதே போல பலருக்கு இலவச தரிசனத்தில் சென்று சுவாமி தரிசனம் செய்ய சிரமமாக இருக்கும், சிறப்பு தரிசன டிக்கெட் பெறுவது எப்படி, ரூம் புக்கிங் செய்வது எப்படி என்றெல்லாம் தெரிவது இல்லை. இதனைப் பற்றிய ஒரு புரிதல் இல்லாமல் சரியாக பிளான் பண்ண முடியாமல் போய் விடுகிறது.

tirupati

TTDCயின் ஒரு நாள் திருப்பதி பயணம்

நம்மை போன்று திருப்பதி பயணம் எப்படி பிளான் செய்வது என்று குழம்பும் நபர்களுக்காகவே இந்த பேக்கேஜை TTDC அறிமுகப்படுத்தியுள்ளது. நீங்கள் இந்த பேக்கேஜை புக் செய்தால் காலையில் திருப்பதிக்கு கிளம்பி, ஒரே நாளில் ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு அன்றைய தினத்திலே வீடு திரும்பலாம். இந்த பேக்கேஜ் தினமும் இயக்கப்படுவதால், நீங்கள் உங்களுக்கு வசதியான தினத்தில் புக் செய்து கொள்ளலாம்.

எப்படி பார்த்தாலும் இது நமக்கு லாபம் தான்

நீங்கள் சிறப்பு தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய ரூ.300 செலுத்தி சில மாதங்களுக்கு முன்னரே டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். உங்களுக்கு கோவிலுக்கு அருகாமையில் தங்குமிடம் வேண்டுமென்றால் ரூ.1000 செலுத்தி ரூம் புக் செய்ய வேண்டும். கீழே பத்மாவதி தாயார் கோவிலுக்கு செல்வது, சென்னையிலிருந்து திருப்பதி பேருந்து பயணம், உணவு என ஒரு நபருக்கு கட்டாயம் ரூ.2,000 க்கு மேல் செலவாகிவிடும். எப்படி நீங்கள் கணக்கு போட்டு பார்த்தாலும், TTDC யின் தினசரி திருப்பதி பேக்கேஜ் நமக்கு லாபம் தான்.

சென்னை to திருப்பதி ஒரு நாள் சுற்றுலா

1. நீங்கள் சென்னையின் எந்த பகுதியில் இருந்தாலும் அதிகாலை 4.45 மணி அளவில் திருவல்லிக்கேணியில் உள்ள சுற்றுலா வளாகத்திற்கு வந்துவிட வேண்டும்.

2. அனைவரும் வந்தாகி விட்டதா என்று சரிபார்த்த பின்னர் சென்னையிலிருந்து திருப்பதி நோக்கிய உங்களது பயணம் தொடங்கும்.

3. காலை உணவுக்காக திருத்தணியில் 7.30-8.00 மணிக்கு நீங்கள் திருத்தணியை அடைவீர்கள். அங்கு காலை உணவு முடிந்த பிறகு பிரயாணம் மீண்டும் துவங்குகிறது.

4. காலை 9.15 மணி அளவில் நீங்கள் திருமலையை அடைவீர்கள்.

5. நீங்கள் இளைப்பாறி தயாராக உங்களுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும். நீங்கள் தயாரான பின்னர் சுவாமி தரிசனம் செய்ய புறப்படலாம்.

6. 12.00 மணி முதல் 2.00 மணிக்குள் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வீர்கள்.

7. பின்னர் அங்கேயே உங்களுக்கு மதிய உணவு வழங்கப்படும்.

8. மதிய உணவுக்கு பிறகு நீங்கள் கீழ் திருப்பதி எனப்படும் பத்மாவதி தாயார் கோவிலான திருச்சானூருக்கு செல்லுவீர்கள்.

9. தாயாரை தரிசனம் செய்த பிறகு சென்னை நோக்கிய பயணம் தொடங்கும்

10. இரவு 7.30 மணி அளவில் திருத்தணியில் இரவு உணவு உண்ணுவீர்கள். பின்னர் அங்கிருந்து இரவு 10.00 மணியளவில் சென்னையை அடைந்தவுடன் உங்களது திருப்பதி பயணம் இனிதே நிறைவடைகிறது.

எதற்காகவும் நாம் அலைய வேண்டியது இல்லை. கட்டணம் செலுத்தி அழகாக பேருந்தில் ஏறினால் போதும், சூப்பரா சுவாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பலாம். டிக்கெட் புக் செய்ய TTDC யின் அதிகாரப்பூர்வ போர்டலான https://ttdconline.com/tourname.do ஐ அணுகுங்கள்!

tirupati travel package

More News

    Read more about: chennai tirupati
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+