Search
  • Follow NativePlanet
Share
» »உலகின் மிக விசித்திரமான ஏரி இது! ஏன் தெரியுமா?

உலகின் மிக விசித்திரமான ஏரி இது! ஏன் தெரியுமா?

சில்கா ஏரி சுற்றுலா - அருவிகள் | குகைகள் | சாகசப் பயணம் மற்றும் பல

By Udhaya

சில்கா எனும் இடம் ஒரு வகையில் உலகின் மற்ற இடங்களிலிருந்து மிகவும் வித்தியாசப்படுகிறது. அது இந்த இடத்துக்கான சுற்றுலா வாய்ப்புகளை மிகவும் உயர்த்தியுள்ளது. இன்றும் உலகின் பல்வேறு நபர்கள் இந்த இடத்தைப் பற்றி படிக்கின்றனர் என்பது சிறப்பாகும். அதே நேரத்தில் நம்ம ஊர் அருகே இருக்கும் இந்த இடத்தைப் பற்றி இன்னும் பலர் தெரிந்து வைத்திருப்பதில்லை என்பதே சற்று குழப்பத்தையும் தருகிறது. ஏனெனில் நாம் கொண்டாடும் பல சுற்றுலாத் தளங்களுக்கு சற்றும் நிகர் குறையாத ஒரு இடம் இந்த சில்கா. நிச்சயம் நம் வாழ்வில் ஒரு முறையாவது சென்று விட்டு திரும்பவேண்டும் என்ற அளவுக்கு இதன் சிறப்பு இருக்கிறது. சரி எப்படி செல்வது, என்னென்ன செய்வது, பயண வழிகாட்டி முதலிய எல்லா தகவல்களையும் இந்த பதிவில் காண்போம்.

ஒடிசாவின் மிகப் பெரிய ஈர்ப்பு

ஒடிசாவின் மிகப் பெரிய ஈர்ப்பு

சில்கா என்ற இடம் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய கடற்கரைக்காயல் என்பதால் இது புகழ் பெற்ற இடமாக திகழ்கிறது. இதனை சில்கா ஏரி என்று அழைக்கின்றனர். உலகத்திலேயே இது இரண்டாவது பெரிய கடற்கரைக்காயலாக உள்ளதால் இந்த ஏரிக்கு இது கூடுதல் பெருமையை சேர்கிறது. ஒடிசாவில் உள்ள இந்த கடற்கரைக்காயல் மிகவும் புகழ் பெற்ற தலமாக விளங்குவதால் சுற்றுலாப் பயணிகளிடம் இது மிகப்பெரிய ஈர்ப்பாக உள்ளது.

UdayKiran28

வரலாறும் செல்லும் வழியும்

வரலாறும் செல்லும் வழியும்


தலைநகரமான புபனேஷ்வரிலிருந்து 81 கி.மீ. தொலைவில் உள்ள சில்கா, கஞ்சம் மாவட்டம், குர்தா மற்றும் பூரிக்கு ஆகிய இடங்களின் எல்லையில் அமைந்துள்ளது. ப்ளீஸ்டோசென் காலத்தில், சில்கா வங்காள விரிகுடாவின் ஒரு பகுதியாக விளங்கியது என்று நிலப்பொதியியல் அளவீடு உறுதி செய்துள்ளது. இந்திய வரலாற்றில் இந்த இடம் முக்கிய பங்கு வகிக்கிறது. கலிங்கர்கள் ஆட்சி காலத்தில் சில்கா ஒரு சுறுசுறுப்பான வணிக மையமாகவும் முதன்மையான துறைமுகமாகவும் விளங்கியது. சில்கா ஒரு முக்கியமான துறைமுகம் என்று டோலெமி என்ற கிரேக்க-ரோமானிய எழுத்தாளர் தன் படைப்புகளில் குறிப்பிட்டுள்ளார்.

Aruni Nayak

சில்கா மற்றும் அதனை சுற்றியுள்ள ஈர்ப்புகள்

சில்கா மற்றும் அதனை சுற்றியுள்ள ஈர்ப்புகள்

சில்கா சுற்றுலாவின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குகிறது உலக புகழ் பெற்ற சில்கா ஏரி. இதை தவிர இங்கே படகு சவாரி, பீன் பிடித்தல், பறவைகள் மற்றும் வனவிலங்குகளை கண்டு களித்தல் போன்ற செயல்களிலும் ஈடுபடலாம்.

Raveesh Vya

சில்கா - இயற்கையின் இசைவு!

சில்கா - இயற்கையின் இசைவு!

சில்காவில் காணப்படும் பலதரப்பட்ட பறவைகள், நீர் வாழ் விலங்குகள் மற்றும் ஊர்ந்து செல்கின்ற விலங்குகள் அதன் சுற்றுலாவின் வளமையை எடுத்துரைக்கும். ஒவ்வொரு வருடமும் குளிர் காலத்தின் போது ஆயிரக்கணக்கான பறவைகள் சில்கா ஏரிக்கு இடம் பெயரும். இந்த ஏரியில் நீர் வாழ் விலங்குகளான மீன்கள், ஆமைகள், நண்டுகள், இறால்கள் மற்றும் நத்தைகள் வாழ்கின்றன.

Shayan Sanyal -

 பறவைகள் காணும் காலம்

பறவைகள் காணும் காலம்

பல்லி வகையை சேர்ந்த ஸ்கின்க் மற்றும் இராவடி டால்பின்களையும் இங்கே காணலாம். சில்காவிற்கு சுற்றுலா வருவதற்கான சிறந்த காலம் சில்காவிற்கு குளிர் காலத்தில், அதாவது அக்டோபர் முதல் மார்ச் மாதங்களில் சுற்றுலா வருவதே சிறந்த நேரமாகும். இக்காலத்தில் இடம் பெயர்கின்ற பல பறவைகளுக்கு இந்த இடம் புகலிடமாக அமையும். அதனால் இக்காலத்தில் இங்கு வந்தால் இப்பறவைகளை கண்டு களிக்கலாம்.

সন্দীপ সরকার

எப்போது செல்வது சிறந்தது

எப்போது செல்வது சிறந்தது


அக்டோபர் முதல் மார்ச் வரையுள்ள காலங்களில் வானிலையும் குளிர்ச்சியாக இருக்கும். பகல் நேரத்தில் கூட வானிலை இனிமையாக இருக்கும். சில்காவை அடைவது எப்படி? சில்காவை விமானம், இரயில் மற்றும் சாலை வழியாக சுலபமாக வந்தடையலாம். சில்காவிற்கு அருகில் இருக்கும் விமான நிலையம் புவனேஷ்வரில் உள்ளது. ரம்பா மற்றும் பளுகோன் தான் இதற்கு மிக அருகில் இருக்கும் இரயில் நிலையங்களாகும். பூரி மற்றும் கட்டாக்கிலிருந்து பேருந்துகள் மற்றும் டாக்சிகள் மூலமாகவும் சில்காவிற்கு வரலாம்.

Ckpcb

மங்கலஜோடி பறவைகள் சரணாலயம் | சிறந்த காலம் | செய்யவேண்டியவை

மங்கலஜோடி பறவைகள் சரணாலயம் | சிறந்த காலம் | செய்யவேண்டியவை


சில்கா ஏரியின் வடக்கு முனையில் அமைந்திருக்கும் மங்கலஜோடி பறவைகள் சரணாலயம் எண்ணற்ற புலம்பெயர் பறவைகளுக்கு புகலிடமாக திகழ்ந்து வருகிறது.

இந்த பறவைகள் சரணாலயத்துக்கு ஈரான், ஈராக், செர்பியா, ஹிமாலய பகுதிகளிலிருந்து 135-க்கும் மேற்பட்ட புலம்பெயர் பறவை இனங்கள் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலங்களில் வந்து செல்கின்றன.

மேலும் இங்கே ஏற்பாடு செய்யப்படும் படகு பயணத்தின் மூலம் கருஞ்சிறகு நெடுங்காற் பறவை, உள்ளான், நீல நிற சுத்துநிலக் கோழி போன்ற பல பறவைகளை இங்கு காணமுடியும்.


UdayKiran28

 பரப்பளவு | பறவை வகைகள்

பரப்பளவு | பறவை வகைகள்

சுமார் 1,100 சதுர கி.மீ. பரப்பளவில் தயா நதியின் வாயிலில் அமைந்துள்ளது சில்கா ஏரி. இந்த உப்பு நீர் ஏரி நன்செய்நிலமாக வகைபடுத்தப்பட்டுள்ளது. காஸ்பியன் கடல், ஈரான், ரஷ்யா மற்றும் சைபீரியா போன்ற இடங்களில் இருந்து குளிர் காலத்தில் பல பறவைகள் இங்கே இடம் பெயரும். இடம் பெயரும் காலத்தில் சுமார் 205 பறவை வகைகளை இங்கே காணலாம். இதில் 97 வகைகள் கண்டம் விட்டு இடம் பெயரும் பறவைகளாகும்.

Sagarchatterjee -

 தீவுகள் | செய்யவேண்டியவை

தீவுகள் | செய்யவேண்டியவை


சில்கா ஏரியில் சிறிய தீவுகள் பல உள்ளன. இந்த தீவுகளுக்கெல்லாம் ஒரு முறை சென்று வந்தால் போதும், வாழ்நாள் முழுவதும் அதனை மறக்கவே மாட்டீர்கள். பறவைகள் தீவு, தேனிலவு தீவு, பரிகுத் தீவு, ப்ரேக்பாஸ்ட் தீவு, மலுத் தீவு, நிர்மல்ஜரா தீவு மற்றும் நலபானா (நாணல் தீவு) போன்றவைகள் இங்கே காணப்படும் முக்கிய தீவுகளாகும்.

Ckpcb

 காளிஜெய் கோவில் | நடைதிறப்பு | கட்டணம் | வரலாறு

காளிஜெய் கோவில் | நடைதிறப்பு | கட்டணம் | வரலாறு


காளிஜெய் தீவில் காளிஜெய் தேவிக்காக ஒரு கோவில் ஒன்று உள்ளது. அதனால் இந்த தீவு ஹிந்துக்களின் புனித ஸ்தலமாக விளங்குகிறது. எனவே வருடம் முழுவதும் இந்த தீவில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழியும். மகர சங்கராந்தி திருவிழா இந்த கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஏரி கடலில் சங்கமிக்கும் இடத்தில் ரிஜ்ஹன்சா ஏரி உள்ளது. இந்த தீவில் இருந்து கடற்கரையின் அகலப் பரப்பு காட்சியை கண்டுகளிக்கலாம். சில்காவின் அழகை கண்டு களிக்க சட்படா, பளுகோன், ரம்பா மற்றும் பர்குல்லில் இருந்து படகு சவாரியில் ஈடுபட வேண்டும்.

Gayatri Priyadarshini

Read more about: travel odisha
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X