Search
  • Follow NativePlanet
Share
» »கோவை - கோபி : ஒன்டே ரைடுல எங்கவெல்லாம் போகலாம்..!

கோவை - கோபி : ஒன்டே ரைடுல எங்கவெல்லாம் போகலாம்..!

ஒரே நாள் விடுமுறையில் கோவைக்கு அருகேயே எங்காவது சுற்றுலா செல்லலாம் என யோசித்துக் கொண்டிருப்பவர்கள் பசுமை வயல்களும், ஆன்மீகத் தலங்களும் நிறைந்த கோபிக்கு சென்று வரலாம்.

கோயம்புத்தூரின் அருகே மேட்டுப்பாளையம், ஆனைகட்டி, ஊட்டி, பாலக்காடு என பல்வேறு சுற்றுலாப் பகுதிகள் இருப்பது நமக்குத் தெரிந்த ஒன்றே. இப்பகுதிகளுக்கு எல்லாம் சுற்றுலா செல்ல திட்டமிட்டால் ஒரே நாளில் குறிப்பிட்ட சில தலங்களுக்கு மட்டும் செல்லாம். அல்லது இரண்டு முதல் மூன்று நாட்கள் திட்டமிட்டு அப்பகுதிகளை முழுமையாக அனுபவித்து வர முடியும். ஆனால், ஞாயிறு போன்ற ஒரே நாள் விடுமுறையில் கோயம்புத்தூருக்கு அருகே வேறெங்கு செல்லலாம் என யோசித்துக் கொண்டிருப்பவர்கள் பசுமை வயல்களும், ஆன்மீகத் தலங்களும் நிறைந்த கோபிசெட்டிபாளையத்திற்கு சென்று வருவது நன்றாக இருக்கும். சரி வாரங்கள், கோபிக்கு எப்படிச் செல்லாம் ? அங்கே என்னவெல்லாம் உள்ளது என பார்க்கலாம்.

கோயம்புத்தூர் - கோபி

கோயம்புத்தூர் - கோபி


கோயம்புத்தூரில் இருந்து அவிநாசி சாலை வழியாக சுமார் 84 கிலோ மீட்டர் பயணித்தால் கோபிசெட்டிபாளையத்தை அடைந்துவிடலாம். கோபியில் நீங்கள் செல்லும் முதல் தலமாக பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலை தேர்வு செய்யுங்கள். காலை ஆறு மணி முதல் மதியம் ஒரு மணி வரையும், மாலை நான்கு மணி முதல் எட்டு மணி வரை கோவில் நடை திறந்து இருப்பதால் காலை நேரத்தில் முதலில் கோவிலுக்குச் சென்று வழிபட்டு விட்டு பின் அருகில் உள்ள மற்ற தலங்களுக்கும் சென்று வர ஏதுவாக இருக்கும்.

Magentic Manifestations

பாரியூர் அம்மன்

பாரியூர் அம்மன்


கோபிச்செட்டிப்பாளைய நகரத்தில் இருந்து சுமுர் 3 கிலோ மீட்டர் தொலைவில் பாரியூர் கிராமத்தில் அமைந்துள்ளது இத்திருத்தலம். இக் கோவிலில் மூலவராக கொண்டத்துக் காளியம்மன் அருள்பாலிக்கிறார். இந்த கோவில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. கோவில் முன்னர் ஐந்து அடுக்கு ராஜ கோபுரம் கம்பீரமாக காட்சி அளிக்கின்றது. அம்பாள் உடன் விநாயகர், மகா முனியாப்பன், கன்னிமார், பொன்காளியம்மன் மற்றும் இதர தெய்வங்களுக்கும் இங்கே சன்னதிகள் உள்ளது. கருவறையைச் சுற்றி கருப்பு பளிங்குக்கற்களால் ஆன வெளி மண்டபமும், கோவிலின் தூண்களில் மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகளும் உள்ளன. மேலும், இத்தலத்தின் அருகிலேயே வெள்ளை பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட அருள்மிகு அமரபநீஸ்வரர் திருக்கோவில், ஆதிநாரயனபெருமாள் திருக்கோவில் மற்றும் அங்காளம்மன் திருக்கோவில்களும் அமைந்துள்ளன. இவை அனைத்திற்கும் ஒரே நேரத்தில் சென்று வழிபட்டு வரலாம்.

Magentic Manifestations

கொடிவேரி அணைக்கட்டு, ஈரோடு

கொடிவேரி அணைக்கட்டு, ஈரோடு


கோபியில் இருந்து காசிபாளையம் வழியாக சுமார் 16 கிலோ மீட்டர் பயணித்தால் கொடிவேரி அணைக்கட்டை அடைந்துவிடலாம். கொடிவேரி அணை தமிழகத்தில் பெரிய அணைக்கட்டுகளில் ஒன்றாகும். மிகப்பெரிய பரப்பளவில் அழகுற நிற்கும் இந்த அணைதான் இந்தப் பகுதி மொத்தமுமே வளமாக இருப்பதற்கு காரணமாகும். இந்தப் பகுதியின் நீர்ப்பாசனத்திற்கு கொடிவேரி அணை மகத்தான பங்கினை ஆற்றி வருகிறது. செல்லும் வழியிலேயே தோட்டங்களின் அழகுகளையும், கொடிவேரியின் மீனையும் ருசித்து ரசிக்கலாம்.

Magentic Manifestations

நெற்வயல்கள்

நெற்வயல்கள்


நகரமயமாக்களில் இருந்து கொடிவேரி கொஞ்சம் தப்பித்த நிலையில்தான் உள்ளது. நகரப் பகுதியைத் தவிர பாசன காலத்தில் பசுமை வயல்களின் அழகை கொஞ்சி ரசிக்கலாம். நெல், கரும்பு, சோளம், மஞ்சல் போன்ற பல்வேறு பயிர்வகைகள் இங்கே பயிரிப்படுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிச் செல்லும் பசுமைக் காடுகளுடன் இணைந்தவாறே இங்கு விளையும் பயிர்களும் உள்ளன. தற்போது கோடைகாலம் என்பதால் நெற்கதிர்களைக் காண்பதி கடிணம். இருப்பினும், மஞ்சல், புகையிலைச் செடிகள், மல்லி, செவ்வந்தி போன்ற மலர்த் தோப்புகளைக் காண முடியும்.

Magentic Manifestations

கோபி - பவானிசாகர்

கோபி - பவானிசாகர்


கோபியில் இருந்து அரியப்பம்பாளையம் வழியாக 39 கிலோ மீட்டர் பயணித்தால் சத்தியமங்கலத்தைக் கடந்து பவானிசாகர் அணையை அடையலாம்.
தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணை என்னும் சிறப்புக்குரிய பவானிசாகர் அணை ஆசியாவிலேயே மிக நீளமான மண் அணையும் ஆகும். இவைகளைத் தாண்டியும் பவானிசாகர் அணைக்குள் ஓர் வரலாற்றுச்சிறப்பு மூழ்கிக் கிடக்கிறது. டணாய்க்கன் கோட்டை என்றழைக்கப்படும் ஓர் வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை அணை நீருக்குள் மூழ்கிக் கிடக்கிறது. கோடைக் காலங்களில் அணையில் நீர் வற்றிய பிறகு அந்தக் கோட்டையை காண முடியும். அணையில் இருந்து பிடித்த மீனை சுட சுட எண்ணையில் பொறித்து எந்தநேரமும் விற்கப்படும். பவானிசாகர் செல்வோர் தவறாமல் அணை மீனை ருசித்து வர வேண்டும்.

JayakanthanG

பவானிசாகர் - கோயம்புத்தூர்

பவானிசாகர் - கோயம்புத்தூர்


பவானிசாகர் அணையில் இருந்து கோயம்புத்தூரை அடைய மீண்டும் கோபிசெட்டிபாளையம் செல்ல வேண்டும் என அவசியம் இல்லை. பவானிசாகர் அணையில் இருந்து மாலை நேரப் பொழுதில் வெளியேறினால் சிறுமுகை, காரமடை வழியாக சுமார் 62 கிலோ மீட்டர் பயணித்து கோயம்புத்தூரை அடையலாம். அல்லது, அணையில் இருந்து புளியம்பட்டி, அன்னூர், கோவில்பாளையம் வழியாக 63 கிலோ மீட்டர் பயணித்தும் கோயம்புதூரை அடையலாம். இவை அனைத்திற்கும் செல்ல சரியான திட்டமிடலுடன் காலை நேரம் பயணத்தை துவங்கினால் இரவுப் பொழுதில் திரும்பிவிடலாம்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X