Search
  • Follow NativePlanet
Share
» »கோயம்புத்தூர் - பாண்டிச்சேரி : குதூகலமா ஓர் ரைடு போலாமா ?

கோயம்புத்தூர் - பாண்டிச்சேரி : குதூகலமா ஓர் ரைடு போலாமா ?

பாண்டிச்சேரிக்கு ஒருமுறையாவது போகனும்னு நாம எத்தனையோ திட்டம் போட்டிருப்போம். அந்த மாதிரியான ஓர் திட்டம் தான் இது, அதுவும் பைக்ல. என்ன ரெடியா ?

என்னங்க, பாண்டிச்சேரிக்கு ரைடு போக நினைச்சதும்மே உள்ளுக்குள்ள ஒரு கிரக்கம் உண்டாகுதா..! பாண்டிச்சேரின்னா சும்மாவா, கடற்கரை விளையாட்டும், ஆரோவில்லே போன்ற வித்தியாசமான புத்துணர்ச்சியூட்டும் இடங்களும், அப்புறம் எல்லாத்துக்கும் மேல நமக்குபுடிச்ச குறைந்த விலையில் கிடைக்கும் சரக்கு, ஏதோ பிரஞ்சு நகரத்துக்குள்ள நுழைஞ்சது போல உணர்வு என பாண்டிச்சேரியில் நாம் அனுபவிக்க ஏராளமான விஷயங்கள் இருக்கு. இப்படிப்பட்ட பாண்டிச்சேரிக்கு ஒருமுறையாவது போயே ஆகனும்னு நாம எத்தனையோ வருடம் திட்டம் போட்டிருப்போம். அந்த மாதிரியான ஓர் திட்டம் தான் இது, அதுவும் பஸ், ரயில்ல இல்லைங்க. பைக்லயே பாண்டிச்சேரிக்கு பயணம் செய்யப் போறோம். என்ன ரெடியா ?

கோயம்புத்தூர் - பாண்டிச்சேரி

கோயம்புத்தூர் - பாண்டிச்சேரி


பாண்டிச்சேரிக்கு அருகிலேயே உள்ள மாநகரம் சென்னை. இங்க இருந்து எப்ப வேணாலும் பயணிகள் பாண்டிச்சேரிக்கு சிற்றுலாவாக செல்கின்றனர். அதற்கு அடுத்ததா தமிழகத்திலேயே பெரிய மெட்ரோ சிட்டி நம்ம கோயம்புத்தூர் தான். பிற மாவட்டங்களைக் காட்டிலும் இங்கிருந்து பிற மாவட்ட, மாநில சுற்றுலாத் தலங்களுக்கு அதிகளவில் பயணம் செய்கின்றனர் நம்ம நாகரீக இளைஞர்கள். அப்படியொரு பயணமாக பாண்டிச்சேரிக்கு நீங்க செல்ல திட்டமிட்டால் இந்த ரூட்டை டிரை பண்ணி பாருங்களேன்.

Rsrikanth05

கோவை - அவினாசி

கோவை - அவினாசி


கோயம்புத்தூரில் இருந்து அவினாசி ரொம்ம தூரம் எல்லாம் இல்லை என்பது உள்ளூர் மக்களுக்குத் தெரியும். இதற்கு காரணம் அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் தான். சித்திரை உள்ளிட்ட விசேச காலங்களில் இக்கோவிலில் நடக்கும் தேர்த் திருவிழா உலகப் புகழ்பெற்றது என்றுதான் சொல்ல வேண்டும். தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய தேரான இக்கோவிலின் தேர்த் திருவிழா அந்தளவிற்கு பிரசிதிபெற்றது. கோயம்புத்தூரில் இருந்து பலாயிரக் கணக்கான மக்கள் இத்திருவிழாவில் பங்கேற்பது மட்டுமின்றி பிற விசேச நாட்களில் கூட இக்கோவிலுக்கு பயணம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். கோவையில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அவினாசி உள்ளது.

avinashilingeswarartemple

அவினாசி - ஈரோடு

அவினாசி - ஈரோடு


கோவையில் துவங்கிய பைக் ரைடில் விருப்பம் இருந்தால் அவினாசி கோவிலில் ஓர் வழிபாட்டை முடித்துவிட்டு பயணத்தை தொடர்தீர்கள் என்றால் அடுத்த 58 கிலோ மீட்டரில் ஈரோடு மாவட்டத்தை அடைந்து விடலாம். பவானி நதிக்கரையோரம் அமைந்துள்ள இம்மாவட்டம் வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையிலான பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது. அவற்றுள் பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், வெள்ளோடு பறவைகள் சரணாலயம், அரசு அருங்காட்சியகம், கரடியூர் வியூ பாயிண்ட், பவானி மற்றும் பண்ணாரி ஆகியவை உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை.

Rsrikanth05

ஈரோடு- ராசிபுரம்

ஈரோடு- ராசிபுரம்


ஈரோட்டில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் திருச்செங்கோடு அடுத்துள்ளது ராசிபுரம். சேலத்திற்கும், நாமக்கல்லிற்கும் இடைப்பட்டு, நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட இப்பகுதி ஆன்மீகத் தலத்திற்கும், பசுமை நிறைந்த மலைக் காடுகளுக்கும் பிரசிதிபெற்றது. இதனருகே உள்ள நையநார் மலை, ஜருகு மலை உள்ளிட்டவை இப்பகுதியை எப்போதும் பசுமை நிறைந்த சூழலாக பாதுகாக்கிறது. இங்குள்ள அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில் புகழ்பெற்றது.

Dilli2040

திருச்செங்கோடு

திருச்செங்கோடு


ஈரோட்டில் இருந்து ராசிபுரம் சாலையில் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருச்செங்கோடு பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்காக அறியப்படுகிறது. இங்கிருக்கும் அர்த்தனாரீஸ்வரர் கோவிலில் சிவபெருமான் 900 மீட்டர் உயரத்தில், ஆண், பெண் என இருபாலினம் கலந்து அர்த்தனாரீஸ்வரராக காட்சியளிக்கிறார். மேலும், திருச்செங்கோட்டில் அருகருகே உள்ள நரசிம்மர் கோவில், கற்கோட்டை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு நேரம் இருந்தால் பயணம் செய்யலாம்.

kurumban

ராசிபுரம் - உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலை

ராசிபுரம் - உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலை


ராசிபுரத்தில் நேரம் இருப்பின் சற்று அருகே உள்ள ஓய்வுத் தலங்களுக்குச் சென்று புத்துணர்ச்சி அடைந்த பின் தொடர்ந்து பயணத்தை மேற்கொண்டீர்கள் என்றால் அடுத்த 76 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சேலம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலை பிரிவை அடைந்துவிடுவீர்கள். இந்த இடைப்பட்ட பயணம் சற்று மலைப்பாங்கான புத்துணர்ச்சியையும், பயணத்தால் ஏற்படும் சோர்வையும் நீக்கும் வகையில் இருக்கும். நாமகிரிப்பேட்டையைக் கடந்து ஆத்தூர் சாலை, திம்மநாயக்கன்பட்டி, மல்லியகரை என வழிநெடுகிலும் eகரமயமாக்களில் இருந்து விலகி சற்று பசுமைக் காற்றை உணர முடியும். ஏற்காடு, கல்வராயன் மலைத் தொடர்களின் ரம்மியமான காட்சிகளையும் கண்டு ரசிக்கலாம்.

Mark Kao

கள்ளக்குறிச்சி - உளுந்தூர்பேட்டை

கள்ளக்குறிச்சி - உளுந்தூர்பேட்டை


உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலைப் பிரிவில் இருந்து கள்ளக்குறிச்சி வழியாக 70 கிலோ மீட்டர் பயணம் செய்தால் உளுந்தூர்பேட்டையை வந்தடையலாம். பிரசித்தமான சுற்றுலாத் தலங்கள் இல்லாவிட்டாலும், சாலையின் இருபுறமும் ஆங்காங்கே தோன்றும் பசுமை போர்த்திய வயல்வெளிகள் கண்களுக்கு விருந்தாக அமையும்.

Thahir suhail

உளுந்தூர்பேட்டை - விழுப்புரம்

உளுந்தூர்பேட்டை - விழுப்புரம்


உளுந்தூர்பேட்டையில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது விழுப்புரம் மாவட்டம். செஞ்சிக் கோட்டை, கல்வராயன் மலை உள்ளிட்டவை விழுப்புரத்திற்கு அருகில் உள்ள சுற்றுலாத் தளங்களாகும். திருக்கோவிலூர், திருவக்கரை உள்ளிட்ட ஆன்மீகத் தலங்களும் இங்கே புகழ்பெற்றவை.

Karthik Easvur

கல்ராயன் மலை

கல்ராயன் மலை


சேலம் - விழுப்புரம் மாவட்டங்களைப் பிரிக்கும் எல்லையாக அமைந்துள்ளது இந்த கல்ராயன் மலை. சின்னக்கல்ராயன், பெரியகல்ராயன் என இரு பிரிவாக உள்ள இதில், சின்னக்கல்ராயன் மலை 2700 அடி உயரமும், பெரிய கல்ராயன் 4000 அடி உயரமும் கொண்டதாகும். பச்சை பசேலென்று காணப்படும் இந்த மலையில் சுற்றுலா என்பது பயணிகளுக்கு மிகப் பிடித்தமான ஒன்றாகும். இந்த மலையைத்தான் அவர்கள் தென்னிந்தியாவின் சிறந்த டிரெக்கிங்க் என்று பாராட்டுகின்றனர். கோமுகி அணை, மேகம் நீர்வீழ்ச்சி, பெரியார் நீர்வீழ்ச்சி போன்றவை இதனருகே உள்ள பிற சுற்றுலாத் தலங்களாகும்.

PJeganathan

விழுப்புரம் - பாண்டிச்சேரி

விழுப்புரம் - பாண்டிச்சேரி


விழுப்புரத்தில் சுற்றுலாத் தலங்களுக்கு எல்லாம் பயணித்துவிட்டு பாண்டிச்சேரி நோக்கி பயணம் செய்தால் அடுத்த 4 கிலோ மீட்டர் தொலைவில் உங்களுக்கான பல அம்சங்களுடன் காத்திருக்கும் பாண்டிச்சேரியை அடைந்துவிடலாம். விழுப்புரத்தில் இருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி என இருவேறு சாலைகள் இருந்தாலும் மூன்றாவதாக உள்ள கோழியனூர் - வளவனூர்- அரியூர்- வில்லியனூர் சாலைதான் எளிதானது. இச்சாலை உங்களது பயண நேரத்தையும், தூரத்தையும் வெகுவாகக் குறைக்கும்.

Karthik Easvur

பாண்டிச்சேரி

பாண்டிச்சேரி


ஒருவழியாக உங்களது கனவு தேசமான பாண்டிச்சேரியை அடைந்துவிட்டீர்கள். அப்புறம் என்னபாஸ், நைட்டு ஒரு ரவுண்டு போட்டுட்டு காலைல புத்துணர்ச்சியுடன் ஜாலியா ரைடு போங்க. ஆமா, பாண்டிச்சேரில எங்கவெல்லாம் அருமையா சுற்றிப்பார்க்கலாம் என தெரியுமா ?. கவலைய விடுங்க, பாண்டிச்சேரி சுற்றுலாத் தலங்கள் குறித்து தெரிஞ்சுக்க இத க்ளிக் பண்ணுங்க.

Sathyaprakash01

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X