Search
  • Follow NativePlanet
Share
» »கோயம்புத்தூரில் இருந்து திருப்பதி, திருச்சானூர், காலஹஸ்திக்கு டூர் பேக்கேஜ் – TTDCயின் அசத்தல் ஆஃபர்!

கோயம்புத்தூரில் இருந்து திருப்பதி, திருச்சானூர், காலஹஸ்திக்கு டூர் பேக்கேஜ் – TTDCயின் அசத்தல் ஆஃபர்!

உலகத்தையே எங்களால் சுற்ற முடிகிறது, ஆனால் திருப்பதிக்கு செல்ல முடியவில்லை என்று பலர் கூறுவதை நீங்கள் கேட்டு இருக்கலாம். அதற்கு காரணம் என்னவென்றும் அவர்களால் சரியாக சொல்ல இயலாது. ஆனால், நீங்கள் இப்படி எல்லாம் எதுவும் நினைக்க வேண்டாம். உங்களுக்காகவே கோயம்புத்தூரில் இருந்து இரண்டே நாட்களில் திருப்பதிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வரும் அசத்தல் டூர் பேக்கேஜை TTDC அறிமுகம் செய்துள்ளது! இந்த டூர் பேக்கேஜை எப்படி புக் செய்வது என்று பார்க்கலாம்!

திருப்பதி செல்வதில் உள்ள சிக்கல் என்ன?

இந்தியாவின் பல பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் கூட பயணம் அல்லது வேலை நிமித்தமாக சென்று வரும் பலர், நாங்கள் எவ்வளவு முயன்றோம், ஆனால் திருப்பதிக்கு செல்ல இயலவில்லை என்று கூறுவார்கள். அதே போல பலருக்கு இலவச தரிசனத்தில் சென்று சுவாமி தரிசனம் செய்ய சிரமமாக இருக்கும், சிறப்பு தரிசன டிக்கெட் பெறுவது எப்படி, ரூம் புக்கிங் செய்வது எப்படி என்றெல்லாம் தெரிவது இல்லை. இதனைப் பற்றிய ஒரு புரிதல் இல்லாமல் சரியாக பிளான் பண்ண முடியாமல் போய் விடுகிறது.

tirupati1

TTDCயின் இரண்டு நாள் திருப்பதி பயணம்

நம்மை போன்று திருப்பதி பயணம் எப்படி பிளான் செய்வது என்று குழம்பும் நபர்களுக்காகவே இந்த பேக்கேஜை TTDC அறிமுகப்படுத்தியுள்ளது. நீங்கள் இந்த பேக்கேஜை புக் செய்தால் முதல் நாள் இரவில் திருப்பதிக்கு கிளம்பி, மறு நாள் ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு அன்றைய தினத்திலே வீடு திரும்பலாம். இந்த பேக்கேஜ் தினமும் இயக்கப்படுவதால், நீங்கள் உங்களுக்கு வசதியான தினத்தில் புக் செய்து கொள்ளலாம்.

எப்படி பார்த்தாலும் இது நமக்கு லாபம் தான்

நீங்கள் சிறப்பு தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய ரூ.300 செலுத்தி சில மாதங்களுக்கு முன்னரே டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். உங்களுக்கு கோவிலுக்கு அருகாமையில் தங்குமிடம் வேண்டுமென்றால் ரூ.1000 செலுத்தி ரூம் புக் செய்ய வேண்டும். கீழே பத்மாவதி தாயார் கோவிலுக்கு செல்வது, காலஹஸ்தி கோவிலுக்கு செல்வது என்பது உங்களுக்கு கூடுதல் செலவு தான் ஆகும். கோவையில் இருந்து திருப்பதி பேருந்து பயணம், உணவு என ஒரு நபருக்கு கட்டாயம் ரூ.5,000 க்கு மேல் செலவாகிவிடும். எப்படி நீங்கள் கணக்கு போட்டு பார்த்தாலும், TTDC யின் தினசரி திருப்பதி பேக்கேஜ் நமக்கு லாபம் தான். ஆம் இதில் நீங்கள், வெறும் ரூ.4,000 கொடுத்து புக் செய்தால் போதும்!

coimbatoretotirupationedaytourpackage1

கோயம்புத்தூர் to திருப்பதி இரண்டு நாட்கள் சுற்றுலா

1. நீங்கள் கோவையின் எந்த பகுதியில் இருந்தாலும் இரவு 8:00 மணி அளவில் கோவை காந்திபுரத்தில் உள்ள ஹோட்டல் தமிழ்நாடு என்கிற இடத்தை அடைய வேண்டும்.

2. அனைவரும் வந்தாகி விட்டதா என்று சரிபார்த்த பின்னர் கோவையிலிருந்து திருப்பதி நோக்கிய உங்களது பயணம் தொடங்கும்.

3. இரண்டாம் நாள் காலையில் ராணிப்பேட்டையில் உள்ள TTDC ஹோட்டலில் பிரஷ் ஆகி காலை உணவை முடிப்பீர்கள்.

4. பின்னர் அங்கிருந்து திருமலைக்கு அழைத்து செல்லப்படுவீர்கள். காணக்கிடைக்காத திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வீர்கள்.

5. சுவாமி தரிசனம் செய்த பின்னர் லட்டு பிரசாதம் வாங்கிக் கொண்டு பின்னர் திருச்சானூருக்கு அழைத்து செல்லப்படுவீர்கள். பின்னர் அங்கேயே உங்களுக்கு மதிய உணவு வழங்கப்படும்.

6. மதிய உணவுக்கு பிறகு நீங்கள் கீழ் திருப்பதி எனப்படும் பத்மாவதி தாயார் கோவிலான திருச்சானூருக்கு செல்லுவீர்கள்.

7. தாயாரை தரிசனம் செய்த பிறகு, பஞ்ச பூத ஸ்தலமான காலஹஸ்திக்கு சென்று சிவபெருமானை தரிசனம் செய்வீர்கள்.

8. ராணிப்பேட்டையில் உள்ள TTDC ஹோட்டலில் இரவு உணவு சாப்பிட்ட பின்னர், அங்கிருந்து கோவை நோக்கிய உங்களுடைய பயணம் தொடங்கும்.

9. அதிகாலை 3:30 மணி அளவில் கோவையை அடைவீர்கள்.

எதற்காகவும் நாம் அலைய வேண்டியது இல்லை. கட்டணம் செலுத்தி அழகாக பேருந்தில் ஏறினால் போதும், சூப்பரா சுவாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பலாம். டிக்கெட் புக் செய்ய TTDC யின் அதிகாரப்பூர்வ போர்டலான https://www.ttdconline.com/tirupathi_list.html ஐ அணுகுங்கள்!

More News

    Read more about: coimbatore ttdc
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+