• Follow NativePlanet
Share
» »இந்திய கலாச்சாரத்தை புரிந்துகொள்ள நாம் செல்ல வேண்டிய இடங்களை பற்றி தெரியுமா உங்களுக்கு ?

இந்திய கலாச்சாரத்தை புரிந்துகொள்ள நாம் செல்ல வேண்டிய இடங்களை பற்றி தெரியுமா உங்களுக்கு ?

உலகில் எத்தனையோ கலாச்சாரங்கள் தோன்றியிருந்தாலும் அவை எல்லாவற்றைக் காட்டிலும் பழமையானதும், செரிவானதுமாக இருப்பது இமய மலைக்கும், இந்து மகாசமுத்திரதிற்க்கும் இடையில் இருக்கும் இந்திய தேசத்தில் தோன்றிய கலாச்சாரம் தான். எப்போது தோன்றியது என்று எவராலும் கண்டறிய முடியாத அளவு பழமையான இந்திய கலாச்சாரத்தின் சிறப்புகள் தான் எத்தனை எத்தனை.

உலகின் பிற பகுதிகளிலெல்லாம் ஒருவனே கடவுள், அவர் அனுப்பிய தூதனை தான் எல்லோரும் வழிபடவேண்டும், கடவுளோ எதிர்த்து பேசுவோருக்கு மரணம் தான் பரிசு என்றெல்லாம் சொல்லி விலங்குகளை விடவும் மோசமாக வாழ்ந்து வந்த போது கடவுள் நம்முள் தான் இருக்கிறார். பிறரின் மீது அன்பு செலுத்துவது தான் இறைமையின் உச்சம் என வாழ்வியல் நெறிகளை போதித்த கலாச்சாரம் தான் இந்திய கலாச்சாரம்.

இதனால் தான் எண்ணற்ற சோதனைகள் வந்தும் இதன் ஆணிவேர் அசையாமல் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அப்படியே இருக்கிறது. அப்பேர்ப்பட்ட இந்திய கலாச்சாரத்தை பற்றி தெரிந்துகொள்ள இந்த தேசத்தில் இருக்கும் சில இடங்களுக்கு பயணிக்க வேண்டியது அவசியம். பயணத்தை துவங்குவோம் வாருங்கள்.

வாரணாசி :

வாரணாசி :

உலகில் இன்றிருக்கும் மிகப்பழமையான நகரம் வாரணாசி ஆகும். கிட்டத்தட்ட 3000 ஆண்டுகளாக எவ்வித இடர்பாடும் இன்றி தொடர்ந்து இயங்கி வரும் இந்நகரம் இந்திய கலாச்சாரத்தின் அச்சாணியாக இருந்து வருகிறது. இங்கிருக்கும் ஆயிரக்கணக்கான கோயிகளில் காலம் காலமாக சற்றும் மாறுபடாமல் சடங்குகள் மற்றும் பூஜைகள் நடைபெறுகின்றன.

Sam Hawley

வாரணாசி :

வாரணாசி :

ஆகாயத்தில் இருந்து பூமிக்கு வந்ததாக சொல்லப்படும் புனித நதியான கங்கை வாரணாசியை வளப்படுத்துவதோடு மட்டுமில்லாமல் கோடிக்கணக்கான பக்தர்களின் பாவங்களை தனதாக்கிக்கொண்டு அவர்களுக்கு விமோச்சனம் அளிக்கிறாள்.

ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் கங்கை நதியை ஆராதிக்கும் பொருட்டு 'கங்கா ஆரத்தி' என்னும் பூஜை நடைபெறுகிறது. அந்த பூஜையின் போது காசியின் கங்கை கரை முழுக்கவே தீப ஒளியில் மிதப்பதை காண கண்கள் கோடி வேண்டும்.

வாரணாசி :

வாரணாசி :

வாரணாசியின் மிக முக்கியமான ஆன்மீக ஸ்தலமாக இருப்பது 12 ஜோதிர்லிங்கங்க கோயில்களுள் முதன்மையானதாக கருதப்படும் காசி விஸ்வநாதர் கோயில் ஆகும். ஹிந்து நம்பிக்கையை பின்பற்றும் அனைவரும் தங்கள் வாழ்வில் ஒருமுறையேனும் அவசியம் வந்து வழிபடவேண்டிய ஆலயங்களில் ஒன்றாக இச்சிவாலயம் இருக்கிறது.

ஆதி சங்கராச்சாரியார், ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், குரு நானக் போன்ற ஆன்மீக மகாபெரியவர்கள் இக்கோயிலுக்கு வந்து வழிப்பாடு செய்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாரணாசி :

வாரணாசி :

காசியில் வந்து மரணம் எய்தினால் மறுபிறவி இன்றி முக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையின் காரணமாக தங்கள் வாழ்வின் இறுதி பருவத்தில் இருக்கும் ஏராளமான முதியவர்கள் காசியில் வந்து உயிர்துறக்கின்றனர்.

அவர்களின் உடல்கள் காசியில் இருக்கும் படித்துறைகளில் எரியூட்டப்படுகின்றன.

வாரணாசி :

வாரணாசி :

அறிவியல் எங்கே முடிகிறதோ அங்கே ஹிந்து மதம் ஆரம்பிக்கிறது என்று சொல்லப்படுவதுண்டு. அதற்கேற்றார் போல காசியில் நம் அறிவுக்கு அப்பாற்ப்பட்ட வாழ்க்கை வாழும் ஏராளமான மனிதர்களை நாம் பார்க்கலாம்.

வாரணாசி :

வாரணாசி :

சில நாட்கள் காசியில் தங்கி அதனை சுற்றிப்பார்த்தால் இந்திய கலாச்சாரத்தை பற்றி மட்டுமில்லாமல் நம்முடைய சுயத்தை பற்றியும் நம்மால் புரிதலும் முற்றாக மாறிவிடும் என்றே சொல்லலாம்.

காசி நகரை பற்றிய விரிவான தகவல்களையும், அங்கிருக்கும் தங்கும் விடுதிகள் பற்றிய விவரங்களையும் தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

sergio Carbajo

மதுரை :

மதுரை :

வாரணாசிக்கு அடுத்தபடியாக இந்தியாவில் இருக்கும் பழமையான நகரமென்றால் அது வைகை நதி நாகரீகம் செழித்த மதுரை மாநகரம் தான். தென் தமிழகத்தில் 2500 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து இயங்கிவருகிறது.

கி.மு 3ஆம் நூற்றாண்டிலேயே சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமையும் மதுரைக்கே உரியதாகும். இன்றும் இந்நகரம் தமிழ் கலாச்சாரத்தின் மையமாக திகழ்கிறது என்றே சொல்லலாம்.

மதுரை :

மதுரை :

மதுரை நகரின் உயிர்நாடியாக இருப்பது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆகும்.பாண்டிய மன்னர்களால் முதலில் கட்டப்பட்டு பின்னர் இஸ்லாமிய படைஎடுப்பினால் அழிந்து போய் 15 ஆம் நூற்றாண்டில் நாயக்கர் ஆட்சி காலத்தில் புதுப்பொழிவு பெற்று தமிழர் கட்டிடக்கலையின் மகத்துவத்தை உலகுக்கு பறைசாற்றுகிறது இக்கோயில்.

Surajram

மதுரை :

மதுரை :

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு சங்ககால பாடலில் மதுரை மீனாட்சி அம்மனுக்கு வேப்பம் பூ மாலை சூட்டும் வழக்கத்தை பற்றிய குறிப்புகள் உண்டு. அந்த சடங்கானது இன்றும் அதன் தன்மை மாறாமல் பின்பற்றப்பட்டு வருவதே மதுரையின் பழமைக்கு சான்றாகும்.

இக்கோயிலின் மூலவராக மீன் போன்ற கண்களையுடைய மீனாட்சி அம்மன் உடையார் சொக்கநாதருடன் அருள்பாலிக்கிறார்.

மதுரை :

மதுரை :

தமிழரின் வீர விளையாட்டுகளில் முக்கியமானதான ஜல்லிக்கட்டுக்கு பெயர்போன ஊர் மதுரை ஆகும். பொங்கல் பண்டிகை சமயத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டை காண உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருவதுண்டு.

ஈராயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த வீரவிளையாட்டு மிருக நலனுக்கு எதிரானது என்று இந்திய உச்ச நீதிமன்றத்தால் கடந்த இரண்டு ஆண்டுகளாக் தடை செய்யப்பட்டிருக்கிறது.

மதுரை :

மதுரை :

நவீன யுகத்தின் தாக்கம் இருந்தாலும் இன்றும் தன்னளவில் தமிழர் மரபுகளை பாதுக்காப்பதில் மதுரைக்கு நிகராக வேறு நகரமே இல்லை எனலாம்.

இதுவரை மதுரைக்கு வாராதவர்கள் நிச்சயம் ஒருமுறையாவது வந்து மதுரை நகரம் முழுவதையும் சுற்றிப்பாருங்கள். எப்பேர்ப்பட்ட பாரம்பரியம் உடையவர்கள் நாம் என்பதை தெரிந்துகொள்ள சிறந்த வாய்ப்பாக அப்பயணம் அமையும்.

மதுரை :

மதுரை :

கள்ளழகர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை நோக்கி வந்துகொண்டிருக்கும் ஒரு காட்சி. மீனாட்சி திருக்கல்யாண வைபவத்தின் முக்கிய நிகழ்வாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு இருக்கிறது.

மதுரை :

மதுரை :

மதுரைக்கு தூங்கா நகரம் என்ற அடைமொழி உண்டு. அதற்கு காரணம் அதிகாலை மூன்று மணிக்கும் கூட மதுரையில் சுடச்சுட இட்லி கிடைக்கும் என்று கூறுவது உண்டு.

மதுரையில் நாவூறவைக்கும் செட்டிநாடு உணவுகளையும், ஜிகிர்தண்டாவையும் சுவைத்திட மறந்துவிடாதீர்கள்.

மதுரை

மதுரை

அல்லிக்கு பெயர்போன மதுரை மாநகரை பற்றிய மேலும் பல பயனுள்ள தகவல்களையும், மதுரையில் இருக்கும் தங்கும் விடுதிகள் பற்றிய விவரங்களையும் தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+