» »வருடத்தின் அனைத்து நாள்களும் செல்ல தகுந்த மிகச்சிறந்த இடங்களைத் தெரியுமா?

வருடத்தின் அனைத்து நாள்களும் செல்ல தகுந்த மிகச்சிறந்த இடங்களைத் தெரியுமா?

Posted By: Udhaya

நீங்கள் எந்த மாதத்தில் சுற்றுலா செல்ல திட்டமிட்டாலும் கவலையே இல்லை. அனைத்து நாள்களும் செல்ல ஏற்ற வகையில் உங்களுக்காக சுற்றுலாத் தளங்களை உங்கள் கண்முன்னே நிறுத்துகிறோம்.

உங்களுக்கு இயற்கை சுற்றுலா போகணுமா இல்லை தனிமையில் உங்கள் காதலியுடன் சுற்றுலா செல்லவேண்டுமா? அப்படி எதும் இல்ல நண்பர்களுடன் தன்னந்தனியே சுற்றுலா செல்லவேண்டும் என்றாலும் உங்களுக்கு ஒரே இடத்தில் அனைத்தையும் காட்ட தயாராக இருக்கிறோம். ஒரே இடத்திலா?

நீங்கள் வருடத்தின் எந்த நாளில் இன்பச் சுற்றுலா ஏற்பாடு செய்தாலும், எந்த வித சிக்கலும் இன்றி நீங்கள் போக வேண்டிய இடம் கேரளா. ஆம் கடவுளின் தேசமான கேரளாதான்.

கொழுத்தும் வெய்யில்

கொழுத்தும் வெய்யில்

ஏப்ரல், மே மாதங்களில் தென்னிந்தியாவில் வெய்யில் வாட்டி வதைக்கும். அந்த நேரத்தில் சுற்றுலா செல்லவிரும்புவர்கள் கேரளத்திற்கு சுற்றுலா செல்லலாம்.

ஆத்தாடி எத்தன பாம்பு. இது என்ன ராஜநாக கோட்டையா?

கேரளத்தில் சுற்றுலா

கேரளத்தில் சுற்றுலா

கேரளத்தில் உள்ள தேக்கடி, வாகமன் உள்ளிட்ட இடங்களில் வெப்பநிலை 10 முதல் 27 டிகிரி வரை இருக்கும்.

இந்த காலக்கட்டங்களில் தேக்கடி மற்றும் வாகமனுக்கு சுற்றுலா செல்வது சிறந்ததாகும். அதற்கான பட்ஜெட்டும் குறைவுதான்.

வயநாட்டுக்கு செல்வோம்

வயநாட்டுக்கு செல்வோம்

கோழிக்கோடு, கண்ணூர், ஊட்டி மற்றும் மைசூர் நெடுஞ்சாலைகளிலிருந்து வயநாடு பகுதிக்கு செல்ல கிளைச்சாலைகள் பிரிகின்றன.

எனினும் சென்னையிலிருந்து வரும்போது ஓசூர், மைசூர் வழியாக வருவது சிறந்தது. அல்லது

கோயம்புத்தூரிலிருந்து பாலக்காடு, மலப்புரம் வழியாக வயநாட்டை அடையலாம்.

கால நேரம்

கால நேரம்


காலை 6 மணிக்கு கிளம்புவதாகக் கொண்டால், சென்னையிலிருந்து வயநாடு (மைசூரு வழியாக ) 12 மணி நேரம் ஆகும்.

சென்னையிலிருந்து வயநாடு (கோயம்புத்தூர் வழியாக) 15 மணி நேரம் தோராயமாக
பிடிக்கும்.

மாநிலத்தின் தென் மற்றும் நடுப்பகுதியிலிருந்து வரும் மக்கள் கோயம்புத்தூர் பாலக்காடு வழியாக வருவது சிறந்தது.

வயநாடு சுற்றுலா

வயநாடு சுற்றுலா

வயநாடு சுற்றுலா பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள கிளிக்குங்கள்.

நவீன காலத்திலும் குள்ளமனிதர்கள் அதுவும் தமிழ்நாட்டில் எங்கு தெரியுமா?

 கேரளாவில் சீசனுக்கேற்ற சுற்றுலாத் தளங்கள்

கேரளாவில் சீசனுக்கேற்ற சுற்றுலாத் தளங்கள்

கேரள மாநிலத்தில் நீங்கள் எந்த சீசனிலும் சுற்றுலா செல்லும் வகையில் நிறைய சுற்றுலாத் தளங்கள் உள்ளன.

 கோடைக்காலம்

கோடைக்காலம்

நீங்கள் கோடைக்காலத்தில் சுற்றுலா செல்ல ஏற்ற இடம் வாகமன்தான். கோட்டயம் - இடுக்கி மாவட்டங்களுக்கு இடையே அமைந்துள்ள இந்த இடம் கோடைக்காலத்துக்கு மிகச் சிறந்த இடமாகும்.

வாகமன் எப்படி செல்வது

வாகமன் எப்படி செல்வது

மொத்த மாநிலமும் வெய்யில்லால் வாடிக்கொண்டிருக்கும்போது வாகமன் மட்டும் தேயிலைத் தோட்டங்களின் நடுவே ஆர்ப்பரிக்கும் சூழ்நிலையை அனுபவித்துக் கொண்டிருக்கும்.

சென்னையிலிருந்து 11 மணி நேரத்தில் 614 கிமீ தொலைவில் அமைந்துள்ளது வாகமன்.

மதுரையிலிருந்து பக்கத்தில் அமைந்துள்ளதால் இது தென் தமிழகத்தைச் சார்ந்தவர்களுக்கு மிகவும் பிடித்தப் பகுதியாகும்.

பெரியார் தேசிய பூங்கா

பெரியார் தேசிய பூங்கா

பெரியார் தேசிய பூங்கா மற்றும் பாதுகாக்கப்பட்ட காடுகள் வனத்துறையின் கீழ் வரும் இந்த பகுதி வாகமன் அருகே உள்ளது.

 வாகமன் பற்றிய முழுமையான தகவல்களுக்கு

வாகமன் பற்றிய முழுமையான தகவல்களுக்கு


வாகமன் பற்றிய முழுமையான தகவல்களுக்கு இதை கிளிக்குங்கள்

Read more about: travel, tour