Search
  • Follow NativePlanet
Share
» »உங்க ஊருல APSRTC பஸ் கவுண்டருக்கு இருக்குதா? நீங்களும் திருப்பதி பெருமாளை சிறப்பு தரிசனம் செய்யலாம்!

உங்க ஊருல APSRTC பஸ் கவுண்டருக்கு இருக்குதா? நீங்களும் திருப்பதி பெருமாளை சிறப்பு தரிசனம் செய்யலாம்!

உலகப்பிரசித்தி பெற்ற திருப்பதி எழுமலையானை வணங்க நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வருகை தருகின்றனர். அதில் பலரும் ஏற்கனவே டிக்கெட் வாங்கி வந்து விடுகின்றனர். அப்படி ரூ.300 சிறப்பு தரிசனம் செய்தால் தான் குறிப்பிட்ட நேரத்திற்குள் சுவாமி தரிசனம் செய்ய முடியும், இலவச தரிசனம் செய்ய குறைந்தது 7-8 மணி நேரமாவது காத்திருக்க நேரிடுகிறது. ஆனால், இந்த ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளும் ஆன்லைனில் சட்டென்று தீர்ந்து விடுகிறது. ஆனால் சிரமிமில்லாமல் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வாங்க ஒரு ஈஸியான வழி இருக்கிறது!

சட்டென்று தீர்ந்து விடும் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள்

திருமலை திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க விஐபி டிக்கெட், ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட், சேவை டிக்கெட் என பல விதமான டிக்கெட்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிட்டு வருகிறது. தரிசனம் செய்வதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே இந்த ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட், தங்குமிடம் ஆகியவற்றிற்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும். இந்த புக்கிங் ஓபன் ஆன உடனே ஒரு மணி நேரத்திலேயே சிறப்பு தரிசன டிக்கெட்களும், தங்குமிடங்களும் சட்டென்று தீர்ந்து விடுகின்றது.

tirupatibalajidarshanticketsveryeasilyviaapsrtc1

சுலபமாக ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் பெற வழி இதோ

ஆன்லைனில் பல மணி நேரம் காத்திருந்தாலும் கூட சில சமயங்களில் நமக்கு ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் கிடைப்பது இல்லை. யார் தான் புக் செய்கிறார்கள்? எங்கே தான் டிக்கெட் போகிறது என்பது நாம் அறியாத விஷயம். ஆனால் அதே ரூ.300சிறப்பு தரிசன டிக்கெட்டை சட்டென்று மிக சுலபமாக வாங்க ஒரு வழி இருக்கிறது. நீங்கள் ஆன்லைனில் காத்து கிடக்க தேவையில்லை. ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் மிக சுலபமாப இந்த ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை பெறலாம்.

APSRTCயின் அசத்தல் ஆஃபர்

ஆந்திரப் பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் தினமும் 1,000 ஷீக்ர தரிசன டிக்கெட்டுகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. திருப்பதிக்கு APSRTC பேருந்தில் செல்லும் பக்தர்கள் திருமலை தரிசன டிக்கெட்டுக்கு ரூ.300 கூடுதலாக செலுத்தி முன்பதிவு செய்யலாம். திருமலை தரிசனம் செய்ய APSRTC திருமலை தரிசன டிக்கெட்டை ஆன்லைனில் பதிவு செய்யும் இந்த வசதியை பக்தர்கள் பெறலாம். இதே டிக்கெட் உங்கள் ஊர்களில் இருக்கும் APSRTC பஸ் கவுண்டர்களிலும் கிடைக்கும்.

tirupatibalajidarshanticketsveryeasilyviaapsrtc

ஆன்லைனில் டிக்கெட் புக் செய்வது எப்படி

1. முதலில் APSRTCயின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான https://www.apsrtconline.in/oprs-web/ க்கு செல்லுங்கள்.

2. உங்களது போன் நம்பர், மெயில் ஐடி கொடுத்து உள்நுழைவும்.

3. நீங்கள் இருக்கும் ஊர்களில் இருந்து திருப்பதி செல்லும் APSRTC பேருந்தை க்ளிக் செய்யவும்.

4. 'ஷோ லேஅவுட்' என்கிற விரிவாக்கப்பட்ட காட்சிக்கு வரிசையில் கிளிக் செய்யவும்.

5. உங்களுக்கு பிடித்த இருக்கைகளின் எண்ணிக்கையைத் தேர்ந்தெடுக்கவும்.

6. 'TTD தரிசன விவரங்கள்' என்பதில், தரிசன தேதியைத் தேர்ந்தெடுத்து, தேடலைக் கிளிக் செய்யவும்.

7. 11:00 AM அல்லது 4:00 PM ஸ்லாட்டைக் கிளிக் செய்து, கிடைப்பதைச் சரிபார்க்கவும்.

8. கிடைக்கவில்லை என்றால் தரிசனத்திற்கான வேறு தேதியைச் சரிபார்த்து, மீண்டும் தேடு என்பதைக் கிளிக் செய்யவும்.

9. தரிசன டிக்கெட்டுகள் கிடைத்த உடனே, பயணிகள் விவரங்களை கீழே நிரப்பவும்.

10. பணம் செலுத்தும் முன் விவரங்களை மீண்டும் (பயணம் & தரிசன தேதி) சரிபார்க்கவும்.

11. அனைத்து விவரங்களும் சரியாக இருந்தால், பணம் செலுத்தவும்.

12. பணம் செலுத்தியதும் பேருந்து பயணம் மற்றும் தரிசன டிக்கெட்டுகள் உருவாக்கப்படும்.

13. டிக்கெட்டுகளை டவுன்லோட் செய்து, திருமலை பஸ் ஸ்டாண்டில் காண்பித்து ரெசிப்ட் வாங்கிக் கொள்ளவும். அவ்வளவு தான், சிறப்பு தரிசன டிக்கெட் தயார் ஆகிவிட்டது!

ஆப்லைனிலும் டிக்கெட் வாங்கலாம்

இதே டிக்கெட்டுகளை நீங்கள் உங்கள் ஊர்களில் இருக்கும் APSRTC பஸ் கவுண்டர்களுக்குச் சென்று உங்களது விவரங்கள் வழங்கி டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். சுலபமாக திருப்பதி பெருமாளை சிறப்பு தரிசனத்தில் சென்று வழிபட்டு வாருங்கள் மக்களே!

More News

    Read more about: tirupati news
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+