Search
  • Follow NativePlanet
Share
» »என்ன? ரயில் டிக்கெட் புக் செய்வதில் மூத்த குடிமக்களுக்கான சலுகை மீண்டும் கொடுக்கப்படுகிறதா?

என்ன? ரயில் டிக்கெட் புக் செய்வதில் மூத்த குடிமக்களுக்கான சலுகை மீண்டும் கொடுக்கப்படுகிறதா?

சமீபகாலமாக எங்கு பார்த்தாலும் ரயில் டிக்கெட் புக் செய்வதில் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்திருந்த மூத்த குடிமக்களுக்கான சலுகை மீண்டும் தொடங்கியுள்ளது என்ற செய்தியை நாம் படித்து வருகிறோம். இந்திய ரயில்களில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு கட்டணத்தில் 50 சதவீதம் வரை தள்ளுபடி முன்பு கொடுக்கப்பட்டு வந்தது. இப்போது மீண்டும் தொடங்கியுள்ளதாக பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன!

உண்மையிலே சலுகைகள் மீண்டும் வந்துவிட்டதா

இந்திய ரயில்வேயில் மூத்த குடிமக்கள் சலுகைகள் மீண்டும் வருவதைப் பற்றி சமூக ஊடக தளங்களில் பல்வேறு இடுகைகள், பதிவேற்றங்கள் மற்றும் செய்திகள் சுற்றி வருகின்றன. மறுபுறம், இந்த அறிக்கைக்கு முரணான பல செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால் உண்மை செய்தி என்ன? ரயில்களில் மூத்த பயணிகளுக்கான சலுகைகளை இந்திய ரயில்வே மீண்டும் தொடங்குகிறதா? இந்த குழப்பமான அறிக்கைகளின் விடை இங்கே.

1

சமீபகாலமாக எழும் கேள்விகள்

ஜூலை 1 ஆம் தேதி முதல் சமூக ஊடக இடுகையில் மத்திய ரயில்வே அமைச்சகம் மூத்த குடிமக்களுக்கான ரயில் டிக்கெட்டுகளுக்கான சலுகையை மீண்டும் தொடங்குவதாகக் கூறி ஒரு அறிவிப்பைக் குறிப்பிட்டது என்று தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

ஆண், பெண் மூத்த குடிமக்களுகான சலுகை

அதன்படி 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஆண் பயணிகளும் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது 40 சதவீத சலுகையைப் பெறலாம் என்று சமூக ஊடக இடுகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 58 வயதுக்கு மேற்பட்ட பெண் பயணிகள், ரயில் டிக்கெட்டில் 50 சதவீத சலுகை பெறலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் செய்தி

மூத்த குடிமக்கள் சலுகை குறித்த பதிவை பலர் சமூக ஊடக தளங்களில் மேலும் பகிர்ந்து வருகின்றனர். இவை அனைத்தும் பெரும் வதந்தியை கிளப்பி நெட்டிசன்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. ஃபேஸ்புக்கில் வைரலாகும் இந்தப் பதிவு ஒரு புரளி என்பதுதான் உண்மை. சமீபத்திய புதுப்பிப்புகள் மற்றும் செய்திகள் இந்த கூற்றுகள் வெறுமனே போலியானவை என்று கூறுகின்றன.

ரயில்வே தரப்பில் இன்னும் விளக்கம் வரவில்லை

ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது மூத்த குடிமக்கள் சலுகையை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து இந்திய ரயில்வே அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. எனவே, சலுகை வழங்குவதாகக் கூறப்படும் செய்திகள் தவறானவை என்பதுதான் உண்மை.

நீண்டகாலமாக பயணிகள் எதிர்பார்ப்பு

கொரோனவால் நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான சலுகைகள் 2020 இல் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பூதாகாரமாக மாறுவதற்கு முன்பு, 58 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்களுக்கு மூத்த குடிமக்களுக்கு சலுகைகள் இருந்தன. கொரானா தொற்றுக்கு முந்தைய காலங்களில் மூத்த குடிமக்களுக்குக் கிடைத்த சலுகையை குறைந்தபட்சம் ஸ்லீப்பர் வகுப்பு மற்றும் III ஏசியில் மதிப்பாய்வு செய்து பரிசீலிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக பயணிகள் குரல் கொடுத்து வந்தனர்.

இது முற்றிலும் பொய்யான தகவலே

இந்திய ரயில்வே இந்தச் சலுகையை ஓரிரு ஆண்டுகளுக்கு முன் அனுமதித்தது உண்மைதான். ஆனால் தற்போது, மூத்த பயணிகளுக்குத் தகுதியான தள்ளுபடிகள் எதுவும் இல்லை. மார்ச் 2020 இல், அதிகாரிகள் இந்த சலுகைத் திட்டத்திற்கும் மேலும் சில ரயில் டிக்கெட் சலுகைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தனர். இனியும் குழப்பம் வேண்டாம். ரயில் டிக்கெட் புக் செய்யும் போது மூத்த குடிமக்களுக்கான சலுகைகள் என்று எதுவும் இப்போதைக்கு இல்லை.

More News

    Read more about: irctc indian railways
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+