» »இந்தியாவில் அப்துல்கலாம் தீவு எங்க இருக்கு தெரியுமா?

இந்தியாவில் அப்துல்கலாம் தீவு எங்க இருக்கு தெரியுமா?

Written By: Udhaya

அதான் நல்லா தெரியுமே.. ராமேஸ்வரம் தீவுதானனு கேட்காதீங்க.. இது தமிழ்நாட்டில் இல்லை. நாடு முழுவதும் சிறப்புக்குரியவர் அப்துல்கலாம் என்பதற்கு இது ஒரு சான்று.

அப்போ அந்த தீவு எங்க இருக்கு? வாங்க தெரிஞ்சிக்கலாம்.

 எங்கே உள்ளது

எங்கே உள்ளது

அப்துல்கலாம் தீவு ஒடிசா மாநிலக் கடலோரம் அமைந்துள்ள ஓர் தீவாகும்.

 எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

ஒடிசா மாநிலத் தலைநகரான புவனேஸ்வரிலிருந்து கிட்டத்தட்ட 150 கிமீ தொலைவில் பத்ரக் மாவட்டத்தில் சண்டிபாலி அருகே அமைந்துள்ளது.

 மறுபெயர்

மறுபெயர்

ஆரம்பத்தில் இந்த தீவின் பெயர் வீலர் தீவு (Wheeler Island)ஆகத் தான் இருந்தது. அப்துல்கலாமுக்கு சிறப்பு செய்வதற்காகத்தான் இந்த பெயரை வைத்துள்ளனர்.

Sniperz11

 ஏவுகணை

ஏவுகணை

இந்த தீவுக்கு அருகில் தமரா என்று ஒரு துறைமுகம் உள்ளது. இதன் அருகிலேயே நாட்டின் ஏவுகணை சோதனைத்தளம் அமைத்துள்ளது இந்திய அரசு.

rudal Akash.

 வங்கக்கடலில்...

வங்கக்கடலில்...

ஒடிசாவின் சண்டிப்பூரிலிருந்து 70 கிமீ தெற்கே கடலோரத்திலிருந்து 10 கிமீ தொலைவில் வங்காள விரிகுடாவில் அமைந்துள்ளது.

 பரப்பளவு

பரப்பளவு

இரண்டு கிமீ நீளமுள்ள இதன் பரப்பளவு ஏறதாழ 390 ஏக்கர் உள்ளது. இங்கிருந்து இந்தியாவின் பல ஏவுகணைகள், தொலைதூர ஏவுகணைகள் உட்பட, சோதனையோட்டமாக ஏவப்படுகின்றன.

 சாலை வசதி இல்லை

சாலை வசதி இல்லை

எந்தவித சாலை மற்றும் வானூர்தி இணைப்பும் இல்லாத இந்தத் தீவிற்கு கப்பல்கள் மூலமே செல்ல முடியும்.

 எப்போது மாற்றப்பட்டது

எப்போது மாற்றப்பட்டது

வீலர் தீவு மறைந்த இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் நினைவாக அப்துல்கலாம் தீவு என செப்டம்பர் 4, 2015 அன்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

 சந்திரபாகா கடற்கரை

சந்திரபாகா கடற்கரை

சந்திரபாகா பீச் என்றழைக்கப்படும் இந்த அழகிய கடற்கரை கொனார்க் சூரியக்கோயில் ஸ்தலத்திலிருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ளது. குளுமையான கடற்காற்று மற்றும் தூய்மையான கடல் நீர் போன்றவை இங்கு பார்வையாளர்களை வரவேற்று வசீகரிக்கின்றன.

29paayal

 ஜகன்னாதர் கோயில்

ஜகன்னாதர் கோயில்


ஒடிஷாவின் மிகப் பிரபலமான கோயில்களுள் ஒன்றான ஜகன்னாதர் கோயில், பூரியின் கடற்கரை நகரத்தில் அமைந்துள்ளது. ஜகன்னாதர், பாலபத்ரா மற்றும் சுபத்ரா தேவி ஆகிய முக்கடவுளர்களும் அருள் பாலிக்கும் ஜகன்னாதர் கோயிலுக்கு நிம்மதியை நாடி எண்ணிலடங்கா பக்தர்கள் வருகை புரிந்த வண்ணம் உள்ளனர்.

Shouvik Seal

Read more about: travel, island