» »தங்க முக்கோணம் என்றால் என்ன தெரியுமா?

தங்க முக்கோணம் என்றால் என்ன தெரியுமா?

Posted By: Udhaya

தங்க முக்கோணம் என்பது என்னவென்று தெரிந்துகொள்ள இந்த இடங்களுக்கெல்லாம் பயணிக்கவேண்டும்.

ஒரிசா மாநிலத்தின் இந்த இடங்கள்தான் தங்கமுக்கோணம் என்று அழைக்கப்படுகிறது. வாருங்கள் சுற்றுலா செல்வோம்.

தங்க முக்கோணம்

தங்க முக்கோணம்


தங்க முக்கோணம் என்ற பெயரில் அழைக்கப்படும் புபனேஷ்வர், பூரி மற்றும் கொனார்க் ஆகிய மூன்று முக்கியமான கோயில் நகரங்கள் ஒடிசாவின் உன்னத அடையாளங்களாக வீற்றிருக்கின்றன. இந்த மூன்று ஸ்தலங்களிலும் முறையே லிங்கராஜ் கோயில், ஜகந்நாதர் கோயில் மற்றும் சூரியக்கோயில் ஆகியவை அமைந்திருக்கின்றன.

புபனேஷ்வர்

புபனேஷ்வர்


ஒடிஷா மாநிலத்தின் தலைநகரமான புபனேஷ்வர் இந்தியாவின் கிழக்கு கடற்கரைப்பகுதியில் முக்கியமான சுற்றுலா நகரம் எனும் அடையாளத்துடன் கம்பீரமாக வீற்றிருக்கிறது. மஹாநதியின் தென்மேற்கு கரையை ஒட்டி இந்த நகரம் அமைந்துள்ளது.

வரலாற்று காலத்தில் கலிங்க தேசம் என்று அழைக்கப்பட்ட இந்த பிரதேசம் வெகு உன்னதமான கட்டிடக்கலை பாரம்பரியத்துக்கு பிரசித்தி பெற்றுள்ளது. இந்த புராதன நகரம் 3000 வருடங்கள் பழமையான தொன்மையை கொண்டுள்ளது.

Archbik

 பூரி

பூரி

கிழக்குப்புற இந்திய மாநிலமான ஒரிஸ்ஸாவில் உள்ள நகரமான பூரி, வங்காள விரிகுடாவில் பெருமை பொங்க வீற்றிருக்கிறது. ஒரிஸ்ஸாவின் தலைநகரமான புவனேஷ்வரிலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் உள்ள பூரி, அதன் பெருமைக்கு காரணமாக விளங்கும் இங்குள்ள பூரி ஜகன்னாதர் கோயிலின் பெயரைக் கொண்டு ஜகன்னாத் பூரி என்றும் வழங்கப்படுகிறது. இந்தியாவில் வாழும் இந்துக்கள் மேற்கொள்ளக்கூடிய புனித யாத்திரையானது, பூரிக்கு ஒரு முறையேனும் சென்று வராமல் நிறைவடைவதில்லை என்று மக்கள் கருதுகின்றனர். துர்கா, லக்ஷ்மி, பார்வதி, சதி மற்றும் ஷக்தி ஆகியோருடன் ராதாவும் கிருஷ்ணனோடு உறைந்திருக்கும் ஒரே இந்தியக் கோயில் என்ற பெருமையையும் கொண்டது ஜகன்னாதர் கோயில்.

Bernard Gagnon

 கொனார்க்

கொனார்க்

கொனார்க் நகரம் உலகெங்கிலுமிருந்து சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் அளவிற்கு பல்வேறு புராதன கட்டிடக்கலை அம்சங்களை தன்னுள் அடக்கியிருக்கிறது. இந்த நகரத்தின் முக்கிய அடையாளமாக ‘சூரியக்கோயில்' எனும் அதிஅற்புதமான கோயில் இடம் பெற்றுள்ளது. உலகத்திலுள்ள அற்புதமான கட்டிடக்கலை படைப்புகளில் இந்த சூரியக்கடவுள் கோயிலும் ஒன்று என்பது இந்தியர் அனைவருமே பெருமைப்படத்தக்க விஷயம். கொனார்க் எனும் பெயரும் கூட ‘கோனா' மற்றும் ‘அர்க்கா' எனும் சொற்களிலிருந்து பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ‘கோனா' என்பது கோணத்தையும் ‘அர்க்கா' என்பது சூரியனையும் குறிக்கிறது. சூரியனுக்கான கோயில் அமைந்துள்ள இடம் என்பதால் இந்த பெயர் வழங்கப்பட்டிருக்கிறது

Raveesh Vyas

Read more about: travel, temple