» »காளிஜெய் கோயிலின் மகத்துவம் தெரியுமா?

காளிஜெய் கோயிலின் மகத்துவம் தெரியுமா?

Posted By: Udhaya

ஒடிசா மாநிலம் சிலிக்கா ஏர் பகுதியில் அமைந்துள்ளது இந்த காளிஜெய் கோயில். இது காளியம்மனுக்கான கோயில் ஆகும். இந்த கோயில் குறித்து கேள்விப்படும் செய்திகள் அதிசயமாகவும், அபூர்வமாகவும் இருக்கின்றன. மேலும் இங்குள்ள சுற்றுலா அம்சங்களைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் ஆவலாக இருப்பீர்கள் என நம்புகிறோம். வாருங்கள் சிலிக்கா ஏரியில் காளி கோயிலுக்கு ஒரு சுற்றுலா சென்றுவருவோம்.

 ஒடிசாவின் காளி

ஒடிசாவின் காளி


ஒடிசா மாநிலத்தின் முதன்மை தெய்வமாக வணங்கப்படும் காளி இங்கு காளிஜெய் என்று வணங்கப்படுகிறார்.

Aruni Nayak

பொங்கல் விழா

பொங்கல் விழா

தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் விழாவைப் போல மகரசங்கராந்தியாக அறுவடைத் திருநாள் கொண்டாடப்படுகிறது. அந்நாளில் நாம் சூரியனுக்கு படைப்பது போல இவர்கள் காளிக்கு படையல் இட்டு பொங்கலிடுகிறார்கள்.

Krupasindhu Muduli

வரலாறு

வரலாறு

புதுமணப்பெண்ணான ஜெய், தன் கணவன் வீடான சிலிக்கா தீவுக்கு செல்ல தன் தந்தையுடன் வந்தபோது ஏரியில் ஏற்பட்ட புயலில் காணாமல் போய்விட, அவளது தந்தை அவளைத் தேடி அலைந்தாராம். இறுதியில் அவளைக் கண்டுபிடிக்கமுடியாமல் போய்விட்டது. அந்த பெண்தான் காளியின் வடிவில் இங்கு வீற்றிருப்பதாக ஆன்மீக நம்பிக்கையுள்ள ஒரு பெரியவர் கூறுகிறார்.

Krupasindhu Muduli

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?


ஒடிசா தலைநகர் புவனேஸ்வரிலிருந்து 2 மணி நேரத் தொலைவில் அமைந்துள்ளது இந்த கோயில் தீவு.

புவனேஸ்வரிலிருந்து விசாகப்பட்டினம் செல்லும் சாலையில், குர்தா, தாங்கி, குகுடி வழியாக பார்குல்லை அடைந்தால் அங்கிருந்து கடல்வழியாக இந்த தீவுக்கு செல்லலாம்.

காலநிலை

காலநிலை

பெரிதாக காலநிலை என்று குறித்துக்கொள்ளத் தேவயில்லை. எனினும் புயல் மழை காலங்களில் தவிர்த்தல் நலம்.

Krupasindhu Muduli

Read more about: travel, temple, odisha