Search
  • Follow NativePlanet
Share
» »சுவாமி மலைக்கு ஒரு ஆன்மீக தரிசனம் செல்வோம் வாங்க

சுவாமி மலைக்கு ஒரு ஆன்மீக தரிசனம் செல்வோம் வாங்க

சுவாமி மலைக்கு ஒரு ஆன்மீக தரிசனம் செல்வோம் வாங்க

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திற்கு மிக அருகில் உள்ள ஒரு நகரம் சுவாமிமலை. இது முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்றாகும். இங்கு ஒரு ஆன்மீகத் தரிசனம் செய்யலாம் வாருங்கள்.

 பெயர்க்காரணம்

பெயர்க்காரணம்

நேரடியாக மொழிபெயர்த்தால், சுவாமிமலை என்பதற்கு கடவுளின் மலை என்று பொருள் படும். ஆனால் சுவாமிமலையின் பண்டைகாலப் பெயர் திருவேரகம் என்பதாகும். இவ்விடத்தினைச் சுற்றிலும் தெய்வ
Jothi Balaji

ஒரே பள்ளி

ஒரே பள்ளி

தமிழ் கடவுளான முருகப் பெருமானின் ஆறு படைவீடுகளில் சுவாமிமலையும் ஒரு படைவீடாகும். மாநிலத்திலேயே வெண்கலக் காசுகள் செய்யக் கற்றுத்தரும் ஒரே பள்ளி இங்குதான் உள்ளது.
Ravichandar84

 நெல்லும், கரும்பும்

நெல்லும், கரும்பும்

இயற்கையாகவே வேளாண்மைப் பொருளாதாரத்தைச் சார்ந்துள்ள இந்நகரத்தில் உற்பத்தி செய்யப்படும் இரண்டு வேளாண்மைப் பொருள்கள் நெல்லும், கரும்புமாகும்.
UnreachableHost

 காவிரியின் கிளையாறு

காவிரியின் கிளையாறு


வரலாற்றுப் பின்புலம் காவிரியாற்றின் கிளையாறு ஒன்றின் கரையில் அமைந்துள்ள சுவாமிமலையானது முருகப் பெருமான் என்று அழைக்கப்படும் கார்த்திகேயக் கடவுளின் அறுபடைவீடுகளில் நான்காவது படைவீடாகக் கருதப்படுகிறது.

பா.ஜம்புலிங்க

 உரைத்த தலம்

உரைத்த தலம்

புராணங்களின்படி, முருகப் பெருமான் "ஓம்" என்னும் பிரணவ மந்திரத்தின் பொருளை தனது தந்தையான சிவபெருமானுக்கு உரைத்த தலம் சுவாமிமலையாகும். இக்கோவிலின் ராஜகோபுரத்தில் செதுக்கப்பட்டுள்ள சிலைகளில், மந்திரத்தின் பொருளை விளக்கும் முருகப்பெருமான் குருவாகவும், மந்திரப் பொருளை காதில் கேட்கும் சிவபெருமான் சீடனாகவும் செதுக்கப்பட்டுள்ளனர்.

பா.ஜம்புலிங்கம்

 சுவாமிநாதன்

சுவாமிநாதன்


இப்புராணக் கதையின் விளைவாகவே இவ்வூருக்கு சுவாமிமலை என்னும் பெயர் வந்தது. மேலும் இங்குள்ள முருகப் பெருமான் சுவாமிநாதன் என்று அழைக்கப்படுகிறார்.

Rsmn

 திருவிழாக்கள்

திருவிழாக்கள்

கோவில்கள் நிறைந்த நகரமான கும்பகோணத்திற்கு வெகு அருகாமையில் அமைந்திருப்பதால், ஏராளமான பக்தர்களும் சுற்றுலாப்பயணிகளும் சுவாமிமலைக்கு வருகைபுரிகிறார்கள். ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் தேர்த்திருவிழா, மார்ச் மாதத்தில் நடைபெறும் பங்குனி உத்திரம் உள்ளிட்ட பிரபலமான திருவிழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன. மே மாதத்தில் வைகாசி விசாகத்திருவிழாவும், அக்டோபர் மாதத்தில் கந்த சஷ்டித்திருவிழாவும் கொண்டாடப்படுகின்றன

பா.ஜம்புலிங்கம்

 எப்படி செல்லலாம் ?

எப்படி செல்லலாம் ?

திருச்சி, மதுரை, சேலம், கோயமுத்தூர், பாண்டிச்சேரி போன்ற தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலிருந்து மிக எளிதாக பேருந்துகள் மூலம் தஞ்சாவூர் நகருக்கு வரலாம்.

தஞ்சாவூரில் உள்ள ரயில் நிலையத்தின் வழியாக பல ரயில்கள் செல்வதோடு மட்டுமல்லாமல் இங்கிருந்து 58 கி.மீ தூரத்திலுள்ள திருச்சி ரயில் சந்திப்பிலிருந்து நாட்டின் பல நகரங்களுக்கும் ரயில் சேவைகள் உள்ளன. மதுரை மற்றும் திருவனந்தபுரம் செல்லும் ரயில்கள் என அதிகமான சேவைகள் திருச்சி ரயில் நிலையம் வழியாக இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

More News

Read more about: travel temple
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+