» »சிக்கிமின் இந்த மூன்று நதிகள் பற்றி தெரியுமா?

சிக்கிமின் இந்த மூன்று நதிகள் பற்றி தெரியுமா?

Written By: Udhaya

புத்துணர்வு பெற விரும்புவோரை சுற்றுலாப் பயணங்கள் எப்போதுமே ஏமாற்றுவதில்லை. முன்னரே அறிந்த இடம் என்றாலும் அறியாத இடம் என்றாலும் பயண விரும்பிகளுகக்கு அற்புதமான அனுபவத்தை அளிக்கின்றன சுற்றுலாத் தலங்கள். அதிலும் உள்ளூர் மக்களால் 'சொர்கம்' என அழைக்கப்படும் அற்புதமான இயற்கை காட்சிகள் நிறைந்த, பனிகளால் சூழப்பட்ட சிகரங்களைக் கொண்ட, பூக்களால் நிறப்பப்பட்ட புல்வெளிகளுடன் காட்சியளிக்கும், பரிசுத்தமான நீரால் நிரப்பப்பட்ட நீர்நிலைகள் உள்ள இடத்திற்கு பயணித்தால் ஏற்படும் ஆனந்தத்தை அளவிடவா முடியும்? சிக்கிமின் இந்த மூன்று நதிகளைப் பற்றியும் தெரியுமா?

தீஸ்தா நதி

தீஸ்தா நதி


சிக்கிம் மாநிலத்தின் நீளமான நதியான தீஸ்தா நதி வெள்ளை நீர் சவாரி செய்ய மிகவும் பொருத்தமான இடம். ரத்தோங் பனியாற்றிலிருந்து உற்பத்தியாகும் இந்த நதி எண்ணற்ற பாறைகளையும், குன்றுகளையும் தாண்டி வங்கதேசத்தில் பிரம்மபுத்திரா ஆற்றுடன் கலக்கிறது.

PP Yoonus

 இலையுதிர் மரங்கள்

இலையுதிர் மரங்கள்

தீஸ்தா நதி கடந்து செல்லும் வழியெங்கும் அழகிய வெப்பமண்டல இலையுதிர் மரங்களையும், அல்ஃபைன் தாவரங்களையும் காணலாம். அதோடு தீஸ்தா நதியில் காற்று நிரப்பப்பட்ட படகுகளில் வெள்ளை நீர் சவாரி சென்று அஸ்ஸாமின் இயற்கையழகை கண்டு ரசிக்கும் அனுபவம் அற்புதமானது.

Anilrini

 கட்டுமரச் சவாரி

கட்டுமரச் சவாரி

தீஸ்தா நதியின் பெரும் அலைகளில் கட்டுமரச் சவாரி செய்வது சிலிர்ப்பூட்டும் அனுபவமாகும். இங்கு தீஸ்தா பஜார் மற்றும் மெல்லி நகரம் ஆகிய பகுதிகளில் குழுவாக சேர்ந்து கட்டுமரச்சவாரி செய்ய முடியும். எனவே சீறிப்பாய்ந்து செல்லும் தீஸ்தா நதியின் குளிர்ச்சியான நீரில் பயணம் செய்வதை சாகசப்பிரியர்கள் தவறவிட்டுவிடக் கூடாது.

Ibrahim Husain Meraj

ரங்கீத் நதி

ரங்கீத் நதி


சிக்கிமில்ல் ஓடும் நீளமான நதியான டீஸ்டா நதியின் துணை நதி இந்த ரங்கீத் நதியாகும். மேற்கு சிக்கிம் பகுதியில், இமயமலைகளில், உற்பத்தியாகும் இந்நதி, ஜோர்தாங்க், பெல்லிங்க், மற்றும் லெக்ஷிப் நகரங்களைத் தாண்டி பாய்கிறது. இது ஒரு வற்றாத ஜீவநதியாகும், கோடைகாலங்களில், இமயமலையிலிருந்து உருகும் பனி மூலமாகவும், மழைக்காலங்களில், பருவமழை மூலமாகவும் இந்நதியில் நீர் எப்போதும் நிறைந்துள்ளது.

Supreo75

மிதவைப்படகு சவாரி

மிதவைப்படகு சவாரி

மலையிலிருந்து இறங்குவதால், வேகத்துடன் சீறிப்பாய்கிறது. இந்நதியின் சீற்றம் மிதவைப்படகு சவாரி செய்வோருக்கு உற்சாகத்தைக் கொடுக்கிறது எனவே இவ்விடம் மிதவைப்படகு சவாரி செய்வோரின் சொர்க்கமாகக் கருதப்படுகிறது.இந்நதியில், தேசிய நீர்மின்சக்திக் கழகத்தின், 60 மெகாவாட் திறனுள்ள நீர் மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

Spurkait

லாசுங்க் சு', மற்றும் `லாசின் சு

லாசுங்க் சு', மற்றும் `லாசின் சு

சுங்க்தாங்க் நகரம் `லாசுங்க் சு', மற்றும் `லாசின் சு' என்கிற இரு நதிகள் சங்கமிக்கும் இடத்தில் அமந்துள்ளது. இந்த இரு நதிகளும் `டீஸ்டா' ஆற்றின் கிளையாறுகள் ஆகும்

Anjali.budakoti

Read more about: travel river forest sikkim summer

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்