» »வங்கதேசத்துக்கும் இந்தியாவுக்கும் எல்லையில் உள்ள இந்த பகுதியில் அப்படி என்ன சிறப்பு தெரியுமா?

வங்கதேசத்துக்கும் இந்தியாவுக்கும் எல்லையில் உள்ள இந்த பகுதியில் அப்படி என்ன சிறப்பு தெரியுமா?

Written By: Udhaya

காலம்காலமாக மேற்கு வங்கத்தில் குறிப்பிடதகுந்த மலைஸ்தலமாக திகழ்கிறது சிலிகுரி. தன்னிச்சையாக தன் தேவைகளை தீர்த்துக்கொள்ளும் இந்நகரத்திற்கு வருடம் முழுதும் ஏராளமான பயணிகள் வருகை தருகிறார்கள். பக்தோரா விமானநிலையம் மற்றும் ரயில் நிலையம் ஆகியவை சிலிகுரியின் சுற்றுலா மதிப்பை உயர்த்தியுள்ளன.

வங்கதேசத்துக்கும் இந்தியாவுக்கும் எல்லையில் உள்ள இந்த பகுதியில் அப்படி என்ன சிறப்பு தெரியுமா?

siliguri.co.in

சிலிகுரி வட மாவட்டங்களின் சுற்றுலாத் துறைக்கு அடித்தளமாக விளங்குகிறது. சுற்றியுள்ள மற்ற சிறிய ஊர்களுக்கும், சிலிகுரிக்கு அருகில் இருப்பதால் ஏராளமான பயணிகள் செல்கிறார்கள்.

சிலிகுரியைச் சுற்றி ஏராளமான சுற்றுலா இடங்கள் உள்ளன. இஸ்கான் கோவில், மஹாநந்தா வனவிலங்கு சரணாலயம், விஞ்ஞான நகரம், கரொனேஷன் பாலம், சலுகரா மொனாஸ்ட்ரி, மதுபான் பூங்கா, உம்ரோ சிங் படகு முகாம் என பலவகையான இடங்கள் உள்ளன.

வங்கதேசத்துக்கும் இந்தியாவுக்கும் எல்லையில் உள்ள இந்த பகுதியில் அப்படி என்ன சிறப்பு தெரியுமா?

SupernovaExplosion

இந்தியாவின் பிற பகுதிகளைப் போலவே சிலிகுரியிலும் தீபாவளி, பாய் டிகா, துர்கா பூஜா, காளி பூஜா, கணேஷ் பூஜா போன்ற பண்டிகைகள் இங்கு கொண்டாடப்படுகின்றன.

சிலிகுரியின் உள்ளூர் மக்கள், பல இடங்களில் இருந்து புலம்பெயர்ந்த மக்களாதலால் கிடைத்த உணவுப் பதார்த்தங்களை ருசிக்கிறார்கள். நகரத்தின் பாரம்பரியத்தை இது சிறிதளவு சிதைத்திருந்தாலும் உள்ளூர் கலாச்சாரம் இன்னமும் கடைபிடிக்கப்படுகிறது.

வங்கதேசத்துக்கும் இந்தியாவுக்கும் எல்லையில் உள்ள இந்த பகுதியில் அப்படி என்ன சிறப்பு தெரியுமா?

photos.wikimapia.org

சமீபகாலமாக பேரங்காடி (mall) கலாச்சாரம் சிலிகுரியிலும் பரவத்துவங்கியிருக்கிறது. இங்கிருக்கும் பேரங்காடிகளான காஸ்மோஸ், ஆர்பிட் ஆகியவை குறிப்பிடத்தக்க தளங்களாக இருக்கின்றன.

Read more about: travel, siliguri