Search
  • Follow NativePlanet
Share
» »நெல்லையில் இந்த நான்கு இடங்களுக்கு போக மறக்காதீங்க...!

நெல்லையில் இந்த நான்கு இடங்களுக்கு போக மறக்காதீங்க...!

'சொர்க்கமே என்றாலும்... அது நம்மூரைப் போல வருமா...' என்ற பாடல் வரிகள், சொந்த மாவட்டத்தை விட்டு, பெருநகரங்களுக்கு பணி நிமிர்த்தமாக இடம்பெயர்ந்தவர்களின் நினைவில் ஒரு முறையாவது வந்து செல்லாமல் இருக்காது. அந்தளவுக்கு சொந்த ஊர் செல்ல போகிறோம் என்றால் ஒவ்வொருவரின் மனதிலும் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறக்கும்.

அந்தவரிசையில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஊர் அம்பாசமுத்திரம். இது, புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. தாமிரபரணி ஆறு, அகஸ்தியர் நீர்வீழ்ச்சி, சிவன் கோயில் மற்றும் பாபநாசம் அணை உள்ளிட்ட பல இடங்களை வழங்கும் இப்பகுதி, பசுமையான காடுகள் நிறைந்த மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது.

nellaidistrict temple

அழகிய வசீகரத்துடன் பார்வையாளர்களை வசீகரிக்கும் இங்குள்ள காரையார் அணை, பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில், காரையார் அணை கட்டப்பட்டது. இப்போது, இப்பகுதியில் இந்த அணை குறிப்பிடத்தக்க அடையாளமாக உள்ளது.

வரலாற்று முக்கியத்துவம் அறிந்து செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு, அங்கு பிடிக்கப்படும் மீன்களின் சுவையை ஒரு போதும் அவர்களின் நாக்கில் இருந்து மறையாது. அதுமட்டுமின்றி, அங்குள்ள சொரிமுத்து அய்யனார் கோயிலுக்குச் சென்றால், கலாச்சார மற்றும் ஆன்மீக ஆய்வுகளுடன் உங்கள் பயண அனுபவம் மேலும் மெருகூட்டும்.

அகஸ்தியர் நீர்வீழ்ச்சி, தாமிரபரணி நதியால் உருவாக்கப்பட்ட ஏரிக்குள் அமைந்துள்ளது, இது மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி, பாபநாசம் படுகையில் தெற்கே அமைந்துள்ளது.

இந்த பாபநாசம் செல்லும் சாலையில் புலி, சிறுத்தை போன்ற கம்பீரமான விலங்குகளின் வருகையை சுற்று வட்டாரப் பகுதிகள் அடிக்கடி பார்க்கலாம். இயற்கை மூலிகைகள் கலந்த நீருக்கு பெயர் பெற்றது அகஸ்தியர் நீர்வீழ்ச்சி. இது, ஒரு முக்கிய நீர்வீழ்ச்சி தலமாக விளங்குகிறது.

nellaidistrict1

நீர்வீழ்ச்சியை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை, அதன் அழகைக் காணும் வாய்ப்பு கிட்டும். ஆண்டுதோறும் நீரினை கொட்டித்தீர்க்கும். வற்றாத நீர் வீழ்ச்சியான இது, சீரான நீர் ஓட்டத்தை உறுதி செய்கிறது. இங்கு செல்லும் போது, பலவகையான பறவை இனங்கள் மற்றும் வனவிலங்குகளை கண்டு வியக்கலாம்.

கோடை உல்லாசப் பயணம் மட்டும் அல்லாமல், ஆன்மிக சுற்றுலாவும் மாற்ற முடியும். அதாவது, மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பொதிகை மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பாபநாசநாதர் கோயிலுக்குச் சென்று வரவும்.

இந்த பழமையான கோயில், அதன் வளமான வரலாறு, புதிரான கலைப்பொருட்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும் இக்கோவிலுக்கு எதிரே ஓடும் தாமிரபரணி ஆறு கண்கொள்ளாக் காட்சி. புதுமணத் தம்பதிகள் வந்து செல்லும் வழக்கமான தலமாகும்.

பொதிகை மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அணை, தாமிரபரணி ஆற்றின் முக்கிய நீர்த்தேக்கமாக செயல்படுகிறது. அணைக்கு அருகில் மலைகள் மற்றும் பசுமையான காடுகளால் சூழப்பட்ட அழகிய மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

அணைப்பகுதியில் அருகிலுள்ள பூங்காவும் உள்ளது, இது, உங்கள் குழந்தைகளுக்கு முக்கிய பொழுதுபோக்காக அமையும். இந்த பகுதிகளை சுற்றி பார்க்க, திருநெல்வேலியிலிருந்து சேரன்மகாதேவி மற்றும் கல்லூர் வழியாக அடிக்கடி பேருந்து சேவைகள் உள்ளன.

ஒவ்வொரு சுற்றுலாவும் ஒருவித அனுபவத்தை கொடுக்கும். அந்த வரிசையில், நெல்லையில் உள்ள இந்த பகுதிகள் உங்கள் வாழ்வில் பசுமையான நினைவுகளை எப்போதும் மீட்டெடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

More News

    Read more about: tirunelveli ambasamudram
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+