» »காவிரி ஆறு - தமிழ்நாடு Vs கர்நாடகம்!!! எத்தனை ஊருங்க பாதிக்கப்படுது பாருங்க... !

காவிரி ஆறு - தமிழ்நாடு Vs கர்நாடகம்!!! எத்தனை ஊருங்க பாதிக்கப்படுது பாருங்க... !

Written By: Udhaya

இந்தியாவில் பிரச்னைகளுக்கும் சர்ச்சைகளுக்குமா பஞ்சம், நாளொரு மேனிக்கு சிக்கல்களும், பொழுதொரு மேனிக்கு குழப்பங்களும் எண்ண எண்ண குறையாத, அள்ள அள்ள தீராத கவலைகளையும், குறைகளையும் கொண்டாக இருக்கிறது இந்தியா.. இந்தியாவே இவ்வளவு என்றால் தமிழ்நாட்டின் நிலையை சொல்லவே வேண்டாம். 800 கிமீ பாயும் இந்த ஒரு ஆறு போதும்.. 50 வருடங்களுக்கும் மேலான குழப்பங்களில் இது முக்கியமானது. தலைமுறைகளைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது காவிரி பிரச்சனை. தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்பதால் தமிழகமுழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். காவிரியால் வளமாகும் ஊர்கள் எவை என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாமா?

கர்நாடகமும் தமிழகமும்...

கர்நாடகமும் தமிழகமும்...

குடகு மலையில் தோன்றி வங்கக் கடலில் முடியும் காவிரி மொத்தம் 800கிமீ தூரம் ஓடியாடி வருகிறது. கர்நாடக மாநிலத்தில் குடகு, ஹசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, சாம்ராஜ்நகர் மாவட்டங்கள் வழியாக பாயும் காவிரி ஆறு, தமிழகத்தில் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் வழியாக பாய்ந்து வங்கக்கடலில் விழுகிறது. தலைக்காவிரியிலிருந்து பூம்புகார் வரையுள்ள இடங்களில் பல்வேறு கிளை நதிகளும் காவிரி ஆற்றுடன் இணைந்தும், இங்கிருந்து பிரிந்தும் செல்கிறது.

காவிரியின் துணை ஆறுகள்

காவிரியின் துணை ஆறுகள்


காவிரி ஆறு தான் செல்லும் இடமெல்லாம் காடுகளை விரித்துச் செல்கிறது. இதனால் அதற்கு காவிரி என்று பெயரிட்டனர். காவிரியின் துணை ஆறுகள் எனப்படுவன கர்நாடக மாநிலத்தில் பாயும் கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, லட்மண தீர்த்தம், ஆர்க்காவதி, சிம்சா, சொர்ணவதி ஆகியனவாகும். தமிழகத்தைப் பொறுத்தவரையில் பவானி, அமராவதி, நொய்யல் ஆகியன காவிரியின் துணை ஆறுகள் ஆகும்.
Vanniar

 கபினி

கபினி

கர்நாடக மாநிலத்தின் திருமாக்கூடல் நாசிப்பூர் எனும் இடத்தில் காவிரி ஆற்றுடன் கலக்கிறது இந்த கபினி நதி. இது மொத்தம் 230 கிமீ நீளம் பாயும் ஆறாகும். இது கேரளமாநிலம் வயநாட்டில் உற்பத்தியாகும் ஆறாகும். வயநாட்டில் தொடங்கி, கபினியாக ஓடி, கர்நாடக மாநிலம் கடந்து காவியில் கலந்து தமிழகம் ஓடிவந்து வங்கக்கடலில் கரைகிறது இந்த கபினி.

Nvvchar

ஹேமாவதி ஆறு

ஹேமாவதி ஆறு


245கிமீ நீளமுடைய இந்த ஆறு கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் உற்பத்தியாகி, ஹாசன், மைசூர் மாவட்டங்களின் வழி ஓடி, கிருஷ்ணராஜ சாகர் நீர்த் தேக்கத்தில் காவிரியுடன் கலக்கிறது.
Technofreak

ஹாரங்கி ஆறு

ஹாரங்கி ஆறு

50கிமீ நீளமுடைய இந்த ஆறு தமிழ் சங்கப் பாடல்களில் அயிரி ஆறு என்று கூறப்படுகிறது. இது காவிரியின் துணை ஆறுகளில் ஒன்று. குடகு மாவட்டத்தில் அமைந்துள்ள புஷ்பகிரி மலையில் உற்பத்தி ஆகும் இந்த ஆறு குசால்நகர் அருகே காவிரி ஆற்றுடன் கலக்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை ஒன்றுக்கு ஹராங்கி அணை என்று பெயர்.
harangi

லட்சுமண தீர்த்தம்

லட்சுமண தீர்த்தம்


கிருஷ்ணசாகர் நீர்த்தேக்கத்தில் கலக்கும் மற்றொரு ஆறு லட்சுமணத் தீர்த்தம் ஆகும். இது கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உற்பத்தியாகிறது.
Philanthropist 1

ஆர்க்காவதி ஆறு

ஆர்க்காவதி ஆறு

கோலார் மாவட்டத்திலுள்ள நந்தி மலையில் உற்பத்தியாகும் இந்த ஆறு கோலார், பெங்களூரு வழியாக பாய்ந்து ராமநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள கனகபுரா அருகே காவிரியுடன் சங்கமிக்கிறது.

இந்த ஆறுதான் பெங்களூரு மாநகரத்தின் தண்ணீர் தேவையில் 20 சதவிகிதத்தை பூர்த்தி செய்கிறது. ஆனால் பெங்களூருவின் கழிவுகள் இங்குதான் கலக்கிறது என்பது கவலைக்குரிய விசயமாகும்.

Avoid simple2

சிம்சா

சிம்சா

சிம்சா ஆறு காவிரியின் துணை ஆறுகளில் முக்கியமானதாகும், இது 221 கிமீ தூரம் ஓடி காவிரியில் கலக்கிறது. இதன் உற்பத்தி பிரதேசம் தும்கூர் மாவட்டத்தின் தேவராயனதுர்க்கம் மலைப்பகுதி ஆகும்.

Srinivasa83

சொர்ணவதி எனப்படும் பொன்னி

சொர்ணவதி எனப்படும் பொன்னி

பொன்னி ஆறு தமிழ் சங்க இலக்கியங்கள் பலவற்றில் போற்றப்பட்ட ஆறு ஆகும். இதுதான் கர்நாடக மாநிலத்தின் சொர்ணவதி என்று அழைக்கப்படுகிறது. நசுருர் மலைப்பகுதியில் தோன்றி 88கிமீ தூரம் ஓடி காவிரியில் கலக்கிறது.

JayakanthanG

 பவானி ஆறு

பவானி ஆறு


தமிழகத்தில் குறிப்பிடத்தக்க ஆறுகளில் முக்கியமானதாக இருப்பது இந்தபவானி ஆறு. வானி என்று சங்க இலக்கியங்களில் அழைக்கப்பட்டு வந்த பவானி ஆறு, நீலகிரி மாவட்டம் குந்தா மலைப்பகுதியில் தோன்றி, மேற்கு நோக்கி பாய்ந்து கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் அட்டப்பட்டி பள்ளத்தாக்கை வளமாக்கிவிட்டு அப்படியே தமிழகத்துக்குள் நுழைகிறது. மேல் பவானி அணைக்கட்டு, கீழ் பவானி அணைக்கட்டு என இரண்டு அணைக்கட்டுகளைக் கடந்து பவானி நகரில் காவிரியுடன் கலக்கிறது. இந்த ஆற்றிலும் கேரளப்பகுதியில் அணைக்கட்டி பாரதப்புழா ஆற்றில் திருப்பிவிட கேரள அரசு திட்டமிட்டு வருகிறது.
Rsrikanth05

அமராவதி ஆறு

அமராவதி ஆறு


கரூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களை வளப்படுத்தும் அமராவதி ஆறு பழனி மலை மற்றும் ஆனைமலைத் தொடர்களுக்கு இடையில் மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கு அருகே உற்பத்தியாகிறது. இதனுடன் பாம்பாறு, சின்னாறு மற்றும் தேவாறு ஆகிய ஆறுகள் இணைந்து கொள்கின்றன. அமராவதி நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டு தடுக்கப்படும் நீர் மீண்டும், குதிரை ஆறுடன் இணைந்து பின் கரூர் அருகே காவிரியுடன் கலக்கிறது.

Kadsree

நொய்யல் ஆறு

நொய்யல் ஆறு

வெள்ளயங்கிரி மலையில் உற்பத்தியாகி, கோவை, ஈரோடு மாவட்டங்கள் வழியாக பாய்ந்து நொய்யல் கிராமத்தில் காவிரியுடன் கலக்கிறது. இதன் சங்ககால பெயர் காஞ்சிமா நதி ஆகும்.

Rsrikanth05

அணைகள்

அணைகள்

காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்ட அணைகள் பானாசுர சாகர் அணை, கல்லணை, கிருட்டினசாகர் அணை, மேட்டூர் அணை, மேலணை, கீழணை உள்ளிட்ட இன்னும் சில அணைகளும் இருக்கின்றன.

மேலும் இந்த ஆறுகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் தோன்றி, சிவசமுத்திரம், ஒகேனக்கல் அருவிகளாய் , தக்காணபீடபூமியில் காவிரியாய், வங்கக்கடலில் கலக்கிறது.

Beckamrajeev

நகரங்கள்

நகரங்கள்


காவிரி நதியில்லாமல் போனால் பாதிக்கப்படும் நகரங்கள் முக்கியமாக தக்காணபீடபூமி பகுதிகள்தான். கரூர், தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் பெரும்பாலான கிராமங்களும், பகுதிகளும் மிக கடுமையாக பாதிப்படையும்.

Nittavinoda

காவிரி நதி தொட்டுச் செல்லும் நகரங்கள்

காவிரி நதி தொட்டுச் செல்லும் நகரங்கள்

பவானி, சிதம்பரம், ஈரோடு, காரைக்கால், கரூர், கொடுமுடி, குடகு, குடவாசல், கும்பகோணம், குசால்நகர், மன்னார்குடி, மாண்டியா, மயிலாடுதுறை, மேட்டூர், மைசூர், நாகப்பட்டினம், நன்னிலம், பாபநாசம், காவிரிப்பூம்பட்டினம், பேரளம், சிக்கல், சீர்காழி, திருவரங்கம், சுவாமிமலை, தலக்காடு, தஞ்சாவூர், தரங்கம்பாடி, திருநள்ளாறு, திருவையாறு, திருவாரூர், திருவீழிமலை, திருச்சிராப்பள்ளி என நிறைய ஊர்கள் காவிரியையும் அதன் துணை ஆறுகளையும் நம்பியுள்ளன. எனினும் நன்றாக ஆராய்ந்து பார்த்தால் இங்கே குறிப்பிடப்பட்டுள்ள அணைகளிலும், துணை ஆறுகளிலும் அதிகம் இருப்பது கர்நாடகத்தில்தான். காவிரியை மட்டும் நம்பி தமிழகத்தில் நிறைய மாவட்ட மக்கள் இருக்கின்றனர்.

Balajiviswanathan

 காவிரி வழித்தடம் தமிழகத்தில்

காவிரி வழித்தடம் தமிழகத்தில்

ஒக்கேனக்கலைக் கடந்து மேட்டூர் அணைக்கு முன்பாக தமிழகத்தில் காலடி எடுத்து வைக்கிறது காவிரி ஆறு. மேட்டூருக்கு முன் பரவலாகி அணைக்குள் தங்குகிறது காவிரி நதி. பின் தனது பயணத்தை தொடர்ந்து பக்கனாடு காடுகளுக்குள் பாய்ந்து, பூலாம்பட்டி, அம்மாப்பேட்டை, கோனேரிப்பட்டி, கல்வடங்கம், பிள்ளைகொண்டான்பட்டி, தாண்டி பவானியை அடைகிறது. ஈரோடு மாவட்டத்தில் பயணித்து, இறையன்மங்கலம், பாசூர், ஜேதார்பாளையம், கொடுமுடி, கடம்பன்குறிச்சி, மாயனூர், கிருஷ்ணாபுரம், லாலாபேட்டை, குளித்தலை, சிறுகமணி, கம்பரசம்பேட்டை வழியாக திருவரங்கத்தை அடைகிறது. திருவரங்கத்தைத் தாண்டி பல ஆறுகளாக பிரியும் காவிரி கொள்ளிடம், வேணாறு மற்ற சில ஆறுகளுடன் தனித்தனி பாதையில் பயணித்து இறுதியில் நாகப்பட்டினம் பூம்புகாரில் கடைமடையை அடைகிறது.

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்