
இந்து மதப் புராணங்களின் படி, விநாயகர் ஆனை முகத்துடன் தொப்பையுடனும் கையில் லட்டு வைத்துக்கொண்டு இருப்பார். அவருடன் அவரது வாகனமான எலியும் இருக்கும்.
விநாயகர் என்பவர் அறிவியல், கலை, நுண்ணறிவு திறன் போன்றவற்றைக் கொண்ட விவேகமான ஒருவர். வினை தீர்ப்பான் விநாயகன், கவலை தீர்ப்பவன் கணபதி என்று பக்தர்கள் அவர்களுக்கேற்றவாறு விநாயகரை அழைப்பது வழக்கம்.
இந்து புராணங்களின்படி, பார்வதிக்கும் சிவனுக்கும் பிறந்த முதல் குழந்தை விநாயகர். தன் தந்தையை அடையாளம் தெரியாத விநாயகர், தாய் பார்வதியை காண சென்ற சிவபெருமானை சண்டைக்கு அழைத்ததால், கோபம் கொண்ட ஈசன் பார்வை பட விநாயகரின் தலை துண்டானது. பதறிப் போன பார்வதி சிவனிடன் முறையிட, தன் சகாக்களை அனுப்பி வடக்கு முகம் பார்த்திருக்கும் ஒரு தலையை கொண்டுவாருங்கள் என்றாராம். அப்படி வந்ததுதான் யானை முகம் என்பது இந்துக்கள் பெரும்பாலோரின் நம்பிக்கை. யானை தலை சரி.. விநாயகரின் நிஜ தலை எங்கே தெரியுமா?

எங்குள்ளது
உத்தரகான்டிலுள்ள புவனேஸ்வர் கிராமத்தில் அமைந்துள்ளது பாட்டல் புவனேஸ்வர் குகைக் கோயில்.
இந்த கோயில் விநாயகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
uttarakhandtourism.gov.in

மலைக்குள் நுழைந்து வளைந்து செல்ல தயாரா
இந்த பயணம் ஒன்றும் அவ்வளவு எளிதானது அல்ல. 90 அடி ஆழத்தில் , 160 மீ நீளம் கொண்ட குகைக்குள் வளைந்து நெளிந்து சென்று பார்த்துவிட்டு வருகின்றனர். விநாயகரை காண்பவர்கள் மிகவும் சிலரே. பலர் பாதியிலேயே விட்டுவிட்டு வந்துவிடுகின்றனர்.
uttarakhandtourism.gov.in
சென்னையை பற்றி உங்களுக்கு தெரியாத சுவாரஸ்யமான தகவல்கள்

கயிலாய மலையுடன் சுரங்கத் தொடர்பு
இந்த குகையிலிருந்து கயிலாய மலைக்கு சுரங்கப்பாதை இருப்பதாக ஒரு கருத்து நிலவி வருகிறது.
இந்த பாதை மிகவும் மிகவும் ஆபத்தான பாதை. ஆக்ஸிஜன் அற்ற கொடூரமான வழித்தடமாகும். இதன்வழிச் செல்வதால் உயிரிழப்பு கூட ஏற்படலாம் என்கின்றனர் சிலர்.

பக்தர்கள்
இந்த கோயிலுக்கு சென்று வந்த பக்தர்கள் பலர் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். இந்த கோயில் சுவற்றை தொட்டு பார்த்துவிட்டு தாங்கள் அடைந்த ஆனந்தத்தையும், அழுத்தத்திலிருந்து விடுதலை பெற்றதாகவும் கூறினர்.
uttarakhandtourism.gov.in
இந்த பீச்சுக்கு போனா பேய் கூட வாக்கிங் போகலாமாம்? வாங்க போயித்தான் பாக்லாமே!

ஒரு குகையல்ல தொடர் கதை
பாட்டல் புவனேஸ்வர் குகை என்பது ஒரு குகை அல்ல. மாறாக பல்வேறு குகைகளின் தொகுப்பாக உள்ளது. உள்ளே செல்ல செல்ல ஸ்கேரி ஹவுஸ் செல்லும்போது ஏற்படும் படபடப்பும், பயமும் உங்களைத் தொற்றிக் கொள்ளும்.
uttarakhandtourism.gov.in
இந்த ரியல் பேய்கள் பண்ணுற காமெடி என்னனு தெரியுமா? இங்க போங்க

எப்படி செல்வது
தலைநகர் டெல்லியிலிருந்து 459 கிமீ தொலைவில் அமைந்துள்ள பாட்டல் புவனேஸ்வர் குகைக்கோயிலுக்கு 12 மணி நேரம் ஆகலாம்.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தேசிய நெடுஞ்சாலை எண் 24 ல் பயணிக்கலாம்.

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்
நாக் மந்திர், கௌசானி, அல்மோரா, பின்சார், பித்தோராகர்க், சிதை கோயில், ஹாட் கலிக்கா கோயில், ருத்ரதாரி நீர்வீழ்ச்சி மற்றும குகைகள்

நாக் மந்திர்
நாக் மந்திர்
Krish Dulal

கௌசானி
கௌசானி
Anshumandatta

அல்மோரா
அல்மோரா
Travelling Slacker

பின்சார்
பின்சார்
solarshakti

கங்கையின் தாய் வீடு கங்கோத்ரி
கங்கோத்ரி, கடல் மட்டத்திலிருந்து 1800மீ முதல் 7083 மீ உயரத்தில் உள்ளது. சுற்றுலா பயணிகள் இங்கு, ஆல்ப்ஸ் ஊசியிலை காடுகள், ஆல்ப்ஸ் புதர்கள், மற்றும் பச்சை புல்வெளிகளை பார்க்க முடியும். இந்த காடு, இந்தியா-சீனா எல்லை வரை பரவியுள்ளது. இது கங்கோத்ரி தேசிய பூங்கா என அழைக்கப்படுகின்றது. இந்து மத நம்பிக்கைகளில், கங்கோத்ரி ஒரு முக்கிய இடம் வகிக்கின்றது. இங்கே பழமையான இந்து மத கோவில்கள் ஏராளமாக உள்ளன. கங்கோத்ரி கோவில், இப்பகுதியில் உள்ள ஒரு முக்கியமான யாத்திரை மையமாகும். இதன் மீது அமர்ந்துதான் பாகிரத மஹராஜா தியானம் செய்தார் என நம்பப்படுகிறது. சுற்றுலா பயணிகள், கங்கோத்ரி கோவிலின் அருகே அமைந்துள்ள, `கவுரி புஷ்கரினி', மற்றும் `சூர்யா புஷ்கரினி' ஆகியவற்றில் புனித நீராடலாம்.
Atarax42

புனித குருத்வாராக்களின் பூமி
இந்த இடம் குரு கோபிந்த் சிங் நினைவாக உள்ள குருத்வாரா ஹேம்குந்த் சாஹிப் என்ற புனித ஸ்தலத்துக்கு புகழ் பெற்றது. மேலும் இந்த இடம் குரு கோபிந்த் சிங் எழுதிய தசம் கிரந்த் என்ற சீக்கியர்களின் புனித புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குருத்வாரா கட்ட ஆரம்பித்தது 1960 ஆம் ஆண்டாகும். இதற்கு பொறுப்பு வகித்தவர் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங் என்பவர். முதன்மை பொறியாளராக இருந்த இவர் கட்டுமான பணியை கட்டட கலைஞர் சியாலி என்பவரின் பொறுப்பில் விட்டு இருந்தார். குருத்வாரா அருகாமையில் ஒரு அழகிய ஏரியை காணலாம். அக்டோபர் முதல் ஏப்ரல் வரை அதிக பனியில் உறைந்து போய் இருப்பதால் இந்த இடம் அந்நேரத்தில் மூடப்பட்டுவிடும். மே மாதம் சீக்கியர்கள் 'கற் சேவா' என்ற சேவையில் ஈடுபட்டு, பாதைகளை சீர் செய்ய உதவுவார்கள். நேரம் கிடைத்தால் சுற்றுலாப் பயணிகள் லக்ஷ்மன் கோவிலுக்கும் செல்லலாம். இதனை இந்த வட்டாரத்தில் லக்ஷ்மன் கோபால் என்றும் அழைப்பார்கள். பத்ரிநாத் அருகில் இருக்கும் வசுதரா அருவியும் மற்றொரு புகழ் பெற்ற தலமாகும்.
Panesar0088

சம்பவத் - ஒரே இரவில் கட்டப்பட்ட கோயில்
கிரந்டேஷ்வர் மகாதேவ் கோவில், பாலேஷ்வர் கோவில், பூர்ணகிரி கோவில், கவால் தேவ்தா, ஆதித்யா கோவில், சௌமு கோவில் மற்றும் படல் ருத்ரேஷ்வர் போன்றவைகள் தான் சம்பவத்தின் குறிப்பிடத்தக்க சுற்றுலாதலங்கள். குமாவோன் வட்டாரத்தின் பண்டைய கட்டிடக் கலையை சுட்டிக் காட்டும் வகையில் அமைந்துள்ளது நாக்நாத் கோவில். இங்கே உள்ள கல் செதுக்கலான "ஏக் ஹாத்தியா கா நௌலா" சுற்றுலாப் பயணிகள் பெரிதும் ஈர்க்கும். இதை ஒரே இரவில் செதுக்கியதாக நம்பப்படுகிறது. இங்குள்ள மற்றொரு புகழ் பெற்ற தலம் மாயாவதி ஆஷ்ரம். இது கடல் மட்டத்திலிருந்து 1940 மீட்டர் உயரத்தில் உள்ளது.
Ashwini Kesharwani

ஜாகேஸ்வர் கோயில்
12 ஜோதிலிங்கத்தில் 8-வது ஜோதிலிங்கம் அமையப்பட்ட இடம் என்பதால் ஜாகேஷ்வர் மிகவும் பிரபலமான இடமாக கருதப்படுகிறது. 9-ம் மற்றும் 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு இந்து கடவுளான சிவனுக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட 124 பெரிய மற்றும் சிறிய கோவில்களை உள்ளடக்கிய ஜாகேஷ்வர் நகரத்தை கோவில் நகரம் என்று அழைக்கின்றனர். தந்தேஷ்வர் கோவில், ஜாகேஷ்வர் கோவில், சாண்டிகா கோவில், மஹாமிருத்யுஞ்சயா கோவில், குபெர் கோவில், நவகிரக கோவில், மற்றும் நந்தா தேவி கோவில் போன்ற புகழ்மிக்க கோவில்களை இங்கு காணலாம். இதில் மஹாமிருத்யுஞ்சயா கோவில் மிகவும் பழமையானது, மற்றும் தண்டேஷ்வர் கோவில் எல்லா கோவில்களையும் விட பெரியது. பட் ஜகேஷ்வர் கோவில், புஷ்தி பகவதி மா மற்றும் தொல்பொருள் அருங்காட்சியகம் போன்ற இடங்கள் இங்கு காணவேண்டிய புகழ்வாய்ந்த தலங்களாகும்.
Ankitkumarsaxena

ருத்ரநாத் - பாண்டவர்கள் வழிபட்ட கோயில்
ருத்ரநாத் கோவிலில் இந்து கடவுளான சிவபெருமான் நீலகண்ட மகாதேவர் என்ற பெயரில் வணங்கப்பட்டு வருகிறார். இந்திய இதிகாசமான மகாபாரதத்தில் வரும் பாண்டவர்களால் இந்த கோவில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. மகாபாரதப் போரில் கௌரவர்களைக் கொன்றதற்காக பாவ மன்னிப்பு கோருவதற்காக பாண்டவர்கள் சிவபெருமானை வணங்கச் சென்றதாகவும் ஒரு கதை உள்ளது. எனினும், அவர்களைப் பார்க்க விரும்பாத சிவபெருமான் நந்தி எருதின் வடிவெடுத்துக் கொண்டு கார்வால் பகுதிகளில் மறைந்து கொண்டார். குப்தகாஷியில் அந்த நந்தி எருதினை பார்த்த பாண்டவர்கள் அதனை வலுக்கட்டாயமாக தடுத்து பிடிக்க முயன்ற போதும் அவர்களால் அதனை பிடிக்க முடியுவில்லை. அதன் பிறகு சிவபெருமானின் உடலில் ஐந்து பகுதிகள் வேறு வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்டன.
rolling on

சௌகோரி- கோயில் கிராமம்
சௌகோரி பகுதியில் பல புராதன கோயில்கள் அமைந்துள்ளன. பெரிநாக் எனும் கிராமத்தில் உள்ள நாகமந்திர் எனும் கோயில் இவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இந்த பாம்புக்கோயில் நாகவேணி மன்ன்னர் பேணிமாதவா என்பவரால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்த்உ 1350 மீ உயரத்தில் வீற்றிருக்கும் பாதாள் புவனேஷ்வர் எனும் கோயிலும் பயணிகள் அவசியம் தரிசிக்க வேண்டிய ஒன்றாகும். சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் இந்த கோயிலை ஒரு சுரங்கப்பாதை போன்ற குகையின் வழியாக சென்றடையலாம். சௌகோரி நகரம் இங்குள்ள மஹாகாளி கோயிலுக்கும் பிரசித்தி பெற்றுள்ளது. ஆதி குரு சங்கராச்சாரியாரால் இந்த இடம் சக்தி பீடம் உருவாக்குவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
Parthasarathi Chattopadhyay

கொதிக்கும் நீரூற்று
யமுநோத்ரி பகுதியின் முக்கிய புனித ஸ்தலமாக யமுநோத்ரி ஆலயம் அறியப்படுகிறது. இந்த ஆலயம் இந்து சமய நதி தேவதையான யமுநோத்ரிக்கு அர்ப்பணிக்கப்பட்டு இருக்கிறது. ஜான்கி சாட்டியில் இருக்கும் சூடான நீரூற்றுகள் யமுநோத்ரியின் அடுத்த முக்கிய அம்சங்களாக உள்ளன. சூர்யா குன்ட் என்ற சூடான நீரூற்று மிக முக்கியமான நீரூற்றாகும். அரிசி மற்றும் உருளைக்கிழங்கு ஆகியற்றை மஸ்லின் துணியில் போட்டு பின் அவற்றை இந்த கொதிக்கும் நீரூற்றில் மூழ்க வைத்து அதன் மூலம் பிரசாதம் தயாரிப்பர். யமுநோத்ரிக்கு மிக அருகில் கர்சாலிக்கு என்ற மிகச் சிறிய கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பல நீர்வீழ்ச்சிகளும், நீரூற்றுகளும் உள்ளன. மற்றும் சிவபெருமானுக்கான ஒரு பழைய ஆலயமும் இந்த பகுதியில் அமைந்திருக்கிறது.
Atarax42

உத்தராகாண்ட்டின் பொக்கிஷம்!
சாகசப் பிரியர்களுக்கும், இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்ற இடமாகவும் ஜியோலிகோட் விளங்குகிறது. ஜியோலிகாட்டின் அதிகமாக அறியப்படாத இயற்கை சூழலில் பயணிகள் நடைப்பயிற்சியிலும், தாழ்நிலை மலையேற்றத்திலும் ஈடுபடலாம். ஜியோலிகோட்டில் உள்ள பழங்கால கோவில்கள், கல்லறைகள், வார்விக் சாஹிப் இல்லம் மற்றும் பிற பழங்கால கட்டடங்களைக் காணாவிடில் பயணம் முழுமை பெறாது. தேன் சேகரிப்பு அமைப்பில் தேன் சேகரிப்பு பற்றி பயணிகளுக்கு கற்றுத் தரப் படுகிறது. இங்கு கிடைக்கும் சுத்தமான தேன் மற்றும் பழங்களை வாங்க பயணிகள் மிகவும் விரும்புகிறார்கள். கிவி, ஒலிவ பழங்கள், ஸ்ட்ராபெர்ரிகள், பூக்கள் மற்றும் தேன் ஆகியவை இங்கு மிகச்சிறந்த விலையில் கிடைக்கிறது. மரச்செடிகளும், தொட்டிச்செடிகளும் கிடைக்கின்றன.
Pranab basak

ராம்கர்
வெள்ளையர்கள் இந்த இடத்தில் கணிசமான அளவு தங்கள் பொழுதை கழித்தனர். இந்த இடத்தின் இயற்கை எழிலில் ரவீந்திரநாத் தாகூர் மற்றும் நரைன் சுவாமி போன்ற புகழ் பெற்றவர்கள் மயங்கியதின் விளைவே, அவர்களின் ஆசிரமங்கள் இங்கு நிறுவப்பட காரணமாக அமைந்தது. இங்கு சுற்றுலா வருபவர்கள், மகாதேவி வர்மா என்ற புகழ் பெற்ற எழுத்தாளருக்காக சமர்பிக்கப்பட்ட நூலகத்தை கண்டுக்களிக்கலாம். இந்த நூலகமே அவரை 'லச்மா' என்ற புகழ் பெற்ற கதையை எழுத உந்துகோலாக இருந்தது. அதன்பிறகே இந்த நூலகம் அவருக்கு அர்ப்பணிக்கப்பட்டு, அவருடைய பெயராலேயே அழைக்கப்படலானது. இங்கே உள்ள பல சுற்றுலாத் தலங்களில், ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. இந்த ஆசிரமம் இங்கு வருபவர்களுக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி வகுப்புகளை ஏற்பாடு செய்கிறது
Kuarun
ஓவ்வொரு தமிழரும் பார்க்கவேண்டிய கோவில்
செல்வத்தை அருளும் திருப்பதி வெங்கடாசலபதி கோயில்