Search
  • Follow NativePlanet
Share
» »உலகின் மிக உயரமான சாலை எது தெரியுமா ?

உலகின் மிக உயரமான சாலை எது தெரியுமா ?

அழகான, மனதுக்கு புத்துணர்வு தரும் குளுமையான சுற்றுலாத்தலங்களுக்கு செல்வதை காட்டிலும் கூடுதலான சந்தோசம் தரக்கூடிய விஷயமென்றால் அது இயற்கை காட்சிகள் நிறைந்த சாலைகளில் மேற்கொள்ளும் பயணங்கள் தான்.அதுவும் நண்பர்களுடன் குழுவாக பயணம் செய்வதை காட்டிலும் சுவாரஸ்யமான விஷயம் வேறெதுவுமே இருக்க முடியாது.

உங்களுக்கு நீண்ட தூர பைக் பயணங்கள் பிடிக்குமெனில் இந்தியாவில் இருக்கும் உலகத்திலேயே மிக உயரமான சாலையில் வாழ்கையில் என்றென்றைக்கும் மறக்க முடியாத பயணம் ஒன்றை மேற்கொள்ளுங்கள். உலகின் மிக உயரமான சாலையை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

கார்டுங் லா :

கார்டுங் லா :

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் பகுதியில் அமைந்திருக்கிறது கார்டுங் லா என்ற இடம். 'கார்டுங் லா' என்றால் திபெத்திய மொழியில் கணவாய் என்று பொருள்படுகிறது. லடாக்கின் தலைநகரான லேஹ்வுக்கு வடக்கே அமைந்திருக்கும் இந்த கணவாய் வழியாக செல்லும் சாலை உலகிலேயே மிக உயரமான இடத்தில் இருக்கும் சாலைகளில் ஒன்றாக சொல்லப்படுகிறது.

Photo:dustin larimer

கார்டுங் லா :

கார்டுங் லா :

இமய மலையின் ஊடாக செல்லும் இந்த சாலை கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 17,000 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. 1976ஆம் ஆண்டு போடப்பட்ட இந்த சாலையானது 1988ஆம் ஆண்டில் இருந்து பொது மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டிருக்கிறது.

Photo:Axel Drainville

கார்டுங் லா :

கார்டுங் லா :

இந்திய எல்லை பாதுகாப்பு படையினால் பராமரிக்கப்படும் இந்த சாலையானது ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதியான சியாச்சின் பனி சிகரத்திற்கு படைத்தளவாடங்களை கொண்டு செல்லும் நோக்கத்தோடு அமைக்கப்பட்டிருக்கிறது.

Photo:Steve Hicks

கார்டுங் லா :

கார்டுங் லா :

கார்டுங் லா கணவாயை தாண்டி தான் லடாக்கில் பகுதியில் இருக்கும் மனிதனின் தீண்டல் இல்லாத அற்புதமான இடங்களான நுப்ரா பள்ளத்தாக்கு மற்றும் சாயாக் பகுதிகளுக்கு செல்ல முடியும்.

Photo:Prabhu B Doss

கார்டுங் லா :

கார்டுங் லா :

பொதுவாக இந்த சாலையில் பயணம் செய்ய நினைப்பவர்கள் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் இருக்கும் மணாலியில் இருந்து பயணத்தை துவங்கி லெஹ் வரையிலும் பின்னர் அங்கிருந்து கார்டுங் லா வழியாக நுப்ரா பள்ளத்தாக்கு வரையிலும் செல்கின்றனர்.

Photo:Pankaj Kaushal

மணாலி டு லெஹ் :

மணாலி டு லெஹ் :

இந்தியாவில் நாம் மேற்கொள்ள கூடிய ஆகச்சிறந்த பயணமாக இந்த மணாலி முதல் லெஹ் வரையிலான பயணம் சொல்லப்படுகிறது. கடுமையான பனிப்பொழிவு நிலவும் என்பதால் பனிப்பொழிவு குறைவாக இருக்கும் நான்கு மாதங்கள் மட்டுமே இந்த மணாலி டு லெஹ் நெடுஞ்சாலை திறந்திருக்கிறது.

Photo:dustin larimer

மணாலி டு லெஹ் :

மணாலி டு லெஹ் :

475 கி.மீ பயணத்தை நிறைவு செய்ய கிட்டத்தட்ட 3-4 நாட்கள் வரை ஆகும். இந்த பயணத்தின் போது வழியிலே கேம்ப் அமைத்து தங்குவதற்கு ஏற்ற இடங்கள் இருக்கின்றன. வழியில் வரும் ஜிங்க்ஜிங் பார், சார்சு, தங்கங் லா போன்ற இடங்கில் இரவு கேம்ப் அமைத்து தங்கலாம்.

Photo:Sameer Karmarkar

மணாலி டு லெஹ் :

மணாலி டு லெஹ் :

வழி நெடுகிலும் இமய மலையின் பேரழகை கண்டு லயிக்கலாம். பசுமை நிறைந்த வனப்பகுதிகள், பனிப் படர்ந்த மலைகள், பாலைவனம் போல காட்சியளிக்கும் தரிசு நிலங்கள் என பல வகையான புவியியல் அமைப்புகளை இந்த பயணத்தின் போது நாம் கடக்க வேண்டியிருக்கும்.

Photo:Elroy Serrao

மணாலி டு லெஹ் :

மணாலி டு லெஹ் :

மணாலியில் இருந்து லெஹ் வரையிலான பயணத்தை நிறைவு செய்த பிறகு உலகின் மிக உயரமான சாலையான இந்த கார்டுங் லா கணவாய் வழியாக பயணித்து நுப்ரா பள்ளத்தாக்கிற்கு செல்லலாம்.

Photo:Axel Drainville

மணாலி டு லெஹ் :

மணாலி டு லெஹ் :

லேஹ்வில் இருந்து 150 கி.மீ தொலைவில் நுப்ரா பள்ளத்தாக்கு அமைந்திருக்கிறது. கோடைக்காலத்தில் இப்பகுதிக்கு சுற்றுலா வரும் பயணிகள் இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ண பூக்களின் அணிவகுப்பைக் காண முடியும். மனிதனால் சற்றும் மாசுபடாத ஓரிடத்திற்கு செல்ல விரும்புகிறவர்கள் நிச்சயம் நுப்ரா பள்ளத்தாக்குக்கு ஒருமுறையேனும் வர வேண்டும்.

Read more about: ladakh road trip manali
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X