» »உங்களால் எளிதில் நம்ப முடியாத மாய உலகம்...இவற்றை தெரியுமா?

உங்களால் எளிதில் நம்ப முடியாத மாய உலகம்...இவற்றை தெரியுமா?

Written By: Udhaya

உலகம் எவ்வளவு வேகமாக ஓடினாலும்இளைப்பாறுவதற்கு சற்று நேரம் அமரும். எப்ப பாரு வேல வேல னு சுத்திட்டு இருக்கீங்க.. வீக் எண்ட் வந்தாச்சி.. கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க...

நினைத்தவுடன் ஜூராசிக் பார்க்குக்கு போகலாம் எப்படி தெரியுமா?

உலகத்தின் பல மூலைகளில் நடக்கும் விசயங்களைக் கூட கண்முன்னே வீட்டிலிருந்தபடியே பார்க்கும் அளவிற்கு நமக்கு வசதிகள் வந்து விட்டன. ஆனா சில விசித்திரமான, மர்மமான நிகழ்வுகள் உலகெங்கும் நடந்திட்டுதான் இருக்கு.. அத பாத்துட்டு அடடே னு ஆச்சர்ய படுவோம்.. ஆனா அந்த மாதிரி நமக்கு பக்கத்துலயே நடக்குற விசயத்த கண்டுக்காம போய்ட்டே இருப்போம்...  

தாஜ்மஹால் ஒரு சிவன் கோயிலா அதிர்ச்சியூட்டும் மர்மங்கள் தெரியுமா?

ஆனா ஒரு சில விசயங்கள் அதிகம் பேரைத் திரும்பி பார்க்கச் செய்யும். அப்படி இந்தியாவில் நடந்த அதிர்ச்சியூட்டும் சில நிகழ்வுகளை இங்க பாக்கலாம்.

ஒற்றைவிரலால் பாறையைத் தூக்கிப் போட்டு பிடிக்கும் வல்லவர்கள்

ஒற்றைவிரலால் பாறையைத் தூக்கிப் போட்டு பிடிக்கும் வல்லவர்கள்

மகாராஷ்டிர மாநிலம் சிவபூர் என்ற கிராமத்தில், இந்த ஆச்சர்யம் நடைபெறுகிறது. அதாவது, இங்குள்ளவர்கள் தங்களது ஆட்காட்டி விரலை மட்டும் பயன்படுத்தி கிட்டத்தட்ட 70 கிலோ எடையுள்ள பாறையைத் தூக்குகின்றனர். 800 வருடங்களுக்கு முன் ஜிம்மாக இருந்த இந்த இடம் தற்போது புனித தலமாக உள்ளது. இங்குள்ளவர்கள் பதினொரு பேர் தங்களது ஒற்றை விரலால் பாறையைத் தூக்கிப் போட்டு பிடிக்கின்றனர்.

அடடே.. பெரிய பயில்வான்களா இருக்காங்களே...

கருப்பு உலகம்

கருப்பு உலகம்

அசாம் மாநிலம் மாயாங் எனும் கிராமம் லேண்ட் ஆப் பிளாக் மேஜிக் என்று அழைக்கப்படுகிறது. கவுகாத்தியிலிருந்து 40 கிமீ தூரத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் சில மனிதர்கள் காற்றில் மாயமாகின்றனர். சிலர் விலங்குகளாக மாறுகின்றனர். இது மாதிரியான மாயஜாலங்களைக் கற்றுத் தேர்ந்துள்ளனர் இந்த கிராம மக்கள். மாயாங் இந்த கிராமத்திற்கு இந்த பெயர் பொருத்தமானதுதான்....

நம்மளும் அந்த வித்தைய கத்து வச்சிக்கிட்டா கடன்காரன் வந்தா எஸ் ஆயிடலாம்ல....

ஒட்டுமொத்தமாக தற்கொலை செய்துகொள்ளும் பறவைகள் கூட்டம்

ஒட்டுமொத்தமாக தற்கொலை செய்துகொள்ளும் பறவைகள் கூட்டம்

அசாம் மாநிலம் ஜடிங்கா எனும் பகுதியில் உள்ளது போரெய் மலை. ஒவ்வொரு மழைக்காலத்திலும், இங்கு வரும் பறவைகள் கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்துகொள்கின்றனவாம். செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் பெரும்பாலும் இப்படி நிகழ்கின்றன என்று தெரிவித்த இயற்கை ஆர்வலர் இ.பி.கீ 1960ல் இதனை உலகம் உற்றுப்பார்க்கும் படி செய்தார்.

சொயிங்குனு போகுது...... சூசைட் பண்ண

கார்களை இழுக்கும் மலை

கார்களை இழுக்கும் மலை

லாடாகில் இருக்கும் மிகப்பெரிய நகரமான லெஹ்இல் இருந்து 30கி.மீ தொலைவில் இருக்கிறது இந்த காந்த மலைகள். கடல் மட்டத்தில் இருந்து 14,000 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இங்கு அளவுக்கு அதிகமான அறிவியலாளர்களால் இன்றும் விளக்க முடியாத அளவு அதீத புவியிர்ப்பு சக்தி இருக்கிறது. இதன் காரணமாக நாம் வாகனங்களை இயக்கா விட்டாலும் 20 கி.மீ வேகத்தில் அவை நகர்கின்றன. அவைகளை நாம் பிடிகா விட்டாலும் கீழே விழுவதில்லை. மேலும் இந்த பகுதியின் மேல் பறக்கும் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் இந்த அதீத புவி ஈர்ப்பில் இருந்து தப்பிக்க கூடுதல் வேகத்துடனேயே பறக்கின்றன. லடாக்கிர்க்கு சுற்றுப்பயணம் செய்தால் இங்கும் தவறாமல் சென்று வாருங்கள்.

நல்ல ஐடியாவா இருக்கே... பிரேக் டவுன் சமயத்துல ஹெல்புல்லா இருக்கும்

PC: Amit Rawat

உலகத்திலிருந்து தனித்து வாழும் இந்திய கிராமம்

உலகத்திலிருந்து தனித்து வாழும் இந்திய கிராமம்

இமாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தினர் தங்களை மாவீரர் அலெக்சாண்டரின் வழித்தோன்றல்கள் எனக் கூறிக்கொண்டு தனி அரசாங்கத்தையே நடத்துகின்றனர். உலகின் மற்ற இடங்களிலிருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டு, மலையில் மீது வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர் இவர்கள்.

அலெக்சாண்டரோட வாரிசுகளாம்...

PC: Jaypee

 உலகின் தூய்மையான கிராமம்

உலகின் தூய்மையான கிராமம்

உலகின் மிகத் தூய்மையான கிராமம் இந்தியாவில் இருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா. மேகாலயாவில் அமைந்துள்ள இந்த கிராமம் கடவுளின் பூங்கா என்று அழைக்கப்படுகிறது.

தூய்மையான இந்த கிராமத்தைப் பார்வையிட உலகின் பல்வேறு இடங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

இந்தியாவுலயா இருக்கு..... ரெம்ப தப்பாச்ச


PC: Ashwin Kumar

கதவில்லாத கிராமம்

கதவில்லாத கிராமம்

இந்த கிராமத்தில் அப்படி என்ன இருக்கிறது மற்ற கிராமங்களைப் போலதானே உள்ளது என்கிறீர்களா.. சற்று கூர்ந்து பாருங்கள். இந்த கிராமத்தில் உள்ள எந்த வீடுகளிலும் கதவுகளே கிடையாது. இதற்கு காரணம் இந்த கிராமத்தில் களவுகள் நடைபெறாது என்பதுதான். அவ்வளவு நல்லவிங்க போல....

சரி நீங்க வெளிய கிளம்பும்போது கதவ பூட்டிட்டு போறீங்களா....

PC: Hiran Sreerenganathan

கல்லறையருகில் உணவு விடுதி

கல்லறையருகில் உணவு விடுதி

கல்லறையருகில் உணவு விடுதியா.... உணவு விடுதிக்குள் கல்லறையா .. அப்படின்னு சந்தேகம் வரலாம்... இப்படி ஒரு வித்தியாசமான விடுதி அகமதாபாத்தில் அமைந்துள்ளது. கல்லறைகள் எங்கள் முன்னோர்களின் நினைவுகள். அவைகள் எப்போது எங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடியது என்கிறார் உரிமையாளர்.

அதுக்குள்ளேர்ந்து திடீர்னு யாரும் எழுந்து வராம இருந்தா சரி...

PC: venkudada

உலகின் மிகப்பெரிய ஆற்றுத் தீவு

உலகின் மிகப்பெரிய ஆற்றுத் தீவு

கடலில் தீவு இருப்பதை பார்த்துருப்பீர்கள். ஆற்றில் ஒரு தீவு உள்ளது. அதும் இந்தியாவில் இருக்கிறது. மிகவும் அழகான, வானத்து நீலத்தை பூமியில் பிரதிபலிக்கும் இந்த ஆறு காண்போரை கவர்ந்து இழுக்கும் தன்மைவாய்ந்தது.

இந்த ஆற்றுத் தீவின் அருகில் சென்றால் சொர்க்கத்தில் இருப்பதை உணரமுடியுமாம். நம்ப முடியவில்லையா...

நம்புனாத்தான் சோறு போடுவாங்களாம் பாஸ்

PC: Harsh Suryawanshi

 புல்லட் பாபா

புல்லட் பாபா

இது என்னவோ சினிமால வர்ற காமெடியன் பேருனு நினைச்சிறாதீங்க.. இது சக்தி வாய்ந்த கடவுளின் பெயர். ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள ஜோத்பூர் என்னும் இடத்தில் இந்த கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாமி யார் தெரியுமா ஒரு புல்லட். இந்த புல்லட்டுக்கு மாலை அணிவித்து, பூசையெல்லாம் செய்கிறார்கள்.

அட... ஆச்சர்யாமா இருக்குல... இல்லையா ?

அப்றம் நாங்கனா யாரு... மைல் கல்லையே கோவிலாக்குனவங்கப்பா....

PC: jimanish

வளரும் நந்தி

வளரும் நந்தி

ஆந்திர மாநிலம், கர்நூல் அருகே அமைந்துள்ளது இந்த வளரும் நந்தி. இந்த நந்தி ஆண்டுகள் ஆக ஆக வளர்கிறது என்கிறார்கள் அக்கம்பக்கத்தினர். இதுபோலத்தான் பெங்களூருவிலும் ஒரு நந்தி வளர்கிறதா சொன்னாங்க..

எவன்டா அவன் அபிஷேகம் பண்ண வச்சிருந்த பால்ல காம்ப்ளான் மிக்ஸ் பண்ணது?

அதிசயத் தூண்

அதிசயத் தூண்

ஆந்திர மாநிலத்தில் உள்ள வீரபத்ர சுவாமி கோவிலில் உள்ள தூண்தான் இந்த அதிசயத் தூண். எப்படின்னு கேக்குறீங்களா?

இந்த தூண் தரையுடன் தொடர்பு இல்லாமல் அந்தரத்துடன் மட்டும் பிணைந்துள்ளது. கட்டடக்கலைக்கு சிறப்பு சேர்க்குற வகையில இருக்கும் இந்த தூண் அமைக்கப்பட்ட விதம் எப்படின்னு இன்னும் தலைய பிச்சிக்கிட்டு இருக்காங்க நம்ம பொறியியலாளர்கள்..

நல்ல வேள அந்த காலத்துல என்ஜினியரிங்க் காலேஜ்லாம் இல்ல..

PC: Nagesh Kamath

இரட்டையர்கள் கிராமம்

இரட்டையர்கள் கிராமம்

இரட்டை கிராமம் கேள்வி பட்டிருப்போம். அது என்ன இரட்டையர் கிராமம். இந்த ஊர்ல பொறந்த நிறைய பேரு இரட்டையர்களாமே.. இந்த கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 2000 தானாம். அதுல 350 சோடி இரட்டையர்களாம். பொதுவா 1000 பேருக்கு 6 பேர் இரட்டையர்களா பொறந்தாளே அது அதிசயமாம். இந்த கிராமத்தில பிறப்பு சதவீதம் தெரியுமா

1000 க்கு 42 பேர் இரட்டைகளாம்...

நாம் இருவர் நமக்கு இருவர் திட்டத்தை ரொம்ப சீரியஸா கடைபிடிக்குறீங்கடா எப்பா


PC: Sebastian Neerampuzha

மாயாமாகும் மனிதர்கள்

மாயாமாகும் மனிதர்கள்

நீங்க உங்க பிரெண்ட்ஸ் கூட கடற்கரையில் போட்டோ எடுக்கும்போது, உங்க பிரெண்ட்ஸ்ல ஒருத்தர் மாயமாகிட்டா என்ன பண்வீங்க..

அப்படித்தான் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த டுமாஸ் பீச்சில் இரவு நேரங்களில் மனிதர்கள் மாயமாகும் நிகழ்வுகள் நடக்கின்றனவாம். மேலும் பல அமானுஷ்ய நிகழ்வுகள் நடப்பதாகவும் தெரிகிறது.

PC: Marwada

அமெரிக்கா விசா தரும் அழகிய பெருமாள்

அமெரிக்கா விசா தரும் அழகிய பெருமாள்

கடவுளர்கள் நம்மை படைப்பது, காப்பது அழிப்பது என்றில்லாமல், நமக்கு வேண்டிய செல்வங்களையும் தருவார்கள். இப்படி நம்பிக்கை நிறைந்த பல கோவில்களுக்கு நாம் சென்றிருப்போம். அமெரிக்கா போக விசா வழங்கும் கடவுளை கேள்விபட்டிருக்கிறீர்களா..

ஆந்திர மாநிலத்தில் உள்ள இந்த கோவிலில் அப்படி ஒரு நம்பிக்கை இருக்கிறது. இந்த கோவிலுக்கு வந்து சென்ற பின்பு பலருக்கும் விசா கிடைத்துள்ளதாம்.

நீங்க கூட அமெரிக்கா போக ஆசைபட்டீங்கள்ல....

PC: jitendra_hassija

Please Wait while comments are loading...