Search
  • Follow NativePlanet
Share
» »தொட்டபெல்லா சித்ரகுத்தா சிகரத்துக்கு எப்படி செல்வது?

தொட்டபெல்லா சித்ரகுத்தா சிகரத்துக்கு எப்படி செல்வது?

By Udhaya

சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள சிவகிரியின் இருண்ட அடர் வனங்கள், எம்மிதொட்டி கிராமத்துக்கு அருகில் ஹொக்கரிகங்க்ரி குன்றின் சரிவுகளை மறைத்துக்கொண்டு இயற்கை காதலர்களின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறது. சிவகிரி தன்னுடைய அழகிய காடுகளை போலவே பரந்து விரிந்து கிடக்கும் காப்பித் தோட்டத்துக்காகவும் புகழ் பெற்றது. இந்த நூறு வருட பழமை வாய்ந்த காப்பித் தோட்டம் புலிகள் பாதுகாப்பு காடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இதன் காரணமாக காப்பித் தோட்டத்தை சுற்றி புலிகள் சாதாரணமாக நடமாடுவதை பயணிகள் பார்க்கலாம். இப்படிப்பட்ட இடத்தில் இருக்கும் தொட்டபெல்லா சித்ரகுத்தா சிகரத்தை காணலாம் வாருங்கள்.

 சிவகிரியின் கவர்ச்சிக்கு காரணம்

சிவகிரியின் கவர்ச்சிக்கு காரணம்

சிவகிரியின் கவர்ச்சிக்கு மற்றுமொரு காரணம் தொட்டபல்லே சித்தரகுத்தா குன்று. இது கடல் மட்டத்திலிருந்து 5500 அடி உயரத்தில் அமைந்திருப்பதால் பாபா புதன் கிரி குன்று, பத்ரா ஏரி, எம்மிதொட்டி கிராமம் போன்றவற்றின் அழகை குன்றின் உச்சியிலிருந்து பரிபூரணமாக ரசிக்கலாம்.

bangaloretourism.org

 சுவாரஸ்யமான பயணம்

சுவாரஸ்யமான பயணம்

அதுமட்டுமல்லாமல் இந்தக் குன்றின் பாறைகளில் ஏறிச் செல்வது சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும். ஆனால் பாறைகளில் ஏறிச் செல்லும் போது நீங்கள் விலங்குகளின் காலடிச் சுவடுகளை பார்க்கலாம். ஆதலால் பயணிகள், வழிகாட்டி ஒருவரை உடன் அழைத்துச் செல்வது நல்லது.

bangaloretourism.org

 மழைக்காலங்களில் சிவகிரி எப்படி இருக்கும்

மழைக்காலங்களில் சிவகிரி எப்படி இருக்கும்

சிவகிரியின் காடுகளை மழைக் காலங்களில் சுற்றிப் பார்ப்பது சற்று கடினமான காரியம். ஆனால் மற்ற காலங்களில் சிவகிரியின் பாறைகளில் ஏறிச் செல்வதோ, நடைபயணம் செல்வதோ மகிழ்வூட்டும் பொழுதுபோக்குகளாகவே இருக்கும். சிவகிரி பெங்களூரிலிருந்து 235 கிலோமீட்டர் தொலைவிலும், அதன் அருகாமை ரயில் நிலையம் உள்ள ஹூப்ளியிலிருந்து 215 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்திருக்கிறது.

bangaloretourism.org

சிவன் கோயில்

சிவன் கோயில்

சிவகிரியில் பயணிகள் கட்டாயம் பார்க்க வேண்டிய கோயில்களில் சிவன் கோயில் மிகவும் முக்கியமானது. இந்தக் கோயில் ஹிந்து புராணங்களில் மும்மூர்த்திகளில் ஒருவராக போற்றப்படுபவரும், ஹிந்து மதத்தில் சக்தி வாய்ந்த கடவுளாகவும் கருதப்படும் சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோயிலின் அழகை தொட்டபல்லே சித்தரகுத்தா குன்றிலிருந்து பயணிகள் பரிபூரணமாக கண்டு ரசிக்கலாம்.

bangaloretourism.org

 முத்தொடி வனவிலங்கு சரணாலயம்

முத்தொடி வனவிலங்கு சரணாலயம்

சிவகிரியிலிருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முத்தொடி வனவிலங்கு சரணாலயத்துக்கு பயணிகள் கண்டிப்பாக செல்ல வேண்டும். இது 1998-ஆம் ஆண்டு புலிகள் பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டது. இங்கு புலிகளை தவிர பல்வேறு மிருங்களும், பறவை இனங்களும் இருக்கின்றன. அவற்றில் இராஜாளி கழுகும், குள்ள நரியும், காட்டெருமையும் இங்கு பிரபலம். அதோடு காட்டு நாய், யானை, கருஞ்சிறுத்தை, பெரிய கொம்புடைய ஆந்தை, குரைக்கும் மான், பறக்கும் நரி, கீரிப்பிள்ளை போன்ற விலங்குகளையும் இங்கே காணலாம். அதுமட்டுமல்லமால் கூக்குருவான், கருஞ்சிட்டு, தூக்கணங்குருவி, ரெட்டைவால் குருவி உள்ளிட்ட பறவை இனங்களையும், 120-க்கும் மேற்பட்ட மரவகைகளையும் நீங்கள் கண்டு ரசிக்கலாம்..

bangaloretourism.org

 தொட்டபல்லே சித்தரகுத்தா குன்று

தொட்டபல்லே சித்தரகுத்தா குன்று

சிவகிரிக்கு வரும் பயணிகள் முதலில் பார்க்க வேண்டிய அதிமுக்கியமான இடம் தொட்டபல்லே சித்தரகுத்தா குன்று. இது கடல் மட்டத்திலிருந்து 5500 அடி உயரத்தில் அமைந்திருப்பதால் பாபா புதன் கிரி குன்று, பத்ரா ஏரி, எம்மிதொட்டி கிராமம் போன்றவற்றின் அழகை குன்றின் உச்சியிலிருந்து பரிபூரணமாக ரசிக்கலாம். அதுமட்டுமல்லாமல் இந்தக் குன்றின் பாறைகளில் ஏறிச் செல்வது சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும். ஆனால் பாறைகளில் ஏறிச் செல்லும் போது நீங்கள் விலங்குகளின் காலடிச் சுவடுகளை பார்க்கலாம். ஆதலால் பயணிகள், வழிகாட்டி ஒருவரை உடன் அழைத்துச் செல்வது நல்லது.

Pramodv1993

Read more about: travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more