Search
  • Follow NativePlanet
Share
» »குன்னூரின் டால்பின் மூக்கு போயிருக்கீங்களா?

குன்னூரின் டால்பின் மூக்கு போயிருக்கீங்களா?

டால்பின் மூக்கு காட்சி மேடை பெயரைப்போலவே டால்பினின் மூக்கு போன்ற தோற்றமுடையது. இங்கு காணக்கிடைக்கும் காட்சிகள் வார்த்தைகளால் விவரிக்க இயலாதது. எனவே இது பயணிகள் கண்டிப்பாக செல்ல வேண்டிய ஒரு இடமாக கருத

By Udhaya

டால்பின் மூக்கு காட்சி மேடை பெயரைப்போலவே டால்பினின் மூக்கு போன்ற தோற்றமுடையது. இங்கு காணக்கிடைக்கும் காட்சிகள் வார்த்தைகளால் விவரிக்க இயலாதது. எனவே இது பயணிகள் கண்டிப்பாக செல்ல வேண்டிய ஒரு இடமாக கருதப்படுகிறது. சிறிது தூரம் மலைப்பாதையில் பயணிக்க வேண்டி இருந்தாலும் , இது தரும் காட்சியமைப்புகள் அதற்கான தகுதிகளை உடைய இடம் தான் இது என்று கூற வைக்கிறது. நீலகிரியின் பல முக்கிய இடங்களை இங்கிருந்து காணலாம். கோத்தகிரியின் கேத்தரின் நீர்வீழ்ச்சியும் அதில் ஒன்று. மலை உச்சியில் இருக்கும் போது கவனமாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டும். ஏனென்றால் பாறையின் இரு பக்கமும் அதல பாதாளமாகக் காணப்படுகிறது . இங்கிருந்து கிடைக்கும் காட்சிகள் காண்பவரைக் கட்டிப் போடுகிறது . டால்பின் மூக்கு காட்சி மேடை குன்னூரிலிருந்து 10 - 12 கி.மீ. தொலைவில் டைகர் ஹில்ஸ் அருகாமையில் அமைந்துள்ளது.

புனித ஜார்ஜ் ஆலயம்

புனித ஜார்ஜ் ஆலயம்

புனித ஜார்ஜ் ஆலயம் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. ஜே.டி .போய்லியூ அவர்களால் வடிவமைக்கப்பட்டு 1826ல் கட்டி முடிக்கப்பட்டது. ஆழமான காவி ஸ்டக்கோ மற்றும் வெள்ளை நிறத்தில் விலை உயர்ந்த கல் முதலியவை பதித்து அழகுபடுத்தப் பட்டுள்ளது. ஆலயத்தின் உட்புறம் செல்ல ஒரு நடையைக் கடந்து செல்ல வேண்டும். இதன் அமைப்பு ஆங்கிலேய ஆட்சிக் காலத்திற்கு அழைத்துச் செல்கிறது . மாடத்துடன் அமைந்த கூரை, உயரமான தூண்கள் மற்றும் கம்பீரமான சிலைகளுடன் அழகாகக் காட்சியளிக்கிறது . இந்தியாவில் காணப்படும் அரிய கட்டிடங்களில் ஒன்று புனித ஜார்ஜ் ஆலயம். இது கிட்டத்தட்ட முழுவதும் வெள்ளை மார்பிள் கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மரங்களுக்கிடையில் அமைந்திருப்பது இங்கு கிடைக்கும் அமைதியான சூழ்நிலைக்கு காரணமாக இருக்கலாம் . குன்னூருக்கு அருகில் எளிதில் அடையும் வகையில் அமைந்துள்ளது.

கட்டாரி நீர்வீழ்ச்சி

கட்டாரி நீர்வீழ்ச்சி

கட்டாரி அருவி நீலகிரியின் மூன்றாவது பெரிய அருவி என்று புகழ் பெற்றது. இந்தியாவின் முதல் நீர்மின் நிலையம் இங்கு அமைந்துள்ளது. குன்னூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் குண்டா சாலையில் 180 மீட்டர் உஅயரம் கொண்டதாக இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. கட்டாரி நீர்வீழ்ச்சியில் விழும் நீரின் விசையில் இருந்து இந்த மின் நிலையம் 1000 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இது மற்றும் லா நீர்வீழ்ச்சி ஆகியன நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இடமாக உள்ளன. மழைக்காலத்தில் மலை உச்சியில் இருந்து அதிவேகமாக விழும் நீர் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. இந்த இடத்தின் உயரமும் இதன் சுற்றுப் புறமும் முடிவே இல்லாத உயரத்தில், வானத்தில் இருந்து பூமிக்கு நீர் வீழ்வது போன்ற தோற்றத்தை கட்டாரி நீர்வீழ்ச்சிக்கு அளிக்கிறது.

Shankarkarthikeyan

 லேம்ப் பாறை

லேம்ப் பாறை


லேம்ப் பாறை குன்னூரில் உள்ள இன்னொரு சுற்றுலாத் தலம். இதற்கு முன் மலை உச்சிக்கு சென்று அங்கிருந்து சமவெகளைக் கண்டு ரசித்திருக்கிறீர்களா? பசுமையான புல்வெளிகள், நீண்டு விரிந்திருக்கும் செவ்வானம் ஆகியவற்றைக் கண்டு, கடவுள் போல உணர்ந்திருக்கிறீர்களா?

இல்லையெனில் இந்த இடம் உங்களுக்கு அந்த உணர்வைக் கொடுக்கும் குன்னூரில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள இங்கு கோயம்புத்தூரின் அழகிய காட்சிகளைக் காண முடியும்.

குடும்பத்துடன் பிக்னிக் செல்ல ஏற்ற இடம். இங்கு வருவதற்கு பாதை அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்ட கேப்டன் லேம்ப் அவர்களின் பெயரால் இந்த இடம் அழைக்கப் படுகிறது. டால்பின் மூக்கு சிகரத்திற்கு செல்லும் வழியில் இந்தப் பாறை அமைந்துள்ளது.

kumaravel

 மறைக்கப்பட்ட பள்ளத்தாக்கு

மறைக்கப்பட்ட பள்ளத்தாக்கு


மறைக்கப்பட்ட பள்ளத்தாக்கு பயணப் பிரியர்களின் வரைபடத்திலேயே காணப் படாத ஒரு இடமாகும். இங்கு வர நீங்கள் பசுமையான காடுகளிடையே மலைப்பயணம் செய்ய வேண்டும். இந்தப் பள்ளதாக்குக்கு செல்லும் மலைப்பயணமே சாகசங்கள் நிறைந்ததாக செல்பவர்களை வாய்பிளக்கச் செய்கிறது. குன்னூரின் மலைகளால் சூழப்பட்டிருக்கும் இந்த பள்ளத்தாக்கு ஆண்டு முழுவதும் பயணிகளை ஈர்க்கிறது. பிரதான சாலை என்று ஏதும் இல்லாத காரணத்தால் இங்கு வர பயணிகள் மலைப்பாதையில் ட்ரெக்கிங் செய்ய வேண்டியிருக்கிறது. இந்தக் காட்சியைக் காண உயிரையும் கொடுக்கலாம் என்று சொல்ல வைக்கும் வகையில் இந்த மலைகளின் அற்புத காட்சிகளை இங்கிருந்து காணலாம். அழகிய மலைகள், பசுமையான சமவெளிகள் என இந்தக் காட்சிகள் பார்வையாளர்களின் மனதில் இந்த மலைப்பகுதியின் தோற்றத்தைப் பதிவு செய்கின்றன. வெலிங்டன் கோல்ஃப் மைதானத்தை ஒட்டி அமைந்துள்ள இவ்விடம் மலைப்பயண விரும்பிகள், இயற்கை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் இடம்.Brunda Nagaraj

துரூக் கோட்டை

துரூக் கோட்டை


துரூக் கோட்டை ஒரு சிதிலமடைந்த கோட்டையாகும். இது ஒரு புகழ்பெற்ற சுற்றுலாதலமாக குன்னூரில் விளங்குகிறது. இங்கிருந்து சுற்றுப்புறங்களில் உள்ள இடங்கள் தெளிவாக காணக்கிடைப்பதால் இது திப்பு சுல்தானின் புறங்காவல் கோட்டையாக விளங்கியது. இதன் அமைப்பு எதிரிகளை விரட்டி அடிக்க வாகாக இருந்தது. இப்போது எஞ்சியுள்ளது ஒரு சிதிலமடைந்த சுவர் மட்டுமே. இருப்பினும் வானிலிருந்து பார்க்கையில் கோட்டையின் அமைப்பு நன்றாகக் காணக் கிடைக்கிறது. இந்தக் கோட்டைக்கு வர நான்கு கி.மீ. தூரம் "நான்சுச் எஸ்டேட்" மலைப் பாதையில் நடந்து செல்ல வேண்டும். கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரத்தில் இருக்கும் இங்கிருந்து சமவெளிகளை நன்றாகக் கண்டு ரசிக்கலாம். நிறைய பறவைகள் வருவதால் பறவைகளைக் கண்டு ரசிக்க ஏற்ற இடம். எஸ்டேட் வழியாக மலைப்பாதையில் வரும்போது இயற்கை அழகைக் கண்டு ரசிக்கலாம்.

Brunda Nagaraj

More News

    Read more about: travel coonoor
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+