» »காலிம்பொங்கின் அற்புத வானிலையை அனுபவிக்க தவறாதீர்கள்

காலிம்பொங்கின் அற்புத வானிலையை அனுபவிக்க தவறாதீர்கள்

Posted By: Udhaya

தொடு வானத்தில் தெரியும் பனி மூடிய சிகரங்களை இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தின் வட பகுதியில் உள்ள இந்த அழகிய மலை வாசஸ்தலமான காலிம்பொங்கில் கண்டு மகிழலாம். காலிம்பொங் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4000 அடி உயரத்தில் உள்ளது. இங்குள்ள அழகிய இயற்கை காட்சிகள், சுத்தமான காற்று, மற்றும் இனிமையான வானிலை போன்றவை ஒரு இனிமையான சுற்றுலா அனுபவத்தை உங்களுக்கு வழங்குகின்றன. சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க இங்கு ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன.

சுறுக்கமாக சொல்வதென்றால் காலிம்பொங் இரு வேறு உலகங்களின் சிறந்த பகுதிகளை உங்களுக்கு வழங்குகின்றது. இங்கு நீங்கள் மேற்கு வங்காளத்தின் பாரம்பரியமான கலை, உணவு, மற்றும் மக்களின் வாழ்க்கை முறையை அனுபவித்து மகிழலாம். அதைத் தவிர இங்குள்ள புத்த மத செல்வாக்கானது, உங்களுக்கு இமயமலையின் மடியில் மஹாபாரத காலத்தின் நடுவில் வாழ்வது போன்ற உணர்வை வழங்குகின்றது.

காலிம்பொங் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்

காலிம்பொங் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்

காலிம்பொங்கிற்கு வரும் இயற்கை ஆர்வலர்களை இந்த நகரம் என்றுமே கைவிடுவதில்லை. இங்கு இருள்சூழ் சிறுத்தை, சிவப்பு பாண்டா, குரைக்கும் மான், மற்றும் சைபீரிய மரநாய் போன்ற அரிய வகை இனங்கள் உள்ளன. இந்த நகரத்தை சுற்றி பலவகையான பறவை இனங்கள் காணப்படுகின்றன. நீங்கள் உங்களுடைய மன அமைதியை இழந்து இருந்தால் இங்குள்ள நியோரா பள்ளத்தாக்கு தேசிய பூங்கா, மற்றும் ரிஷி பக்கிம் சந்திர பார்க் போன்றவற்றில் உங்களுடைய விடுமுறையை இயற்கையின் மடியில் அனுபவித்து மகிழலாம்.

wiki

காலிம்பொங் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்

காலிம்பொங் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்


இங்கு உள்ள பகுதிகளில் பைன் மரங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அதன் காரணமாக காலிம்பொங் ஒரு சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கிருந்து உலகம் முழுவதற்கும் பல்வேறு வகையான மல்லிகை மலர்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆகவே இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களுடைய பெண் தோழிக்கோ அல்லது மனைவிக்கோ மல்லிகை மலர்களை வாங்கிக் கொடுத்து தங்களுடைய அன்பை வெளிப்படுத்தலாம்.

Subhrajyoti07

காலிம்பொங் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்

காலிம்பொங் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்

கலாச்சாரத்தில் ஆர்வமுடைய அன்பர்கள் இங்குள்ள லெப்சா அருங்காட்சியகம் அல்லது ஜாங்க் டொக் பல்ரி ப்ஹொடாங்க் மடாலயத்திற்கு விஜயம் செய்யலாம். இந்த இரண்டு இடங்களும் நகர மையத்தில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவிலேயே உள்ளன.

Nichalp

காலிம்பொங் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்

காலிம்பொங் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்

உங்களுக்கு எந்த விதமான சுற்றுலா பிடிக்கும் என்றாலும், காலிம்பொங் அனைவருடைய சுற்றுலா தேவைகளையும் தீர்த்து வைக்கின்றது. இந்த நகரத்தை எளிதில் அணுக முடியும் ஏனெனில் இது சிலிகுரி விமான நிலையத்திற்கு மிக அருகில் உள்ளது. மேலும் இந்த நகரத்திற்கு சாலை மூலம் செல்லும் பயணிகள் இங்குள்ள அழகிய இயற்கை காட்சிகளை ரசித்துக் கொண்டே செல்ல முடியும். மேலும் காலிம்பொங்கில் தகவல் தொடர்பு ஒரு பிரச்சனையாக இல்லை. ஏனெனில் இங்கு ஏராளமான பிராட்பேண்ட் இன்டர்நெட் கஃபேக்கள் இருப்பதுடன், நகரில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்களின் அறைகளில் அதிவேக இண்டர்நெட் சேவை இணைப்புகள் உள்ளன.

wikipedia.org

காலிம்பொங் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்

காலிம்பொங் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்


காலிம்பொங் வானிலை

கோடை மற்றும் வசந்தகாலங்களே காலிம்பொங்கை சுற்றிப் பார்க்க சிறந்த பருவங்களாகும். இந்த பருவத்தில் ஏராளமான உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. காலிம்பொங் இந்தியா மற்றும் நேபாளத்திற்கு இடையேயான வணிகத்தில் ஒரு முக்கிய கேந்திரமாக செயல்படுகிறது. மேலும் இது இந்தியா மற்றும் சீன வர்த்தகத்தின் மிக முக்கிய சக்தியாக மாறும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. காலிம்பொங் இந்தப் பகுதியின் ஒரு முக்கிய கல்வி கேந்திரமாக விளங்குகிறாது. சமவெளியில் உள்ள பெரும்பாலான மாணவர்கள் கல்விக்காக காலிம்பொங் பகுதிக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

en.wikipedia.org