Search
  • Follow NativePlanet
Share
» »சுற்றுச்சூழலுக்கு உகந்த ஐந்து இடங்கள் தெரியும்?

சுற்றுச்சூழலுக்கு உகந்த ஐந்து இடங்கள் தெரியும்?

'சுற்றுச்சூழல்' என்ற சொல், தன்னுள் புதைத்திருக்கும் விஷயம் என்பது அவ்வளவு எளிதல்ல. சுற்றமும், சூழலும் என்றால், சுற்றியிருக்கும் குடும்பங்களும், உறவுகளும் மட்டுமே என்ற பார்வை சிலருக்கு உண்டு; சிலரோ சுற்றியிருக்கும் தங்களது வீடு, வாகனம், சொத்துக்கள் போன்றவற்றை மட்டுமே சுற்றுச்சூழல் என, எண்ணிக் கொள்கிறார்கள்.

உண்மையில், நம் சுற்றுச்சூழலில் இவையெல்லாம் மிகச்சிறு அங்கங்கள் மட்டுமே... மனிதன் உயிர்வாழ்வதற்குத் தேவையான மண், மரம், செடி-கொடிகள், காற்று, நீர், ஆகாயம் போன்ற அனைத்தும்தான் சுற்றுச்சூழலில் மிக முக்கியமான அங்கமாகின்றன. இதை அறியாமல், நம்மில் பலர் தங்களுக்கும் இந்த பூமிக்கும், எந்த தொடர்பும் இல்லை என்ற முறையில் நடந்துகொள்கிறார்கள்.

உங்களின் மூக்கு துவாரத்தை சில விநாடிகள் இறுகப்பிடித்துப் பாருங்கள்... உண்மை புரியும்.. பிராணவாயு வளிமண்டலத்திலிருந்து உடலுக்கு செல்லவில்லை என்றால், நாம் உயிர்வாழ இயலாது என்பது நிச்சயம் புரியும்.

நம்மைச்சுற்றியிருக்கும் நம் நிலத்தையும், நீரையும், காற்றையும் நம் வாழ்க்கையின் மிக உயரிய அங்கமாகக்கருதி வழிபட்டதால், அதனை மாசுபடுத்தாமல் பாதுகாக்க வேண்டும் என்ற மனநிலை இயல்பிலேயே, நம் முன்னோர்களுக்கு இருந்தது.

ஆனால், இன்றைய மனிதனோ அனைத்தையும் வணிகப் பொருளாக பார்க்கத் துவங்கிவிட்டான். நிலமும், நீரும் தற்போது முற்றிலும் வணிகமயமாகிவிட்டன. நாம் சுவாசிக்கும் காற்றும் கூடிய விரைவில் கடைத்தெருக்களில் சிலிண்டர்களில் விற்பனைக்கு வந்துவிடுமோ என்ற அச்சம் நம்மில் இல்லை என்று சொல்ல முடியாது.

சரி விஷயத்துக்கு வருவோம்...! சுற்றுச்சூழல் இவ்வுலகில் ஜீவிக்கும் ஒவ்வொரு உயிர்க்கும் எவ்வளவு முக்கியம் என்பது இனியும் புரியவில்லை என்றால், மேற்குறிப்பிட்ட பிராண வாயுவுக்கு சிலிண்டர்கள் தேடி அலையும் காலம் விரைவில் நம்மை வரவேற்கும் என்பதை மறைக்க முடியாது.

சரி அதை விடுங்க... என்ன புத்தி மதி சொன்னாலும் நமக்கு என, உள்ளூற ஒன்று தோன்ற வேணும் தானே...! அது தோன்றுமா இல்லை தோன்றாதா என்பது குறித்த ஆய்வு கட்டுரை இது இல்லை.

இயந்திர வாழ்வில் நீங்கள் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள் எனில், இந்த ஐந்து இடங்களுக்கு போய் ஒரு முறை பாருங்கள் புரியும். இயற்கை எவ்வளவு அழகானது, அது நம்மை வரவேற்கும் விதம் அலாதி என்பது. அந்த ஐந்து இடங்கள் எது என்று பார்ப்போம்?

கட்டுரையை படித்து விட்டு திட்டினாலும் திட்டுவீங்க.. இந்த இடத்தை எல்லாம் நாங்க அப்பவே அப்படி... ஹலோ என்ன வாய் நீளுது... ஏங்க நீங்க பார்த்துட்டோம் என்று சொல்ல வந்தேங்க...! அதுக்குள்ளே கோவப்படுறீங்க.

mudumalaiwildlifesanctuary

கொடைக்கானல்

மேற்கு தொடர்ச்சி மலையின் அழகிய மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள ஒரு அழகிய மலைவாசஸ்தலம் கொடைக்கானல். அங்கு செல்லும் பயண விரும்பிகள் மலைக் காடுகள், மலையேற்றப் பாதைகள் மற்றும் அழுக்கற்ற ஏரிகள் ஆகியவற்றை அனுபவிக்க முடியும். அதுமட்டுமின்றி, பயண விரும்பிகள் தங்கள் கால் அல்லது பைக்கில் மறையேறலாம். படகு சவாரியிலும் ஈடுபடலாம்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த ஹோட்டல்கள் மற்றும் உள்ளூர் உணவு வகைகள் உள்ளன. சுற்றுலா வரும் பயணிகள் அதிக கழிவுகளை விட்டுச் செல்லாமல் இருக்க தேவையான நடவடிக்கையை, உள்ளூர் நிர்வாகம் எடுத்து வருகிறது. ஆகையால், குறைந்த மாசுபாட்டை உருவாக்குகிறது.

கொடைக்கானலில் உள்ள சூரிய ஆய்வகத்தில், சூரிய சக்தியை அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்துவதால், நிலையான ஆற்றலுக்கான நகரத்தின் உறுதிப்பாட்டையும் சுட்டிக்காட்டுகிறது.

kodaikanal

குன்னுார்

நீலகிரி மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது குன்னூர். அங்கு பரவியுள்ள தேயிலை தோட்டங்கள், பாறைகளிலிருந்து கொட்டும் நீர்வீழ்ச்சிகள் உள்ளிட்டவை, உங்களைச் சுற்றியுள்ள அழகிய காட்சிகள் வாயிலாக இயற்கையில் சிறிது, சிறிது அமைதியை உங்களுக்குள் விதைக்கும் என்பதை மறக்க முடியாது.

சிம்ஸ் பூங்கா அல்லது தேயிலை தொழிற்சாலைக்கு வருகை தரும் போது, நிலையான விவசாய முறைகள் மற்றும் இந்தப் பகுதியில் உள்ள பல்லுயீர் பன்முகத்தன்மை எப்படி பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பதை நாம் உணரலாம். சுற்றுச்சூழலுடன் ஒத்துப்போகும் வெளிப்புறங்களில் புத்துணர்ச்சியை விரும்புவோருக்கு ஏற்றதாக இந்த இடம் இருக்கும். சுற்றுலாவை நோக்கிய பொறுப்பான அணுகுமுறைகளை ஊக்குவிக்கும் அதே வேளையில், அங்கு வீற்றிருக்கும் சுற்றுச்சூழல் மற்றும் பண்ணை விடுதிகள் பாரம்பரிய அனுபவங்களை வழங்குகின்றன.

munnar

ஆரோவில்

நிலையான கொள்கைகள், சமூக வாழ்க்கைக் கோட்பாடுகள் மற்றும் ஆன்மீக நல்லிணக்கம் ஆகியவற்றின் அடிப்படையில், ஒரு சர்வதேச நகரமாக ஆரோவில் திகழ்கிறது. இங்கு வரும் சுற்றுலா பயண விரும்பிகள், அங்குள்ள பண்ணைகளுக்குச் செல்வது, சுற்றுச்சூழல் இல்லங்களுக்குச் செல்வது, முழுமையான ஆரோக்கிய நடைமுறைகள் போன்ற சுற்றுச்சூழல் சார்ந்த நட்பு நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்தி கொள்ளும்போது, அதில் தங்களை மறந்து தான் போகின்றனர்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கழிவு மேலாண்மை மற்றும் போதுமான நுகர்வு ஆகியவற்றுக்கான செயல்விளக்கத் தளத்தைக் கொண்டிருப்பதால், இங்கு வரும் பார்வையாளர்கள் வருகையின் போதும், அதற்குப் பின்னரும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்க தவறுவதில்லை.

முதுமலை வனவிலங்கு சரணாலயம்

வனவிலங்குகளை விரும்புபவர்கள், சுற்றுச்சூழல் நட்பு பயணம் தேவைப்படுபவர்களுக்கு, முதுமலை வனவிலங்கு சரணாலயத்தில் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் வழியாக சாகச பயணத்தை அவர்களுக்கு வழங்கும்.

மேற்கு தொடர்ச்சி மலைகள், நீலகிரி மலைகளில் அமைந்திருக்கும் இந்த சரணலாயம், வங்காள புலி, இந்திய யானை, நீலகிரி வரையாடு போன்ற அழிந்து வரும் உயிரினங்களின் தாயகமாகும். பார்வையாளர்கள் இந்த சரணாலயத்தில் சமநிலையை பராமரிக்க உதவும் வழிகாட்டப்பட்ட சஃபாரிகள், இயற்கை நடைகள் அல்லது பறவைகள் கண்காணிப்பு பயணங்களில் தங்களை ஈடுபடுத்தி செல்லலாம்.

இங்குள்ள சுற்றுச்சூழல் லாட்ஜ்கள் மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலா ஏஜென்சிகளின் சேவைகள் நிலையான சுற்றுலாவை ஆதரிக்கின்றன. இந்த நடைமுறை, வன அனுபவத்தை பொறுப்புடன் உருவாக்க உதவுகிறது.

marinabeach chennai

மெரீனா கடற்கரை, சென்னை

ஹலோ... எங்களை எல்லாம் பார்த்தால் மூளை இல்லை என்று நினைத்தீர்களா...! சம்பந்தம் இல்லாமல் மெரீனா பக்கம் வந்து விட்டீர்களே என்று தான் கேட்கிறீர்கள்... மனதையும், உடலையும் நம்மை அறியாமல் இட்டு செல்லும் இடங்களில், சுற்றுச்சூழல் நிறைந்த இடங்களுக்கு முதல் மார்க்... அந்த வரிசையில் தான் இந்த ஐந்து இடங்கள் வருகின்றன.

பொய் இல்லைங்க... பயண விரும்பிகளில் சிலர் தனியாகவும், தங்களுக்கு பிடித்த இணையருடன் செல்வர். அப்படி செல்ல விரும்பு நபர்கள், இந்த ஐந்து இடங்களுக்கு போய் பாருங்கள். எந்தவொரு திட்டமிடலும் இல்லாமல் இயற்கை, அது தரும் வரத்தையும் அனுபவிக்க...!

உலகின் மிக நீளமான நகர்ப்புற கடற்கரைகளில் ஒன்று சென்னை மெரீனா. தங்க மணலைக் கொண்ட சென்னை மெரீனா கடற்கரை, சூரியன் அடிவானத்தில் மறையும் வரை கடல் ஓரத்தில் நிதானமாக நடக்கும்போது தெரியும் அதன் தரும் சகம். கடலும், அலையும் ஒவ்வொருவரின் மனதிலும் ஒரு விதமான கதைகளை சொல்லிவிட்டு செல்லும். அதை உணர்பவர்களுக்கு மட்டுமே புரியும்... சொல்லிவிட்டு செல்லும் கதைகள் என்னவென்று...!

தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டமும், தன்னுள் சுற்றுச்சூழலுக்கு உகந்த இடங்களை தன்னுள் பொதித்து வைத்துள்ளது. அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை அந்த இடத்தின் அழகைக் கெடுக்காமலும், அழியாமலும் பார்த்து கொள்வது நம் கடமை மட்டுமின்றி, எதிர்கால சந்ததியினருக்கு விட்டும் செல்லும் இயற்கை தந்த அருட்கொடை...!

More News

Read more about: chennai tamil nadu india
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+