• Follow NativePlanet
Share
» »திருப்பதி போறீங்களா – அப்போ IRCTCயின் இந்த பேக்கேஜை புக் பண்ணுங்க – ஒரே டூரில் 5 கோயில்கள்!

திருப்பதி போறீங்களா – அப்போ IRCTCயின் இந்த பேக்கேஜை புக் பண்ணுங்க – ஒரே டூரில் 5 கோயில்கள்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்ல ஆசையா? உங்களுக்காகவே இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) ஒரு அசத்தலான பேக்கேஜை அறிமுகம் செய்துள்ளது! IRCTCயின் பஞ்ச் தேவாலயம் டூர் பேக்கேஜ் வாயிலாக திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலையும், திருப்பதிக்கு அருகிலுள்ள முக்கியமான கோயில்களையும் சேர்ந்து தரிசனம் செய்யலாம்! இந்த பேக்கேஜை புக் செய்வது எப்படி? என்ன கட்டணம் என்று பார்ப்போமா?

கோடை விடுமுறையில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கூடுதலாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் கோடை விடுமுறையையொட்டி தினமும் லட்சகணக்கான பக்தர்கள் திருப்பதி நோக்கி படையெடுப்பார்கள்.

panchdevalayamtourpackageofirctc

IRCTCயின் சூப்பர் சுற்றுலா பேக்கேஜ்

கோடை விடுமுறையில், அதாவது ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் இலவச அல்லது சர்வ தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்கு ஏறக்குறைய 30 இலிருந்து 48 மணி நேரம் ஆகிறது. இது போல நீங்கள் காத்து கிடக்காமல் சுலபமாக ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கும், கூடவே திருப்பதியை ஒட்டியுள்ள சிறப்பு வாய்ந்த சில திருத்தலங்களையும் பார்ப்பதற்கு IRCTC ஒரு சூப்பரான டூர் பேக்கேஜை அறிமுகம் செய்துள்ளது.

IRCTCயின் 'பஞ்ச தேவலாயம்'

IRCTCயின் 'பஞ்ச தேவலாயம்' எனும் பேக்கேஜ் காணிபாக்கம், திருச்சானூர், திருமலை, ஸ்ரீகாளஹஸ்தி, ஸ்ரீனிவாச மங்காபுரம் ஆகிய ஆந்திர மாநிலத்தில் இடம்பெற்றுள்ள பிரபல கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். இது 1 இரவு, 2 நாட்கள் சுற்றுப்பயணமாகும். இந்த பேக்கேஜ் திருப்பதி விமான நிலைய, ரயில் நிலையத்திலிருந்து தொடங்குகிறது. நீங்கள் தமிழ்நாட்டின் எந்த பகுதியில் இருந்தாலும் திருப்பதி ரயில் நிலையத்தை அடைந்து விடவும். ஏனென்றால் அங்கிருந்து தான் இந்த சுற்றுலா ஆரம்பிக்கிறது.

முதல் நாள் - சீனிவாச மங்காபுரம், காணிபாக்கம், ஸ்ரீகாளஹஸ்தி

நாள் 01 - திருப்பதி ரயில் நிலையத்தில் காலை 7 மணிக்குப் பிறகு பயணம் தொடங்குகிறது. அங்கிருந்து நீங்கள் ஹோட்டலுக்குச் செல்வீர்கள். ப்ரெஷ் ஆன பிறகு, காலை உணவு வழங்கப்படும். பின்னர் சீனிவாச மங்காபுரம், காணிபாக்கம் கோயில்களுக்குச் செல்வார்கள். மதிய உணவுக்குப் பிறகு, காளஹஸ்தியில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோயிலுக்குச் செல்வீர்கள். பின்னர் திருப்பதியில் இரவு தங்க வைக்கப்படுவீர்கள்.

இரண்டாம் நாள் - ஸ்ரீவாரி திருக்கோயில், திருச்சானூர்

நாள் 02 - காலை உணவுக்குப் பிறகு, ஹோட்டலில் இருந்து செக் அவுட் செய்வீர்கள். காலை 9 மணிக்கு திருமலை ஸ்ரீவாரி சிறப்பு தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்வீர்கள். அதன் பிறகு திருச்சானூர் பத்மாவதி கோவிலுக்கு அழைத்து செல்லப்படுவீர்கள். பின்னர் திருப்பதி ரயில் நிலையம் / விமான நிலையத்தில் இறக்கி விடப்படுவீர்கள். இத்துடன் டூர் பேக்கேஜ் முடிவடைகிறது.

இதற்கான கட்டணங்கள் எவ்வளவு

ஐஆர்சிடிசி பஞ்சதேவாலயம் டூர் பேக்கேஜை மூன்று பேருடன் பகிர்ந்து கொள்வதற்கு கட்டணம் 6,590 ரூபாய், இரண்டு பேருடன் பகிர்ந்து கொள்ள 6,800 ரூபாய் ஆகும். மேலும் ஒருவர் மட்டும் செல்ல 8,280 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த பஞ்ச தேவாலயம் டூர் பேக்கேஜில் ஏசி தங்குமிடம், ஏசி வாகனத்தில் சுற்றிப் பார்ப்பது, திருமலைக்கு சிறப்பு நுழைவு வருகை, காலை உணவு, பயணக் காப்பீடு ஆகியவை அடங்கும்.

இந்த பேக்கேஜ் குறித்து நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை

1. அனைத்து யாத்ரீகர்களும்/சுற்றுலா பயணிகளும் அசல் ஆதார் அட்டை அல்லது அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.

2. சுற்றுலாப் பயணிகளுக்கு டோன்சரிங் செய்ய சிறிது நேரம் வழங்கப்படும். இருப்பினும் அதிக அவசரத்தில் உள்ளூர் சுற்றுலா வழிகாட்டியின் வழிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது.

3. ஆண்கள் வேஷ்டி (வெள்ளை) & சட்டை அல்லது குர்தா & பைஜாமா அணிந்து கோயிலுக்கு செல்ல வேண்டும்.

4. பெண்கள் சேலை அல்லது தாவணி, சுடிதார் அணிந்து செல்லலாம்.

5. அனைத்து யாத்ரீகர்களும் எந்த வயதினரையும் பொருட்படுத்தாமல் கண்டிப்பாக தடைசெய்யப்பட்ட டி-சர்ட், ஜீன்ஸ் போன்ற ஆடைகளை அணிய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

6. பெயர்/வயது/பாலினம் போன்றவற்றில் ஏதேனும் மாற்றங்கள் ஒருமுறை மட்டுமே அனுமதிக்கப்படும் & பயணத்திற்கு 10 நாட்களுக்கு முன்பு செய்யப்பட வேண்டும்.

7. டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவுடன் எந்த மாற்றமும் அனுமதிக்கப்படாது.

8. இந்த பேக்கேஜை பற்றி மேலும் தெரிந்து கொள்ள https://www.irctctourism.com/pacakage_description?packageCode=SHH035 என்ற இணையத்தள முகவரிக்கு செல்லவும்!

More News

    Read more about: tirupati
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+