» »இந்தியாவின் புகழ்பெற்ற 8 பாரம்பரிய சந்தைகள் எங்கெல்லாம் இருக்குன்னு தெரியுமா?

இந்தியாவின் புகழ்பெற்ற 8 பாரம்பரிய சந்தைகள் எங்கெல்லாம் இருக்குன்னு தெரியுமா?

By: Bala Karthik

நாட்களை நினைவில் தேக்கிவைக்கும் அளவிற்கு ஒட்டுமொத்த நாளையும் ஆடை, காலணிகள், ஆபரணங்கள் என பலவற்றை வாங்க கடைத்தெருவை சுற்ற, சில சுவையூட்டும் தெருவோரத்து உணவையும் சாப்பிட்டு சோர்வை மறக்க வைக்கும் அளவிற்கு கடைத்தெருக்கள் நம் நாட்டில் காணப்படுகிறது. அதோடு, அந்நாளின் முடிவில் தேவைக்கேற்ப வீட்டுப்பொருட்களை வாங்கி, பை முழுக்க நிரப்பிக்கொள்ள.. முகத்திலும் சிரிப்பானது நாள் ஏற்படுத்திய திருப்தியில் மலர்ந்து காணப்படுகிறது.

ஆனால் நேரங்கள் மாற! இன்று எல்லாமே சற்று வேகமாக நகர்கிறது. மளிகை பொருட்களிலிருந்து உணவு என...ஆடையிலிருந்து வீட்டு உபயோக பொருட்கள் வரை, குறைந்த நேரத்தில் நிறைந்த மனதுடன் நம் வீடு தேடி சேவையாளர்களின் மூலம் வருகிறது என்பதே உண்மை. அதோடு மால்களும், இணையத்து ஷாப்பிங்கும் அதிகரிக்க, பாரம்பரிய சந்தை வெளியில் பொருட்கள் வாங்குவதை நிறைய பேர் தவிர்த்திருக்கின்றனர். இருப்பினும், இத்தகைய சந்தைகள் முற்றிலும் மறைந்துவிட்டதா? என கேட்டால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஆடையிலிருந்து வாசனை திரவியங்கள் மற்றும் ஆபரணங்கள், என அனைத்தும் இந்த சந்தையில் கிடைக்க, சிறந்த விலையில் நிரந்த தரத்துடனும் அவை இருக்கிறது. நாடு முழுவதும் அவ்வாறு காணப்படும் பாரம்பரிய சந்தைகளை பற்றி நாம் பார்க்கலாம்.

 ஜொஹாரி பஜார் – ஜெய்ப்பூர்:

ஜொஹாரி பஜார் – ஜெய்ப்பூர்:

ஹவா மஹாலுக்கு அருகில் இது காணப்பட, ஆபரணங்களை விரும்பும் ஒருவருக்கு இந்த சந்தை சிறந்த நிறுத்தமாக அமைகிறது. இந்த சந்தையில் கடைகள் நிறைய காணப்பட, விதவிதமான ஆபரணங்கள் மற்றும் விதவிதமான மாணிக்க கற்களும் இங்கே கிடைக்கிறது.

இந்த பஜாரில் மற்ற சந்தைகளும் சூழ்ந்திருக்க, இங்கே ஆடை, பாத்திரங்கள், காலணிகள் என பலவும் கிடைக்கிறது. உங்களுக்கு அலைந்து களைப்புறும் வேளையில் ஒரு க்ளாஸ் லஸி குடித்து மீண்டும் உற்சாகத்துடன் கடைகளை சுற்றலாம்.

Garry Knight

 டடார் மலர் சந்தை – மும்பை:

டடார் மலர் சந்தை – மும்பை:


இந்த நகரத்தின் உலா கனவாக தெருக்கடைகள் காணப்படுகிறது. இந்த மலர் சந்தை முற்றிலும் வித்தியாசமாக காணப்படுவதோடு, தனித்துவமிக்க அனுபவத்தையும் அது நமக்கு தருகிறது.

இந்த சந்தை மொத்தமாக நாம் பொருளை வாங்க உதவ, தினசரி வியாபார நோக்கத்துடனும் உதிரியாகவும் சில சிறுக்கடைக்காரர்கள் வாங்கி செல்கின்றனர். இந்த இடமானது உள்புற சந்தையாக அமைந்திருக்க, புகைப்பட ஆர்வலர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் இவ்விடம் சொர்க்கமாக காட்சியளிக்கிறது.

அதிகாலை பொழுதில் இங்கே வருவதன் மூலமாக, நிறைய வியாபாரிகள் தங்களுடைய பொருட்களை விற்க தொடங்குவதை பார்க்க முடிய காலை பத்து மணி வரையில் பேரம் நடைபெறுவதையும் நம்மால் ரசிக்க முடிகிறது.

Meena Kadri

 கன்னௌஜ் சந்தை – உத்திர பிரதேசம்:

கன்னௌஜ் சந்தை – உத்திர பிரதேசம்:

இந்த புகழ்பெற்ற சந்தையில் விதவிதமான வாசனை பொருட்கள் கிடைக்க, அதோடு புகையிலை மற்றும் ரோஸ் வாட்டரும் கூட இங்கே கிடைக்கிறது. அதனால், இந்த இடத்தை நாம் காண வரும் முன்பே, உங்கள் நாசியானது நல்ல நிலையில் வாசனை நுகர ஏதுவாக இருக்கிறதா? என்பதனை சரிப்பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

‘அக்தருக்கு' பெயர் பெற்ற இந்த சந்தை, தாவர கூறுகளால் உருவாக்கப்பட்ட இயற்கை வாசனை எண்ணெயையும் கொண்டுள்ளது. இந்த சந்தையில் 650 வாசனை திரவியங்களுக்கு மேல் காணப்பட, அவை அனைத்தும் பாரம்பரிய முறைப்படி பிரித்தும் தயாரிக்கப்பட்டுள்ளது.

Unknown

 மஹிதர்புரா வைர சந்தை – சூரத்:

மஹிதர்புரா வைர சந்தை – சூரத்:


இந்த சந்தையில் நாம் நுழைய, உங்கள் பார்வையை பெரிதாய் ஈர்க்கும் ஒரு சம்பவமாக, ஒருவனால் நூறு வைரங்கள் சாதாரண கற்களை போன்று எடுத்து செல்லப்பட வியப்பில் நம்மை அது ஆழ்த்துகிறது. இங்கே வருபவர்கள் பெரும் தொகையுடன் வர, விலைமதிப்பில்லா கற்களை வாங்கிக்கொண்டும் செல்வதோடு சிறிய மளிகை கடைகளில் கிடைக்கும் வீட்டு பொருட்களையும் வாங்கி செல்கின்றனர்.

மேலும், இங்கே வேலையாட்கள் பாலீஷ் போட்டு, வைரங்களை மிகவும் கவனத்துடன் ஆய்வு செய்வதையும் நம்மால் பார்க்க முடிய, மில்லியன் கணக்கில் பணத்தை வைத்துக்கொண்டு அந்த வைரத்திற்க்காக பேரம் பேசுபவர்களையும் நம்மால் பார்க்க முடிகிறது.

Swamibu

 இமா சந்தை – இம்பால்:

இமா சந்தை – இம்பால்:

‘தாய் சந்தை' என்றழைக்கப்படும் இந்த இமா சந்தை, உலகம் முழுவதிலும் நாம் அலசி ஆராய, பெண்களால் மட்டும் நடத்தப்படும் ஒரே சந்தை என்பதையும் நமக்கு தெரியப்படுத்துகிறது. முப்பதாயிரம் பெண்களுக்கு மேல் வரிசையாக இங்கே உட்கார்ந்திருக்க, அவர்கள் கைவினை பொருட்கள், சணல் கூடைகள், ஆடைகள், மளிகை பொருட்கள், மீன்கள் என பலவற்றையும் விற்கின்றனர்.

OXLAEY.com

 ஜீவ் நகரம் –கொச்சி கோட்டை:

ஜீவ் நகரம் –கொச்சி கோட்டை:

வாசனை பொருட்களுக்கு பெயர் பெற்ற இந்த ஜீவ் நகர சந்தை, அவற்றை கடந்து பழம்பொருட்கள், சால்வைகள், வாசனை திரவியங்கள், கைவினை பொருட்கள், என பலவும் இங்கே விற்கப்படுகிறது. இந்த பொருட்கள் அனைத்தும் கடந்த சில யூத குடும்பங்களால் விற்கப்பட்டது.

கவர்ச்சிகரமான வாசனை திரவியங்களின் மணமானது அந்த வரிசையில் அமைந்திருக்கும் சிறிய கடைகளை நோக்கி நம்மை தள்ள, நிறைய கடைகள் பெரும் போட்டிக்காரணமாக அடைப்புகளை இழுத்தும் காணப்படுகிறது.

இந்த வாசனை பொருட்கள் கடைகள் மூடியிருக்க, அந்நேரத்தில் பழம்பொருட்களை மட்டுமே இவர்கள் விற்கின்றனர் என்றும், இவைதான் முக்கியமாக கருதப்படுகிறது என்பதும் நமக்கு தெரிய வருகிறது.

Thunderboltz

 காரி போலி – தில்லி:

காரி போலி – தில்லி:


ஆசியாவின் பெரிய மொத்த வாசனை சந்தை வியாபாரமான காரி போலி, பதினேழாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டதாகும். இங்கே விதவிதமான வாசனை பொருட்கள், கொட்டைகள், மூலிகைகள், என பல பொருட்களும் விற்கப்படுகிறது.

இந்த இடத்தை உலகிலேயே பழமையான வாசனை சந்தைகளுள் ஒன்றாகவும் கருதப்பட, இந்த சந்தையானது சாந்தினி சந்தை பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது.

carol mitchell

 லாட் பஜார் – ஹைதராபாத்:

லாட் பஜார் – ஹைதராபாத்:

சார்மினார் நினைவு சின்னத்திற்கு அருகாமையில் இது காணப்பட, இந்த சந்தையானது பெரிய அளவிலான விதவிதமான வளையல்களுக்கு பெயர் பெற்று விளங்க, அதோடு இணைந்து அரை விலைமதிப்பில்லா கற்கள் மற்றும் முத்துக்களும் காணப்படுகிறது.

குறுகிய பாதை முழுவதும் இந்த சந்தையானது பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்த பகுதிக்குள் நீங்கள் நுழையும் முன்பே பேரம் பேசும் உங்கள் திறனை கூர்மையாக்கிக் கொள்ள வேண்டியதும் அவசியமாவதோடு, இதனால் நல்ல பொருட்களை நல்ல விலைக்கும் நம்மால் வாங்க முடிகிறது.

Sissssou

Read more about: travel