பெரும்பாலும் மன்னர்கள் தங்களுக்கென அரண்மனைகள், கோட்டைகளை கட்டி அலங்கரித்துவிட்டு, யாருக்கும் தெரியாமல் பொன்னையும், பொக்கிஷங்களையும் சேர்த்து வைப்பார்கள். அதை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்க சில சுரங்கங்களையும் ஏற்படுத்துவார்கள். அதுமட்டுமல்லாமல், போர்க்காலத்தில் சில நேரங்களில் பாதுகாப்பு கருவிகளையும் இங்கு வைத்திருப்பார்கள். சில நேரம் தப்பிச் செல்லவும் இந்த வழியை பயன்படுத்துவார்கள். அப்படி மைசூரு மாநகரத்தில் திப்பு சுல்தான் காலத்தில் கட்டப்பட்டுள்ள யாருக்கும் தெரியாத 5 சுரங்கங்கள் பற்றியும் அதன் மர்மங்கள் பற்றியும் இந்த பதிவில் காண்போம்.

திருவரங்கப்பட்டிணம்
ஸ்ரீரங்கப்பட்டிணம் என்று அழைக்கப்படும் திருவரங்கப்பட்டிணம் விஷ்ணுவின் அவதாரத் தலங்களில் ஒன்றாகும். மைசூரு மாநகரத்தின் கலை அம்சம் நிறைந்த கோட்டைகளுள் ஒன்று. 1537ம் ஆண்டு கட்டப்பட்ட மிக அழகான கோட்டை. மிகவும் கடினமான கோட்டை எனும் பட்டியலில் இது இந்தியாவிலேயே இரண்டாவது கோட்டை.
Alende devasia

வாயில்கள்
இந்த கோட்டைக்கு இருக்கும் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த கோட்டையின் நான்கு வாயில்களுக்கும் இடப்பட்டுள்ள பெயர்கள்தான்.
முதல் வாயில் பெங்களுரு வாயில் என்று அழைக்கப்படுகிறது. இரண்டாவது வாயிலுக்கு டெல்லி வாயில் என்றும், மூன்றாவது மைசூர் வாயில் என்றும் பெயரிடப்பட்டிருந்தது. நான்காவது வாயில் நீர் யானை கதவு என்றஉ அழைக்கப்படுகிறது.
Jayanthdev

பாதுகாப்பு அரண்
இந்த கோட்டையைப் பற்றி பலருக்கும் தெரியாத அம்சங்களில் ஒன்று இதன் அரண் போன்ற அமைப்பு. அதாவது இது டபுள் லேயர் என்று சொல்லப்படகூடிய, இரட்டை பாதுகாப்பு அமைப்பு கொண்டதாகும். இந்த கோட்டையினுள் நுழைவதென்பது திப்பு சுல்தான் காலத்தில் அவ்வளவு எளிமையாக இருந்திருக்காது. இங்கு தான் திப்பு சுல்தான் தங்கியிருந்தார்.அவருக்கு மிக அதிகஅளவில் எதிரிகள் இருந்தனர்.
Chitra sivakumar

ஆங்கிலேயர்களுடன் அசராமல் போரிட்ட துணிவு
துணிவே துணை என சீறுகொண்டு எழுந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல போர்கள் தொடுத்து பலவற்றில் வெற்றியும் கண்டார் திப்பு சுல்தான். அதிலும் இந்த கோட்டை அருகே நடைபெற்ற போரில் மிகவும் கடுமையாக போரிட்டனர் இரு படைகளும். இங்கு ஆங்கிலேயருடன் அவர் போரிட்டதே அவருடைய கடைசி போராக அமைந்தது. இந்த கோட்டைதிப்புவின் முன்னோர்களால் கட்டப்பட்டிருந்ததாக தெரிகிறது. ஆனால் இந்த கோட்டை திப்புவின் பெயரைத் தாங்கி மகிழ்கிறது.
Satyabrata Nanda

கட்டுமான அமைப்பு
இந்தோ இஸ்லாமிய கட்டிடக் கலை அமைப்பில் கட்டப்பட்டு, மிகவும் பிரம்மாண்டமாக தோற்றமளிக்கிறது இந்த கோட்டை. கோட்டைக்கு கீழே இரண்டு நிலவறைகள் காணப்படுகின்றன. இங்கு பலர் சிறைப்படுத்தப்பட்டிருந்ததாக தெரிகிறது. இந்த கோட்டைக்கு அருகே புத்தர் வந்து தங்கியதாகவும் கருத்துகள் பரவலாக பேசப்படுகின்றன.
Chitra sivakumar

மர்ம சுரங்கங்கள்
திப்பு சுல்தானின் கோட்டைகளை இணைக்கும் ஐந்து சுரங்கங்களையும் கட்டியுள்ளார். அவரின் மாளிகையிலிருந்து கோயிலுக்கும், கோட்டைகளுக்கும் வெவ்வேறு சுரங்கங்கள் இருக்கின்றன. ஒரு சுரங்கம் கோயில் குளம் வரை நீள்கிறது. இதன்மூலமாக ஆற்றிலிருந்து குளத்துக்கு நீர் எடுத்து வந்துள்ளனர் என தெரிகிறது. இது திப்பு சுல்தானின் நீர் மேலாண்மை பற்றி இன்னும் நிறைய படிக்க தூண்டுகிறது. மேலும் திப்புவின் மாளிகையிலிருந்து ரங்கநாதசுவாமி கோயிலுக்கும் ஒரு சுரங்கம் செல்கிறது. இதைத் தொடர்ந்து இன்னொரு சுரங்கம் எங்கே செல்கிறது என்றே கண்டுபிடிக்கமுடியவில்லை. அது ஆபத்துக் காலத்தில் தப்பிச் செல்ல கட்டப்பட்டதாக இருக்கலாம். இப்படி மீதி இரண்டு சுரங்கங்களும் மர்மமாகவே இருக்கிறது.
Subhashish Panigrahi

திருவரங்கப்பட்டிணம் ரங்கநாதர் கோயில்
ஸ்ரீரங்கபட்டணா வரும் பயணிகளுக்கான முக்கிய சுற்றுலா ஸ்தலம் இந்த ஷீ ரங்கநாதஸ்வாமி கோயிலாகும். இது 9ம் நூற்றாண்டில் கங்க வம்சத்தினரால் கட்டப்பட்டுள்ளது. மிகப்பெரிய கோயில்களுள் ஒன்றாக கருதப்படும் இந்தக்கோயில் பின்னாளில் விஜயநகர வம்சம், ஹொய்சள வம்சம் போன்ற ராஜ வம்ச ஆட்சிகளில் பலவிதமாக புதுப்பிக்கப்பட்டு மெருகேற்றப்பட்டுள்ளது.
Paweł 'pbm

விஷ்ணுவின் அவதாரங்கள்
விஷ்ணு பஹவானின் ரங்கநாத அவதாரத்துக்கான கோயிலான இது பஞ்சரங்க க்ஷேத்திரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.கருங்கல்லில் உருவாக்கப்பட்ட புன்முறுவலுடன் காட்சியளிக்கும் விக்கிரகத்தை இந்த கோயில் கொண்டுள்ளது. கர்ப்பகிருகத்தில் உள்ள இந்த விக்கிரகம் அனந்த சயன கோலத்தில் (பாம்பின் மீது பள்ளி கொண்டு) காட்சியளிக்கிறது.
Chitra sivakumar -

கலையம்சம் நிறைந்த தூண்கள்
விஷ்ணுவின் 24 அவதாரங்கள் சிற்பங்களாக செதுக்கப்பட்ட கலையம்சம் நிறைந்த தூண்கள் இந்தக் கோயிலில் வரிசையாக காணப்படுகின்றன. கோயில் உட்புறச்சுவர்களில் சீனிவாசக்கடவுள் மற்றும் பஞ்சமுக ஆஞ்சநேயரின் சிற்பங்களும் உள்ளன. கர்நாடக மாநிலத்தின் பெரிய கோயில்களில் ஒன்றாக கருதப்படும் இந்தக் கோயிலில் ஒரு உப்பரிகை, ஒரு பிரம்மாண்ட கோபுரம், தூண்களுடன் கூடிய ஒரு மண்டபம் ஆகியவை அடங்கியுள்ளன. இவை யாவுமே வெவ்வேறு காலகட்டத்தில் தனி இணைப்புகளாக கட்டப்பட்டுள்ளன.
Ms Sarah Welch

திருவிழா
லட்சாத்வீபோத்சவம் எனும் 1 லட்சம் விளக்குகள் ஏற்றப்படும் சடங்குடன் கூடிய சங்கராந்தி திருவிழாவின் போது பயணிகள் இங்கு விஜயம் செய்தால் கூடுதல் விசேஷம். வருடம் முழுதும் திறந்திருக்கும் இந்தக்கோயிலில் பூஜை நேரம் காலை 8 - 9.30 மற்றும் மாலை 7 - 8 மணியாகும்.
RanjithaRKRao

மஸ்ஜித்-இ-அலா மசூதி
மஸ்ஜித்-இ-அலா என்று பிரசித்தமாக அறியப்படும் இந்த மசூதி ஸ்ரீரங்கப்பட்டணாவில் அவசியம் பார்க்க வேண்டிய வரலாற்றுச்சின்னமாகும். இந்த மசூதி 1784ல் திப்பு சுல்தானால் அவர் மைசூரைக் கைப்பற்றியபிறகு கட்டப்பட்டுள்ளது.
இந்த மசூதியின் முதல் ‘இமாமத்' (தொழுகை வசன உச்சாடனம்) திப்பு சுல்தான் மூலமே செய்விக்கப்பட்டது என்பதாக நம்பப்படுகிறது.
இந்த வரலாற்றுச்சின்னமான மசூதி திப்பு சுல்தானுக்கு மிகப்பிடித்த இடமாக விளங்கியுள்ளது. இரண்டு அடுக்குகளால் ஆன இந்த மசூதி வழக்கத்திற்கு மாறாக அளவில் சிறியதான குமிழ்கோபுரத்தையும், இதர துணைக்கோபுரங்களையும், இரண்டு தூண்கோபுரங்களையும் கொண்டுள்ளது.
97 வருடங்களாக இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு கடிகாரத்தையும் இந்த மஸ்ஜித் கொண்டுள்ளது. இதன் வடபகுதியில் உள்ள பரந்த கூடம் தொழுகை அரங்கையும், மற்றும்‘மி(ஹ்)ராப்' (புனித மெக்கா இருக்கும் திசையை காட்டும் அமைப்பு) மாடத்தையும் கொண்டுள்ளது.உயர்த்தப்பட்ட தரைத்தளத்தில் எழுப்பப்பட்டுள்ள இந்த மசூதியின் முன்பகுதி திறந்த வெளியாக காணப்படுகிறது.
தூண்கோபுரங்களின் மீது எண்கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ள மாடங்களில் புறக்களுக்கான துவாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 200 படிகளை ஏறிச்சென்று இந்த மினாரெட்களின் (தூண் கோபுரம்) உச்சியிலிருந்து பார்த்தால் அருகிலுள்ள பிரதேசங்களின் அற்புதமான வான் தரிசனம் கிடைக்கிறது.
மறைந்த அப்துல் ஹஃபீஸ் ஜுனைடி இந்த மசூதியில் கடந்த 50 வருடங்களாக தொழுகைப்பணியில் ஈடுபட்டிருந்தார் என்று சொல்லப்படுகிறது. பயணிகள் இங்கு அல்லாவின் 99 புனிதப்பெயர்கள் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். மதரஸா எனும் இஸ்லாமிய ஆன்மீகப்பள்ளி இங்கு மசூதி வளாகத்தில் அமைந்துள்ளது.
itslife.in

ரங்கணாத்திட்டு பறவைகள் சரணாலயம்
ஸ்ரீரங்கப்பட்டணா அருகில் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த ரங்கணாத்திட்டு பறவைகள் சரணாலயம் பயணிகள் மறக்காமல் பார்க்க வேண்டிய சுற்றுலா ஸ்தலமாகும். ஆறு தீவுத்திட்டுகளை உள்ளடக்கிய இந்த சரணாலயம் 67 ச.கி.மீ பரப்பளவைக்கொண்டுள்ளது. 1940 ம் ஆண்டு பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட இந்த பகுதிக்கு ஜுன் முதல் அக்டோபர் வரையிலான இடைப்பட்ட காலத்தில் விஜயம் செய்வது உகந்தது.இந்த சரணாலயத்தில் பல பிரசித்தமான புலம் பெயர் பறவைகளான கூழைக்கடா (பெரிய வகைக்கொக்கு) செங்கால் நாரை போன்றவை வாழ்கின்றன. இவை தவிர அரிவாள் மூக்கன், கரண்டிவாயன், கொக்கு, நீர்க்காகம், கௌதாரி போன்ற பறவைகளும் இங்கு காணப்படுகின்றன. படகுச்சவாரி செல்வதன் மூலம் கொக்கு, கரண்டி வாயன், நாரை போன்றவற்றை பார்க்கலாம்.பயணிகள் இந்தச் சரணாலயத்தை காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை பார்க்கலாம். இந்தியப் பயணிகளிடம் 50 ரூபாயும் வெளி நாட்டுப் பயணிகளிடம் 300 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. பயணிகள் படகுச்சவாரி செல்வதற்கும் அதே போன்ற கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
itslife.in

நீர்த்தேக்கப்பகுதி
ஸ்ரீரங்கப்பட்டணா செல்லும் வழியில் அமைந்துள்ள இந்த எழில் நிறைந்த சிற்றுலா ஸ்தலம் பயணிகள் தவறவிடக்கூடாத ஒரு இடமாகும். செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த நீர்த்தேக்கப்பகுதி நீருக்கருகில் உட்கார்ந்து அமைதியாக ரசிக்க விரும்பும் உள்ளங்களுக்கு மிகப்பொருத்தமான இடமாகும்.
இந்த ஸ்தலத்தை ரசிப்பதற்கு பொருத்தமான காலம் குளிர்காலமாகும். அச்சமயம் நீர் மட்டம் உயர்ந்து காணப்படுவதுடன் பயணிகள் குளிக்கவும் கரையோரம் பொழுது போக்கவும் ஏற்ற சூழலையும் கொண்டுள்ளது. இது பெரிய நீர்வீழ்ச்சியாக இல்லாவிட்டாலும் 15 கி.மீ தூரத்திலுள்ள மைசூரிலிருந்து பயணிகள் அதிக அளவில் இங்கு வருகை தருகின்றனர்.
இது மட்டுமின்றி சினிமா இயக்குநர்களுக்கு மிகப்பிடித்த இடமாகவும் (படப்பிடிப்பிற்கு பொருத்தமான இடமாக) பால்முரி நீர்விழ்ச்சி பிரசித்தி பெற்றுள்ளது.
itslife.in



Click it and Unblock the Notifications




