» »சோழர்களின் ரத்தக்கறைகளில் கட்டிய பிரம்மாண்ட கோயில் இது!

சோழர்களின் ரத்தக்கறைகளில் கட்டிய பிரம்மாண்ட கோயில் இது!

Posted By: Staff

ஹொய்சளப் பேரரசின் தலைநகரமாக விளங்கிய பேலூரில் சென்னக்கேசவா கோயில் அமைந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தின் முக்கிய விஷ்ணு ஆலயங்களில் ஒன்றாக, 'விஜயநாராயணர் கோயில்' என்று முன்னர் அழைக்கப்பட்ட சென்னக்கேசவா கோயில் திகழ்கிறது.

'சென்னக்கேசவா' என்பதற்கு கன்னடத்தில் 'அழகிய கேசவா' என்று பொருள்படும். இந்தக் கோயில் பெங்களூரிலிருந்து 220 கீமீ தொலைவில் அமைந்துள்ளது. இதன் வரலாற்றில் ஒரு மாபெரும் விசயம் மறைந்துள்ளது. அதுகுறித்தும் கோயிலின் பெருமைகள் குறித்தும் இந்த பதிவில் காணலாம்.

படித்துப் பாருங்கள் : சோழர்கள் கட்டிய அற்புத கோயில்கள்!

சோழர்களின் வீழ்ச்சியில் எழுந்த கோயில்!!!

சோழர்களின் வீழ்ச்சியில் எழுந்த கோயில்!!!

1117-ஆம் ஆண்டில் ஹொய்சள மன்னன் விஷ்ணுவர்த்தன் என்பவன், தலைக்கோட்டைப் போரில் சோழர்களை வெற்றி கொண்டதின் நினைவுச்சின்னமாக இந்த கோயிலை கட்டியதாக சொல்லப்படுகிறது. சோழ வீரர்களை கொன்று குவித்து, அந்த வெற்றியைக் கொண்டாட நினைத்து கட்டிய கோயில் இது. விஷ்ணுவர்தன் சமணசமயத்தில் இருந்து வைணவத்துக்கு மாறியதைக் குறிக்கவே வைணவக் கோயிலான இதை அவன் கட்டியதாக ஒரு சாரார் நம்புகின்றனர்.

படம் : Dineshkannambadi

ராஜகோபுரம்

ராஜகோபுரம்

சென்னக்கேசவா கோயில் வளாகத்தின் தலை வாயிலில் விஜயநகரப் பேரரசுக் காலத்தில் கட்டப்பட்ட ராஜகோபுரம் அமைந்துள்ளது.

படம் : Pinacol

கோயில்கள்

கோயில்கள்

சென்னகேசவர் கோயில் கிழக்கு நோக்கியபடி அமைந்திருக்க இதன் இரு மருங்கிலும், வலது பக்கத்தில் காப்பே சான்னிக்கிரயர் கோயிலும்; ஒரு சிறிய இலக்குமி கோயிலும், இடது புறத்திலும்; பின்புறத்திலும் ஆண்டாள் கோயிலும் அமைந்துள்ளன.

படம் : Mashalti

யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னம்

யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னம்

சென்னக்கேசவா கோயில் வளாகத்தில் உள்ள கோயில்கள் அனைத்தும் யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படம் : Mashalti

ஸ்தம்பங்கள்

ஸ்தம்பங்கள்

சென்னக்கேசவா கோயிலில் இரண்டு ஸ்தம்பங்கள் உள்ளன. அவற்றில் பிரதான ஆலயத்தை நோக்கியுள்ள கருட ஸ்தம்பம் விஜயநகர காலத்திலும், வலது புறம் உள்ள மற்றொரு ஸ்தம்பமான தீப ஸ்தம்பம், ஹொய்சளர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகும்.

படம் : Jchetan

சாளுக்கிய பாணி

சாளுக்கிய பாணி

ஹொய்சளர்களால் கட்டப்பட்ட முதல் கோயிலாக சென்னக்கேசவா கோயில் கருதப்பட்டாலும், இந்தக் கோயிலில் சாளுக்கிய பாணி கட்டிடக்கலையின் பாதிப்பு பளிச்சென தெரிகிறது.

படம் : Shadows44

அதிகமான அலங்காரம் இல்லை!

அதிகமான அலங்காரம் இல்லை!

ஹளேபீட்டில் உள்ள ஹொய்சலேஸ்வரர் கோயில் மற்றும் சோமநாதபுரத்து கேசவர் கோயில் போன்ற பிற்கால ஹொய்சளக் கோயில்களில் காணப்படுவது போல் அதிகமான அலங்கார வேலைப்பாடுகள் சென்னக்கேசவா கோயிலில் இல்லை.

படம் : Dineshkannambadi

மூன்று வாயில்கள்

மூன்று வாயில்கள்

சென்னக்கேசவா கோயிலில் மொத்தம் மூன்று வாயில்கள் இருக்கின்றன. இவற்றின் கதவுகள் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய வாயிற்காவலர் சிற்பங்களோடு அமைந்துள்ளன.

படம் : Gagan.G.C

காப்பே சன்னிக்கிரயர் கோயில்

காப்பே சன்னிக்கிரயர் கோயில்

விஷ்ணுவர்தனின் அரசியாகிய சாந்தலா தேவியினால் கட்டப்பட்ட காப்பே சன்னிக்கிரயர் கோயில், சென்னக்கேசவா கோயிலிலும் சிறிதாக இருந்த போதிலும், கட்டிடக்கலை அடிப்படையில் அதேயளவு முக்கியத்துவம் கொண்டது. எனினும் இதில் சிற்ப வேலைப்பாடுகள் அதிகமாக இல்லை. பிற்காலத்தில் இன்னொரு கர்ப்பக்கிருகம் சேர்க்கப்பட்டதுடன் இது இரட்டைக் கோயிலாக ஆனது. முந்தையது நட்சத்திர வடிவில் அமைந்திருக்க, பின்னது எளிமையான நாற்பக்க வடிவுடையதாக இருக்கிறது.

படம் : Holenarasipura

தூண்கள்

தூண்கள்

சென்னக்கேசவா கோயிலில் மொத்தம் 48 தூண்கள் உள்ளன. இவற்றில் நரசிம்மர் தூண் மிகவும் புகழுடன் அறியப்படுகிறது.

படம் : Dineshkannambadi

கர்ப்பகிரக கதவு

கர்ப்பகிரக கதவு

நுணுக்கமான கலை வேலைப்பாடுகளுடன் காட்சியளிக்கும் கர்ப்பகிரக கதவு.

படம் : Charles Haynes

புஷ்கரணி

புஷ்கரணி

சென்னக்கேசவா கோயிலிலுள்ள புஷ்கரணி.

படம் : Pradam

ரங்கநாயகி அம்மன் சன்னதி

ரங்கநாயகி அம்மன் சன்னதி

சென்னக்கேசவா கோயில் வளாகத்தில் அமைந்துள்ள சிறிய கோயிலான ரங்கநாயகி அம்மன் சந்நிதி.

படம் : Pavithrah

கருட ஸ்தம்பம்

கருட ஸ்தம்பம்

விஜயநகர காலத்தில் கட்டப்பட்ட கருட ஸ்தம்பம்.

படம் : Ananth H V

சௌம்யநாயகி அம்மன் சந்நிதி

சௌம்யநாயகி அம்மன் சந்நிதி

சென்னக்கேசவா கோயில் வளாகத்தில் அமைந்துள்ள சௌம்யநாயகி அம்மன் சந்நிதி.

படம் : Swaminathan Natarajan

நுண்ணிய சிற்பங்கள்

நுண்ணிய சிற்பங்கள்

சென்னக்கேசவா கோயிலில் காணப்படும் நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகள்.

படம் : Chetan Annaji Gowda

கஜாசுரசம்ஹாரம்

கஜாசுரசம்ஹாரம்

கஜாசுரன் எனும் அரக்கனை வதம் செய்யும் சிவபெருமானின் சிற்பம்.

படம் : Sarvagnya

பயணிகளும், பக்தர்களும்

பயணிகளும், பக்தர்களும்

சென்னக்கேசவா கோயிலில் காணப்படும் பயணிகள் மற்றும் பக்தர்களின் கூட்டம்.

படம் : Sughoshdivanji

அறிவிப்பு பலகை

அறிவிப்பு பலகை

பேலூர் சென்னக்கேசவா கோயிலைப் பற்றிய தகவல்களை தெரிவிக்கும் அறிவிப்பு பலகை.

படம் : PP Yoonus

த்வஜ ஸ்தம்பம்

த்வஜ ஸ்தம்பம்

ஹொய்சளர்கள் காலத்தில் கட்டப்பட்ட த்வஜ ஸ்தம்பம், தீப ஸ்தம்பம் என்றும் அழைக்கப்படுகிறது.

படம் : Nagalakshmi Vasista

தர்பண சுந்தரி

தர்பண சுந்தரி

சென்னக்கேசவா கோயில் சிற்பங்களிலேயே அற்புதமான சிற்பமாக கருதப்படும் தர்பண சுந்தரி சிற்பம்.

படம் : Santhosh

மினியேச்சர் ஆலயம்

மினியேச்சர் ஆலயம்

சென்னக்கேசவா கோயிலின் வாயிலில் அமையப்பெற்றுள்ள பூமிஜா கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட மினியேச்சர் ஆலயம்.

படம் : Dineshkannambadi

ஷிலாபாலிகா

ஷிலாபாலிகா

சென்னக்கேசவா கோயிலின் தூண் ஒன்றில் காணப்படும் ஷிலாபாலிகா அல்லது தேவலோக கன்னியின் அழகிய சிற்பம்.

படம் : Sujeetgoit

அடையாளச் சின்னம்

அடையாளச் சின்னம்

சென்னக்கேசவா கோயிலில் ஹொய்சளர்களின் அடையாளச் சின்னம் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

படம் : Subramanya Hariharapura Sridhara

கருடன்

கருடன்

சென்னக்கேசவா கோயிலில் காணப்படும் கருடனின் சிலை.

படம் : Philip Larson

ஹனுமார்

ஹனுமார்

கோயிலின் சுவர்களில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களில் காணப்படும் ஹனுமாரின் சிற்பம்.

படம் : Ziegler175

யுத்தம்

யுத்தம்

குருக்ஷேத்திர யுத்தத்தில் பீமன், பாகதத்தனுடன் போர் செய்யும் காட்சி.

படம் : Bhoomi

நந்தி மண்டபம்

நந்தி மண்டபம்

சென்னக்கேசவா கோயில் வளாகத்தில் அமைந்துள்ள நந்தி மண்டபம்.

படம் : Gagan.G.C

நடன மங்கைகள்

நடன மங்கைகள்

நடன மங்கைகளின் மினியேச்சர் சிற்பங்கள்.

படம் : Avinash Krishnamurthy

மிச்சங்கள்

மிச்சங்கள்

அழிக்கப்பட்ட நினைவுச் சின்னத்தின் மிச்சங்கள்.

படம் : Avinash Krishnamurthy

கிருஷ்ணர் சிலை

கிருஷ்ணர் சிலை

சென்னக்கேசவா கோயிலில் காணப்படும் கிருஷ்ணர் சிலை.

படம் : Santhoshbapu

சென்னக்கேசவா

சென்னக்கேசவா

கர்ப்பகிரகத்தில் இருக்கும் சென்னக்கேசவா சுவாமியை வணங்கும் பக்தர்கள்.

படம் : Philip Larson

யானைச் சிற்பம்

யானைச் சிற்பம்

கோயில் வாயிலில் காணப்படும் யானைச் சிற்பம்.

படம் : Avinash Krishnamurthy

மேற்சுவர் மலர்கள்!

மேற்சுவர் மலர்கள்!

கோயிலின் மேற்சுவற்றில் மலர் வடிவத்தில் செய்யப்பட்டுள்ள அலங்காரம்.

படம் : Sujeetgoit

பஸ்ம மோஹினி

பஸ்ம மோஹினி

கோயிலில் காணப்படும் பஸ்ம மோஹினி சிற்பம். பஸ்மாசுரன் எனும் அரக்கனை அழிக்க விஷ்ணு எடுத்த அவதாரம்தான் பஸ்ம மோஹினி.

படம் : Soham Banerjee

உடுக்கை வாசிக்கும் பெண்

உடுக்கை வாசிக்கும் பெண்

உடுக்கை வாசிக்கும் தோற்றத்தில் காணப்படும் பெண்ணின் அழகிய சிற்பம்.

படம் : Ashlyak

அர்ச்சகர்

அர்ச்சகர்

சென்னக்கேசவா கோயில் அர்ச்சகர்.

படம் : Tim Schapker

கற்தூண்கள்

கற்தூண்கள்

வரிசையாக அமையப்பெற்ற கற்தூண்கள்.

படம் : Avinash Krishnamurthy

ஸ்தம்ப புட்டாலிகா

ஸ்தம்ப புட்டாலிகா

கலை வேலைப்பாடுகளுடன் அமைந்த ஸ்தம்ப புட்டாலிகா என்று அழைக்கப்படும் மோகினி தூண்.

படம் : Sujeetgoit

எப்படி அடைவது?

எப்படி அடைவது?

பேலூர் நகரம் சாலைப் போக்குவரத்து மற்றும் ரயில் பாதையால் நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் அருகாமை ரயில் நிலையம் 38 கி.மீ தூரத்தில் உள்ள ஹாசன் ரயில் நிலையம் ஆகும். ஹாசன், பெங்களூர், மங்களூர் மற்றும் மைசூர் நகரங்களிலிருந்து பேலூருக்கு அதிக எண்ணிக்கையில் மாநில அரசுப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் பேலூரிலிருந்து 169 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கும் மங்களூர் விமான நிலையம் விமான வழியில் வரும் பயணிகளுக்காக வசதியாக இருக்கும்.

படம் : Anandc1987