India
Search
  • Follow NativePlanet
Share
» »29 மாநிலங்களின் புகழ்பேசும் 29 உணவுகள்... ருசிக்க போலாமா ?

29 மாநிலங்களின் புகழ்பேசும் 29 உணவுகள்... ருசிக்க போலாமா ?

நம் நாட்டின் உணவு வகைகள் பாரம்பரியமிக்கதாக இன்றும் வெளிநாட்டவரைக் கவரக் கூடியது. காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரையிலான ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு விதமான உணவு முறைகள் அம்மாநிலத்தின் பெயரை புகழ்பாடுகிறது. இந்த உணவுகளை எல்லாம் ருசிபார்ப்பதற்காகவே மாநிலம் விட்டு மாநிலமும், நாடு விட்டு இங்கே பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அப்படி ஊர் சுற்ற விரும்புவர்கள் நம் நாட்டில் உள்ள 29 மாநிலங்களின் சிறப்புமிக்க 29 உணவுகள் எது என தெரிந்துகொள்ளுங்கள். அடுத்த முறை அங்கே பயணித்தால் இதை நிச்சயம் ருசித்திடுங்கள்.

ஜம்மு- காஷ்மீர்

ஜம்மு- காஷ்மீர்


ஜம்மு காஷ்மீர் உணவு முறை தென்னிந்தியாவின் உணவுச் சாயல் வெற்றிருப்பதை சிறிது உணர முடியும். இவர்களின் பிரதான உணவாக இருப்பது ரோகன் ஜோஸ், குஷ்தாபா மற்றும் தபக்நாத் ஆகும். புரியும் படி சொல்ல வேண்டும் என்றால் சிறிது சாதம், பல வகை கார்கறிகளால் ஆன பொரியல், கூட்டு, கீரை இப்பகுதியில் பிரபலமாகதான உணவாக உள்ளது.

Stefan Krasowski

ஹிமாச்சலப் பிரதேஷ்

ஹிமாச்சலப் பிரதேஷ்


ஹிமாச்சலப் பிரதேசில் முக்கிய உணவாக இருப்பது சன்னா மத்ரா மற்றும் நாஷ்பதி ஷப்ஷி ஆகும். அதாவது, வெள்ளை சுண்டலால் ஆன மசாலாவும், மைதாவால் செய்யப்பட்ட பூரியுமே இங்கே முக்கிய உணவாக அறியப்படுகிறது.

Ashish Gupta

உத்திரகண்ட்

உத்திரகண்ட்


உத்திரகண்டில் முக்கிய உணவாக இருப்பது எலுமிச்சையில் தயாரிக்கப்பட்ட சிற்றுண்டியும், பாங்கு என்னும் ஒருவித கலவையால் ஆன சட்ணியுமே ஆகும்.

calmlycookingcurry

பஞ்சாப்

பஞ்சாப்


பஞ்சாப் என்றதுமே உங்களுக்கு தெரிந்திருக்கும். நம்ம ஊர் சப்பாத்தியைப் போன்று ஆனால், இன்னும் கொஞ்சம் அடர்த்தியாக செய்யப்பட்ட ரொட்டி என்று. ஆனால், பஞ்சாப் பயணத்தில் தவறாமல் ருசிக்க வேண்டிய உணவாகவும் இது உள்ளது. காரணம், சுடசுட ரொட்டிக்கு தரும் கீரை போன்ற ஒரு கூட்டுமே.

ஹரியானா

ஹரியானா


காஜர் மேதி என்னும் பொரியலே ஹரியானா உணவில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கேரட் மற்றும் புதினா உள்ளிட்டவற்றின் கலவை உணவின் ருசியை மேலும் தூண்டுகிறது.

ராஜஸ்தான்

ராஜஸ்தான்

ராஜஸ்தானில் இறைச்சிகளில் விட பருப்பு, காய்கறிகளிலேயே அதிக கவணம் செலுத்தப்படுகிறது. இங்கே, பயணிக்கும் பயணிகள் யாவரையும் ஈர்க்கக் கூடிய ஒன்று பருப்பு மற்றும் போண்டா போன்ற பலகாரம் ஆகும்.

உத்திர பிரதேசம்

உத்திர பிரதேசம்


மாமிசத்தால் செய்யப்பட்ட வடை போன்ற ஒருவித உணவு உத்திர பிரதேசத்தில் மிகவும் பிரபலமான ஒன்று. பெரிய உணவு விடுதிகள் தொடங்கி சாலை ஓரக் கடைகள் வரை நீங்கள் உத்திர பிரதேசத்தில் எங்கு சென்றாலும் காலுவாதி கபாப் என்னும் இந்த இறைச்சி வடையை ருசித்து வரலாம்.

மத்திய பிரதேசம்

மத்திய பிரதேசம்


பார்த்த உடனேயே கண்களை அகல விரிக்கும் உணவு தான் மத்திய பிரதேசத்தின் பாலக் பூரி. காரணம், இதன் நிறமே. பூரி மாவுடன் பாலக் கீரையினையும் சேர்த்து மசித்து செய்யப்படும் இந்த பூரி அடர் பச்சை நிறத்தி கண்கரை வசீகரிக்கின்றன. நிறத்தில் மட்டும் இல்லை, அதன் சுவையும் நாவில் எச்சில் ஊரச் செய்திடும்.

POOJAKALSE

குஜராத்

குஜராத்

குஜரால் பயணிப்போர் தவறவிடாமல் ருசித்துவிட வேண்டிய உணவுகளின் ஒன்று காந்வி. பெரும்பாலும், இது காலை அல்லது மாலை நேரங்களில் சிற்றுண்டியாக உள்ளது.

Kirti Poddar

பீகார்

பீகார்

நீங்கள், நம்ம ஊரில் உருளைக் கிழங்கு நிறைந்த சமோசாவை ருசித்துள்ளீர்கள் என்றால் பீகாரின் லித்தி சோக்கா பழக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கும். இருந்தாலும், அங்கே இதுதான் காலை வேலையில் முக்கிய உணவாக இருக்கிறது.

Pankajsahu20

மேற்கு வங்காளம்

மேற்கு வங்காளம்


சோர்ஷி இலிஸ் என்னும் உணவிதான் மேற்கு வங்காளத்தில் மிகவும் பரலாக பிரசிதிபெற்றதாம். படத்தை பார்த்தவுடனேயே புரிந்திருக்கும், இது மீன் குழம்பு என்று. மேற்கு வங்காளத்தின் மாறுபட்ட மசாலாக்களின் ருசி, மனம் ஒருபுடி புடிக்க வைத்திடும்.

Mohammed Tawsif Salam

அசாம்

அசாம்


"பாப்பாய் த செய்லர் மேன்" என 90'ஸ் கிட்ஸ் ஒரு காலத்து ஹீரோவோட ஸ்பெசல் புட் தான் இந்த ஸ்பினேச். பாலக் கீரையால் செய்யப்பட்ட கூட்டு அசாமில் முக்கிய உணவுகளின் பட்டியலில் உள்ளது. வெள்ளை சாதமும், பாலக் கீரையின் கூட்டும்.., வேறென்னங்க வேணும்.

AmieKim

அருணாச்சலப் பிரதேசம்

அருணாச்சலப் பிரதேசம்


இதோ வந்துடுச்சுல நம்ம ஐட்டம். ஆனா இங்க பேருதான் வேற மாதிரி இருக்கு. சிக்கன்ல குறிப்பிட்ட சில மாசாலை கலந்து எண்ணையில் பொரித்து உணவுகளுடன் சேர்த்து உண்பதை வழக்கமாக இங்கே கொண்டுள்ளனர். இதன் பெயர் பாம்போ சாட்ஸ்.

1402Dragon Pool

மேகாலயா

மேகாலயா


பிரியானி போன்ற ஒரு உணவுதான் மேகாலயாவில் ஜடோ என்று அழைக்கப்படுகிறது. ஆனால், உள்ளூர் மக்களின் பாரம்பரியமான மசாலாவும், செய்முறையும் இந்த உணவை மேலும் ருசியூட்டுகின்றது.

Miansari66

மணிப்பூர்

மணிப்பூர்

மணிப்பூரில் மிகப் பிரலமான உணவுகளின் ஒன்று தான் மீன் புட்டு போன்ற ஒன்று. வேகவைத்த மீன், அதிகளவிலான வெங்காயம், மசாலாப் பொடி உள்ளிட்டவை கலந்த கலவை அனைத்து உணவிற்கும் துணையாக உட்கொள்ளப்படுகிறது.

Punshiba18

சிக்கிம்

சிக்கிம்


மோமோ என்னும் உணவுப் பண்டத்தை கல்லூரி, மால்கள் என சில இடங்களில் மட்டும் விற்பனை செய்யப்படுவதை பார்த்திருப்போம். ஆனால், இதன் பூர்வீகம் சிக்கிம். விநாயகர் சதுர்த்தியின் போது இனிப்பு கொழுக்கட்டை உண்டிருப்பீர்களே, இதுவும் அதுபோலத்தான். ஆனால் உள்ளே சிக்கன் அல்லது காய்கறிகள் நிறைந்திருக்கும்.

Kushal Goyal

திரிபுரா

திரிபுரா

வென்பொங்கள் போன்ற ஒருவித உணவு திரிபுராவில் மிகவும் பிரபலமான உணவாகும்.

Nundhaa

மிசோரம்

மிசோரம்

மிசா மச் பூரா என்று அழைக்கப்படும் இராலால் செய்யப்பட்ட உணவு மிசோரம் மாநிலத்தில் புகழ்பெற்றதாக உள்ளது. குறிப்பாக, அதிகப்படியான வேலைப்பாடுகள் இன்றி தயாரிக்கப்படும் இந்த உணவு மிசோரம் வரும் பயணிகளை தவறவிடுவதில்லை. அந்தளவிற்கு சுவை மிகுந்ததாக உள்ளது.

rovingI

நாகலாந்து

நாகலாந்து


நாலாந்தில் அதிகப்படியாக பரிமாரப்படும் உணவாக ஃபோர்க் இறைச்சி உள்ளது. உள்நாட்டுப் பயணிகளைக் காட்டிலும் வெளிநாட்டவர்களுக்கே அதிகளவில் இந்த உணவு விநியோகம் செய்யப்படுவதாக தெரிகிறது.

Soyuz Sharma

ஜார்கண்ட்

ஜார்கண்ட்

ஆலு பரோட்டா, பரோட்டா மற்றும் காய்கறிப் பொரியல் ஜார்கண்ட் பகுதியில் முக்கிய உணவாக உள்ளது.

Affaf Ali

ராய்பூர்

ராய்பூர்


பேத்தா என்னும் இனிப்பு ராய்பூரில் மிகவும் பிரசித்தம். வெள்ளைப் பூசனிக் காயினால் தயாரிக்கப்படும் இந்த இனிப்பு ராய்பூரில் நடைபெறும் அனைத்து விசேசங்களிலும் முக்கியப் பங்காக இடம் பெருகிறது.

Rsrikanth05

கோவா

கோவா

கடற்கரைகள் நிறைந்த கோவாவின் முக்கிய உணவே மீன் கரி தான். மதிய வேலையில் கோவாவில் செயல்படும் எந்த உணவு விடுதிக்குச் சென்றாலும் மிஸ்பண்ணாம மீன் குழம்பை ருசிபார்க்கலாம்.

Chensiyuan

கேரளா

கேரளா


ஒரு கரண்டி மாவு எடுத்து கல்லுல ஊத்தி, அதுமேல கேரட்டு, வெங்காயத்தை மழை மாதிரி தூவி விட்டு, சுத்தியும் நாளு ஸ்பூன் நெய் ஊத்தி... என்னங்கள் வடிவேல் காமெடி நினைவுக்கு வருதா. இந்த மாதிரியான தோசை, ஆப்பத்திற்கு ஸ்பெசல் மாநிலமே நம்ம கேரளம் தாங்க. காலை தொடங்கி இரவு வரை இங்கே பரபரப்பா விற்பனை செய்யப்படுற உணவுகள்ள இந்த தோசை தான் முக்கியமா இருக்கும்.

Ramesh NG

ஒடிசா

ஒடிசா

நம்ம ஊரில் எந்த பெரிய ஸ்வீட் கடைக்கு போனாலும் முதலில் தெரிவது இந்த ரசகுல்லா தான். ஆனா, இதோட பூர்வீகம் ஒடிசா மாநிலம். பாலை மூலக்கூறாக் கொண்டு செய்யப்படும் இந்த ஸ்வீட் நிச்சயம் உங்களுக்கும் பிடித்தமானதாகத் தான் இருக்கும்.

Balajirajuchen

மகாராஸ்டிரா

மகாராஸ்டிரா


போளி, ஒப்புட்டு என உள்ளூரில் விற்பனை செய்யப்படும் இனிப்பு மகாராஸ்டிராவில் மிகவும் பரலாக உள்ள உணவாகும். விநாயகர் சதுர்த்தியன்று முக்கிய படையல் பொருளாக இது இருப்பதைக் காண முடியும்.

GaneshDatta

ஆந்திர பிரதேசம்

ஆந்திர பிரதேசம்


ஆந்திராவிற்கு பயணிக்கும் யாரும் தவறவிடக் கூடாத ஒன்று ஹைதராபாதி பிரியானியைத் தான். மட்டன், சிக்கன் என விதவிதமாக தயாரிக்கப்படும் ஆந்திரா பிரியானி அம்புட்டு ருசி.

Karan Verma

கர்நாடகா

கர்நாடகா

கர்நாடகா உணவுகளின் பட்டியலில் முக்கியப் பங்கு வகிப்பது மைசூர் தோசை தான்.

Sudiptorana

தெலுங்கானா

தெலுங்கானா


நாட்டுக் கோழி புலுசு என்றழைக்கப்படும் கோழியினால் செய்யப்பட்ட குழம்பு தெலுங்கானாவில் கண்டிப்பாக ருசித்திட வேண்டிய உணவாகும்.

Amitkumar Si

தமிழ்நாடு

தமிழ்நாடு


சாம்பார் சாதமோ, கோழிக் கறிக் குழம்போ... வந்தோருக்கு வாழை இலையில் உணவு பரிமாறும் முறையே தமிழகத்தை நோக்கி வெளிநாட்டுப் பயணிகளும் ஆர்வமுடன் வர காரணமாக உள்ளது.

wikipedia

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X