Search
  • Follow NativePlanet
Share
» »உணவுக்காக 4 மாநிலங்களில் சுற்றித் திரியும் இளம் கேரள பெண்!

உணவுக்காக 4 மாநிலங்களில் சுற்றித் திரியும் இளம் கேரள பெண்!

By Udhaya

இது ஒரு உணவு சுற்றுலா கதை.. தென்னிந்தியாவின் சிறப்பான உணவுகள் கிடைக்கும் இடத்துக்கு அலைந்து திரியும் சாராவின் கதை.

சாப்பாடு.. அதானே எல்லாம். புஃடியோட வாழ்க்கை வரலாற்ற எடுத்து பாத்தீங்கன்னா.. வித விதமான ரக ரகமான சுவையான சூப்பரான உணவுகள ரசிச்சி ருசிச்சி சாப்பிட்ட இடங்களும் அங்க கிடைக்கும் நாவை ஊறச் செய்யும் சுவைகளும் என்ன என்னனு தெரிஞ்சிக்கலாம். இந்த மாதிரி எந்த உணவுகள் எங்க கிடைக்கும் அங்க இருக்குற மத்த பகுதிகள் என்ன என்னங்குறது பத்தி பாக்குறதுதான் உணவு சுற்றுலா. அப்படி ஒரு சாப்பாட்டு ராமன் சொல்லப்போனா சாப்பாட்டு ராமி.. அடடே.. நம்ம ஊர்ல புஃடிக்கு அப்படித்தானே பேர் வச்சிருக்காங்க.. வாங்க நம்ம சாராவ மீட் பண்ணலாம்.

ஹே.. டூட்ஸ். இட்ஸ் மீ சாரா.... என்ன வந்ததும் இங்கிலிஷ்ல பேசினிக்குறாளேனு நினைக்குறீங்களா. நம்மகைல வெரைட்டிய நெரிய ஐட்டம் இருக்குதுபா.. ஊர் ஊரா சுத்ரன்னால பல லாங்குவேஜுங்க அத்துப்படி. அட அத்த வுட்டுத்தள்ளுங்க நம்ம சவுத் இன்டியாவோட சமத்தான நாலு நகரங்களுக்கு பயணிச்சி நாலு விதமான சுவைகள ருசிச்சு ரசிச்சி சாப்பிடலாம் ரெடியா...?

என்டே அம்மே... இதுதன்னே என்ட கேரளம்...

என்டே அம்மே... இதுதன்னே என்ட கேரளம்...

பர்ஸ்ட்டு ஞான் பொறந்த மண்ணுக்கு நிங்களெல்லாரையும் விளிச்சிட்டு போவாமுனு பிளான் செய்து.. சரி வாங்க கேரளத்தின் அல்டிமேட் டாப் டக்கர் சுவையான கடற்கரையும் பீப்பும் பரோட்டாவும் கழிக்காம்.. அட சாப்பிடலாம் வாங்க..

கடவுளின் நகரம்னு சும்மாகாச்சியும் சொன்னதுதான் சொன்னாங்க.. உண்மையிலே அந்த அளவுக்கு வளமும் வெள்ளமும் அட இப்பதான் மழை வெள்ளத்துல மூழ்கி போன கேரளா திரும்ப வந்துட்டு இருக்கு.. ஆனாலும் பாருங்க படு ஸ்பீடு அவங்க. இன்னும் ஒரு வாரத்துல எப்படி மாறப்போகுதுனு... பொறுத்திருந்து பாருங்க..

கேரளத்தின் உணவுகளும் சுவையும் ஒரு முறை அனுபவித்த யாருக்கும் மறக்கவே மறக்காது. அந்த அளவுக்கு ஆயிலோட அன்பையும் கலந்து அடிச்சி சமச்சி தருவாங்க நம்மட சேட்டன்ஸ். இங்க கிடைக்குற தேங்காய், சோறு, சக்கரை, அப்றமா நறுமணப் பொருள்களோட சுவையும் மணமும் தனிதான் போங்க.

இறால், மீன், நண்டுகள்னு கேரள கடற்கரையில கிடைக்குற எல்லாத்தையும் ஒரு புடி புடிக்கணும். கடல் உணவுகள் ஒரு பக்கம் இப்படின்னா இன்னொரு பக்கம் பீப்பும் அப்பமும்.. தமிழ்ல அது ஆப்பம்னு சொல்வீங்கல்ல...

தெருவோரக் கடைதானே என்று குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள். மூனு தெரு தாண்டி வீசும் அதோட வாசம். மூனு நாளைக்கு பேசும் அதோட சுவையும் தரமும்.

ஓ... சாரி நீங்க சைவப்பிரியரா... அடிபொலி... எனக்கும் சைவம்னா ரொம்ப இஷ்டமானு.. அதுனாலதான் பீப் கறியலாம் சைவத்துல சேக்கணும்னு கோரிக்கை வச்சிருக்கேன்.. நீங்க தமிழ் காரங்க உங்களுக்கு ஏத்தமாதிரியும் நாங்க வச்சிருக்கோம் சில ஐட்டம்ஸ்.

சோறு, சாம்பார், அவியல், பொறியல், ஊருகாய், அப்பளம் அப்றம் கடைசியா பாயாசம். கேரளம்னா சும்மா இல்லிங்க..

நீங்க இதுமாதிரி கேரளத்துல என்ன எல்லாம் சாப்ட்டுருக்கீங்கன்னு கீழ கமண்ட் பண்ணுங்க.. சிறந்த கமண்ட் போடுற ஆளுங்களோட கமண்ட்குலாம் பாராட்டு கிட்டும்...

வாங்கோ வாங்கோ அப்றமா எந்த எந்த இடத்துக்குலாம் போயி இதெல்லாம் சாப்டுறதுனு பாக்கலாம்.

Dilshad Roshan

 வர்க்கலா கடற்கரை

வர்க்கலா கடற்கரை

கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள அழகிய கடற்கரை நகரமே இந்த ‘வர்கலா' ஆகும். கேரளாவில் கடலுக்கு வெகு அருகிலேயே மலைகள் காட்சியளிக்கும் ஒரே இடம் இது. அரபிக்கடலுக்கு அருகிலேயே உயர்ந்தோங்கி நிற்கும் மலைகள் இந்நகரின் தனித்தன்மையான அடையாளமாக பிரசித்தி பெற்றுள்ளது.

இந்திய புவியியல் ஆய்வு மையம் இந்த வித்தியாசமான புவியியல் அமைப்புக்கு ‘வர்கலா அமைப்பு' என்றே பெயரிட்டுள்ளது. பத்து அழகான கடற்கரைகளுள் ஒன்றாக இந்த வர்கலா கடற்கரையை டிஸ்கவரி சானல் தொலைக்காட்சி மதிப்பிட்டுள்ளது.

எப்படி செல்வது?

திருவனந்தபுரத்திலிருந்து 50 கி.மீ வடக்கிலும், கொல்லம் நகரத்திலிருந்து 49 கி.மீ தென்மேற்கிலும் இந்த வர்க்கலா நகரம் அமைந்துள்ளது. கேரள மாநில அரசுப்பேருந்துகள் எல்லா முக்கிய தென்னிந்திய நகரங்களிலிருந்தும் வர்கலாவுக்கு இயக்கப்படுகின்றன. வர்கலாவில் ரயில் நிலையமும் உள்ளது. அருகிலுள்ள திருவனந்தபுரத்தில் விமான நிலையமும் உள்ளது.

சிறந்த கால நிலை

கேரளாவின் எல்லா கடற்கரை நகரங்களையும் போலவே வர்கலா மிதமான பருவநிலையை கொண்டுள்ளது. இருப்பினும் குளிர்காலமே இப்பகுதிக்கு சுற்றுலா மேற்கொள்ள பொருத்தமாக உள்ளது.

ஹாய் டூட்ஸ்.. இட்ஸ் மீ அகெய்ன் சாரா... இந்த கடற்கரைக்கு வரும்போதெல்லாம் எனக்கு ஒரு விசயம் மறக்கவே மறக்காது. வருண். அவன் என் பெஸ்ட் பிரண்ட். நாங்க நாலு பேரு இந்த கடற்கரைக்கு டிரிப் வந்தோம். அப்போ அடிச்ச லூட்டிங்கலாம் சொல்லி மாளாது. அவன் திருநெல்வேலி பையன்.. நான் கொச்சி பக்கம் ஒரு கிராமம். வர்க்கலா கிட்டத்தட்ட திருவனந்தபுரம் பக்கத்துலதான் இருக்கு. அங்க சிறப்பா சொல்லணும்னா நிறைய வெளிநாட்டு காரங்களும் வருவாங்க.

நிறைய ரெஸ்ட்டாரண்ட்ஸ், உணவுகள், நல்ல அனுபவமா இருக்கும். எத செலக்ட் பண்றது எத விடுறதுனே தெரியாது. நீங்க மட்டும் கொஞ்சம் காசு செலவு பண்ண தயாரா இருந்தீங்கன்னா போதும்.. சொர்க்கம் சார் வர்க்கலா...

அப்றம் வர்க்கலா பத்தி வேற எதுனா டிடெய்ல்ஸ் வேணும்னு வைங்க.. இதோ இந்த லிங்க் கிளிக் பண்ணீங்கன்னா அங்க இருக்கும். ஷரியா...?

அந்த பயணத்த நாங்க வர்க்கலாவுலயே நிறைவு செய்யல.. சொல்லப்போனா வருண் கூட ஊர் சுத்துறது ரொம்ப அலாதியான விசயம். அவன் செம்ம கேரக்கட்டரு.. சுத்தி இருக்குற யாரையும் அவ்வளவு சீக்கிரம் தனிமையிலயோ சோகமாக இருக்கவோ விடவே மாட்டான். அவன் மேல நிறைய பேருக்கு பொறாமையா இருக்கும். எனக்கு என்னவோ அவன் கேர்ள்பிரண்ட் மேலதான்..

சரி அந்த டிரிப்ல நாங்க வர்க்கலாவுல இருந்து அப்படியே கோழிக்கோடு நோக்கி போனோம். இப்பவும் போகப்போறோம்..

இப்போ வெள்ளமும் சேதமுமா இருக்குறனால உங்கள கூட்டிட்டு போகமாட்டேன்.. ஆனா ஒரு விசயம் நீங்க உங்க வாழ்நாள்ல கட்டாயம் போகவேண்டிய இடம் கோழிக்கோடு. இங்க கிடைக்குற உணவுகள் உங்க நாக்கு சுவைக்கிலனா அது பாவம் பண்ணிருக்கும்.

உலர்த்திய பீப் கறி, மட்டன் பிரியாணி, கடுக்காய் வறுவல்னு இப்ப கூட நாக்குல எச்சில் ஊறுது. அடடே.. உங்க கிட்ட பேசிக்கிட்டே வருண மறந்துட்டேன்.

என்னதான் கேரளத்த மெச்சிக்கிட்டு பேசினாலும், தமிழ்நாடும் ஒரு சூப்பர் உணவு கூடம்னு சொல்லாம இருக்கமுடியாது. நானும் வருணும் தமிழ்நாட்டுல மூலை முடுக்கு உடாம சுத்திருக்கோம். முக்கியமா வருணுக்கு புடிச்ச வடையும் பில்டர் காபியும்.. அடடடே..

வாங்க தமிழ்நாட்டுல உங்களுக்கு தெரிஞ்சி விசயங்களையும் தெரியாத சுவாரசியங்களையும் கொஞ்சம் பாக்கலாம்.

Alexey Komarov

 தமிழ்நாடு உங்களை அன்புடன் வரவேற்கிறது

தமிழ்நாடு உங்களை அன்புடன் வரவேற்கிறது

வடையும் பில்டர் காபியும்னு சொன்னவுடனே சிலருக்கு கோபம் வந்துருக்கலாம். ஏன்னா... தமிழ்நாட்ட பத்தி முழுசா தெரியாத சில வட இந்திய மக்கள்தான் தமிழ்நாடுனாலே என்னவோ வடைக்கு வாடிட்டு பில்டர்காபி மட்டும் குடிக்குறமாதிரி. இங்க குடிக்குறதுக்கு நெரிய இருக்குது..

அய்யு மொறைக்காதீங்க.. நா அத பத்தி பேசல.. நீங்க என்னத்த கற்பனை பண்ணாலுமே அத்த விட அதிகமா அள்ளித் தரும் நம்ம தமிழ்நாடு.

கோயம்புத்தூர்ல இருந்து சென்னை வரைக்கும், ஓசூர்ல இருந்து கன்னியாகுமரி வரைக்கும் ஆயிரம் வகையான உணவுகள நீங்க கேள்விப்படலாம்.

திருநெல்வேலி அல்வா, மதுரை இட்லி, சட்னி,வடை, கும்பகோணம் காபி வடை, சென்னை மீன் வறுவல், மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா, பரோட்டாவும் மட்டன் கறியும், குமரி பலா சிப்ஸ், தேங்காய் எண்ணெய் வாழ வறுவல், தூத்துக்குடி மக்ரூன், கோவில்பட்டி கடல முட்டாயி, மணப்பாற முறுக்கு, திருச்செந்தூர் வெல்லக் கருப்பட்டி, சுக்கு மிட்டாய் இதுலாம் வெறும் டிரெய்லர்தான் இங்க இன்னும் நிறைய இருக்கு பாஸ்.

செட்டிநாட்டு குழம்புன்னாலே குதூகலம் பிறக்கும். ஊரு விட்டு ஊரு, நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டமே போனாலும் தமிழன் சாப்பிடலனா செத்துருவான்னு சொல்ற பல விசயங்கள்ல செட்டிநாடு ஸ்டைல் குழம்புகளும் சேரும்.

கன்னியாகுமரில ஆரம்பிச்சி கூடங்குளம், திருச்செந்தூர், தூத்துக்குடி, நாகப்பட்டினம்னு சென்னை வரைக்கும் கடற்கரைகள்ல வித விதமான மீன்களும், சில இடங்கள்ல பொறிப்புகளும் அய்யு.... நினச்சி கூட பாக்கமுடியாது..

கல்லணை, குற்றாலம்னு சில இடங்கள்ல கிடைக்குற மீன்கள் நன்னீர் மீன்கள்னு சொல்வாங்க.. அதோட சுவையும் நல்லா இருக்கும்.

இடியாப்பம் பத்தி சொல்லியே ஆகணும். அதுல தேங்காய் பால் ஊற்றி, கொஞ்சம் தேங்காய் துருவி போட்டு, வருணோட அம்மா சமையலுக்காகவே அவன கட்டிக்கலாம் போல இருக்கும். ஸோ சேட்.. அவனுக்குதான் ஆள் இருக்கே.. பிரேக் அப் ஆகுறதுக்காக அயம் வெய்ட்டிங்க்...

wiki

வருண் என்ட்ரி

வருண் என்ட்ரி

சாரா - ஒரு நிமிசம் பாஸ்.. உங்கள எங்கயோ பாத்தாப்ல இருக்கே.. நீங்க ?

மிதுன் - அடிப்பாவி. என்ன மறந்துட்டியா..

சாரா - ஆமா மறக்குற மூஞ்சா இது.. ஆமா வருண் எங்க..

மிதுன் - உன் கவல உனக்கு.. ஹூம்...

சாரா - அட சொல்லித் தொலடா பிலா சுலாக்கி...

மிதுன் - நீயே பேசு.. இந்தா..

சாரா - ஹலோ

வருண் - கண்ணாம்பூச்சி ரே ரே.. கண்டுபிடி யாரே..

சாரா - அட தகர டப்பாத் தலையா.. எங்க இருக்க சொல்லு..

வருண் - நான்.... கர்நாடகத்துல இருக்கேன்.. பேப்..

சாரா - இஸ் இட்.. வாவ்.... அங்க என்ன பண்ற... இன்னும் ஊர் சுத்திட்டுதான் இருக்கியா.. ?

வருண் - ஆமாப்பா.. அது வந்து...

சாரா - அட இருடா.. ஸ்பீக்கர்ல போடுறேன்... டேரெக்ட்டா இவங்ககிட்டயே பேசு..

 கர்நாடகம் எனும் கலையுலகம் - டோன்ட் ஒர்ரி.. நா இருக்கேன்

கர்நாடகம் எனும் கலையுலகம் - டோன்ட் ஒர்ரி.. நா இருக்கேன்

புளிச்சோறு, சாம்பார் சாதம்.. நோ டூட்....

டாமெரின்ட் ரைஸ், பிஸி பெலே பாத், உப்பிட்டு இப்டி வெரைட்டியான ஐட்டம்ஸ்லாம் ஸ்டைலா சொல்லணும்.

மூலை முடுக்கெல்லாம் சுத்துனாலும், கர்நாடகத்துல பெங்களூர், உடுப்பி ரெண்டு இடத்த தவிர நிறைய பேருக்கு வேற இடமே தெரியாது.. ஆனா கர்நாடகம் எப்படி பசுமைக்கு பெயர் பெற்றதோ அதுமாதிரி அறுசுவைக்கும் பெயர் பெற்றதுதான்.

சோறு, சோளம், கேழ்வரகுல செய்யுற பண்டங்கள்லாம் பெரும்பாலும் உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும். இது எல்லாம் தமிழ்நாட்டுல பண்றதுதான், ஆனா ஸ்டைல் வேற.. சிறப்பா இருக்கும்.

தோசை அப்படிங்குற உணவு உங்களுக்கு பிடிக்கும்தான். தோசையில எத்தனை வகை இருக்கு தெரியுமா..

பெங்களூர் நகர வீதிகள்ல போட்டு விப்பாங்களே.. 99 வகையான தோசைனு.. அட நாலே மசாலாதான். ஆனா அத விதவிதமா 99 னு போட்டு வித்துட்டு கெடக்காங்க.. தமிழ்நாட்டுக்காரங்கள இப்டி ஏமாத்த முடியாதுப்பு.

உடுப்பிலதான் தோசை உருவாச்சாம். அது பழைய கதை விடுங்க..

ஆனா இங்க நிறைய ஹோட்டல்கள்ல கிடைக்குற பிஸி பெலே பாத் சிறப்பு. ஒரு பிளேட் வாங்கி சாப்பிட்டா போதும் வயிறு நிறஞ்சிடும்.

இட்லியும் தொட்டுக்க சட்னியும் மதுரை ஸ்பெஷல். இந்த ஊருல பெரும்பாலும் சாம்பார்ல சட்னிய ஊற வச்சி, ரெண்டே இட்லி சாப்பிடுறாங்க.. இல்லனா இட்லிக்கு பதிலா நாலு வட சாப்புடுறாங்க...

நா வருண்.. இப்ப உடுப்பில இருக்கேன்.. இங்க எப்படி வரணும்னா..

Nikhilb239

உடுப்பி உங்களை உணவுடன் வரவேற்கிறது

உடுப்பி உங்களை உணவுடன் வரவேற்கிறது

கர்நாடக மாநிலத்திலுள்ள உடுப்பி இங்குள்ள கிருஷ்ணர் கோயிலுக்கும் இதன் உணவுச்சுவைக்கும் பெயர் பெற்று விளங்குகிறது. உடுப்பி என்ற பெயரைக் கேட்டாலே நாவில் ஊறும் அளவுக்கு மத்வா இனத்தவரின் தென்னிந்திய பாணி உணவுத்தயாரிப்பு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இவர்கள் காலங்காலமாக தெய்வப்பிரசாதங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இன்றும் அந்த சம்பிரதாயத்தை கடைப்பிடிப்பவர்கள். உடுப்பி நகரம் பெங்களூரிலிருந்து 400 கி.மீ தூரத்திலும் மங்களூரிலிருந்து 54 கி.மீ தூரத்திலும் உள்ளது.

எப்படி செல்வது

கொங்கண் ரயில்வே பாதையில் உடுப்பி அமைந்துள்ளதால் மும்பை, டெல்லி, ராஜ்கோட், அஹ்மதாபாத் போன்ற பெருநகரங்களுக்கு இங்கிருந்து நேரடியாக ரயில் வசதிகள் உள்ளன. உடுப்பியிலிருந்து வடக்கில் பிரயாணம் செய்ய விரும்பினால் குண்டபுரா ரயில் நிலையம் அருகில் உள்ளது. உடுப்பி நகரம் NH 17 மற்றும் NH 66 ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளின் வழியில் அமைந்துள்ளதால் மிகச்சுலபமாக எந்த நகரத்திலிருந்தும் சாலை மார்க்கமாக உடுப்பிக்கு பயணிக்கலாம்.

சாரா - டேய் தகரடப்பா தலையா வருண்.. ஒரு நிமிசம் இரு.. இத சொல்லிக்குறேன்..

பிரண்ட்ஸ் இவன் இப்படித்தான் வழவழனு பேசிட்டு கெடப்பான்.. நீங்க உடுப்பி பத்தி நிறைய தெரிஞ்சிக்கணும்னா இந்த லிங்க்க கிளிக் பண்ணி தெரிஞ்சிக்கோங்க..

வருண் - நீ போம்மாங்கிட்டு...

பசியுடன் வந்தா வரவழைச்சி சோறு போடும் ஊருங்க இது.. (மறக்காம பில் பே பண்ணிடுங்க). என்னதான் காவிரில தண்ணி தரமாட்டிக்காங்கனு இவங்க மேல கோவம் இருந்தாலும், உடுப்பிக்கு வந்து சாப்பிட்டீங்கன்னா வாவ் ... வாந்தி இல்லிங்க.. Wow னு சொல்லவைக்கும்.

சாரா - ஆம்மா.. ரெண்டு நாளா ஏன்டா கால் பண்ல.. சும்மா கேர்ள் பிரண்ட் கூடவே சுத்திட்டு கெடப்பியா.. இங்க ஒருத்தி இருக்கேன்னு கவல இல்லியா..

வருண் - கேர்ள் பிரண்ட்டா.. அட போடி கொரங்கு.. எவன் சாபம் உட்டானோ தெர்ல... நாஷமா போச்சி என் லவ்..

சாரா - அத்த உட்டு தொலடா.. அப்பவே சொல்லணும்னு நினச்சேன்.. அவ உன் ரேஞ்சுக்கு ரொம்ப கம்மிடா.. உனக்கு கெத்தா சூப்பரா மலையாளத்தமிழ் பேசுற சூப்பர் பொண்ணு கிடைப்பா.. இப்ப நா ஹைதராபாத் போக பிளான்ல இருக்கேன்... நீயும் வரியா...

வருண் - ஓ.. சூப்பர்டி.. இதோ கிளம்பிட்டேன்.. ஆமா அங்க என்ன வேலை இருக்கு...

சாரா - சாப்பிடத்தான்.. அப்படியே அங்கிள் வீடு சும்மா காலியாத்தான் இருக்கு... ரெண்டு மூனு நாள் ஸ்டே பண்ணிட்டு வரலாம்னு போறேன்.. அதான் உன்னயும் கூப்பிட்டேன்.

அதுமட்டுமில்லாம அங்க சாப்பாட்டுக்கு பெயர் போன சில இடங்களுக்கும் போகலாம்னு இருக்கேன் மாம்ஸ்....

வருண் - மாம்ஸ்ஸா... என்ன புதுசா மரியாதைலாம் குடுத்து பேசுறாப்ல இருக்கு...

சாரா - அதான் பிரேக்கப் ஆய்டிச்சில.. கண்டுக்காத.. அந்த இடங்கள பத்தி சொல்றேன் கேளு...

Abdulla Al Muhairi

 ஹைதராபாத் பிரியாணி

ஹைதராபாத் பிரியாணி

தென்னிந்தியாவில் மிகப்பிரசித்தமான சுற்றுலா நகரங்களில் ஒன்றான இந்த ‘ஹைதராபாத்' நகரம் - ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் தலைநகரம் ஆகும். மூஸி ஆற்றின் கரையில் வீற்றிருக்கும் இந்த நகரமானது வரலாற்று காலத்தில் கீர்த்தி பெற்றிருந்த குதுப் ஷாஹி வம்சத்தை சேர்ந்த மன்னரான முஹம்மது குலி குதுப் ஷா என்பவரால் 1591ம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நகரத்தின் பெயருக்கு பின்னால் முஹம்மது குலி குதுப் ஷாவுக்கும் பாகமதி எனும் பெண்ணுக்கும் இடையே இருந்த ஒரு காதல் கதை பின்னணியாக கூறப்படுகிறது.

ஹைதராபாத் நகரம் உருவாக்கப்பட்ட 1591ஆம் ஆண்டிலிருந்து சுதந்திர இந்தியாவுடன் இணையும் வரை இஸ்லாமிய மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்த காரணத்தினாலோ என்னவோ ஹைதராபாத் உணவுகளில் துருக்கிய மற்றும் அரேபிய உணவு முறைகளின் தாக்கம் கொஞ்சம் அதிகம்.

பாஸ்மதி அரிசி, ஹலால் மாமிசம்,ஏலக்காய்,கிராம்பு போன்ற மணமூட்டிகள் பிராதனமாக சேர்த்து பிரத்யேகமான முறையில் சமைக்கப்படும் ஹைதராபாத் உணவுகளிலேயே மிகவும் பிரபலமானது ஹைதராபாதி பிரியாணி தான்.

மற்ற பிரியாணி சமைக்கும் முறையிலிருந்து இருந்து முற்றிலும் வேறுபட்ட முறையில் சமைக்கப்படுவதினால் கிடைக்கும் பிரத்யேகமான சுவையே ஹைதராபாதி பிரியாணி பிரபலமடைய காரணமாகும். ஹைதராபாத்தின் மன்னர்களான நிஜாம்களின் ராஜ உபச்சாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 26வகையான ஹைதராபாதி பிரியாணி வகைகள் பரிமாறப்பட்டிருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்

ஹைதராபாத்தில் எங்கெல்லாம் சுற்றலாம் என்னவெல்லாம் செய்யலாம் என்பன குறித்த தகவல்களை இங்கு காணுங்கள்

Shiv's fotografia

Read more about: travel chennai kerala tamilnadu
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more