Search
  • Follow NativePlanet
Share
» »குட்டி யானைகளுடன் விளையாட ஆசையா – தென்னிந்தியாவின் இந்த அழகான யானை முகாம்களுக்கு செல்லுங்கள்!

குட்டி யானைகளுடன் விளையாட ஆசையா – தென்னிந்தியாவின் இந்த அழகான யானை முகாம்களுக்கு செல்லுங்கள்!

உருவத்தில் பெரியதாக இருந்தும் மிகவும் ரசிக்கக்கூடிய ஒரு உயிரனமாக இருப்பதில் யானை தான் முதலிடத்தில் உள்ளது என்று சொல்லலாம். யானைகள் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது! யானைகளுடன் விளையாடி, அவற்றை குளிப்பாட்டி, அவற்றிற்கு உணவளிக்க நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் நாம் அந்த இடங்களுக்கு செல்லாமல் இருப்போமா! தென்னிந்தியாவில் உள்ள அழகான ஐந்து யானைகள் முகாம்களின் லிஸ்ட் இதோ!

theppakaduelephantcamp

1. தெப்பக்காடு யானைகள் முகாம், தமிழ்நாடு

யானைகளை குளிப்பதை பார்க்க, உணவருந்துவதை பார்க்க, அவை விளையாடுவதை பார்க்க தமிழகத்தில் உள்ள ஒரு அழகிய இடம் தான் ஊட்டியில் அமைந்துள்ள தெப்பக்காடு யானைகள் முகாம். ஆசியாவிலேயே மிகப் பழமையான யானைகள் முகாமான இங்கு மொத்தம் 23 யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, குளித்து, உணவளிக்கப்படுகிறது. சமீபத்தில் ஆஸ்கார் விருதுப்பெற்ற ஆவண குறும்படமான 'எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' தெப்பக்காடு முகாமில் உள்ள யானைகளைப் பற்றியது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தெப்பக்காடு யானைகள் முகாமை பார்வையிட ஒரு நபருக்கு 25 ரூபாய் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அனைத்து நாட்களிலும் காலை 8:30 மணி முதல் 9:00 வரையிலும் பின்னர் மாலை 5:30 முதல் 6:00 மணி வரையிலும் பார்வையாளர்கள் உள்ளே சென்று யானைகளை கண்டு மகிழலாம்.

dubareelephantcamp2

2. துபாரே யானைகள் முகம், கர்நாடகா

துபாரே யானைகள் முகாம் இந்த மாபெரும், மயக்கும் உயிரினங்களைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாகும். இங்கே நீங்கள் ரூ.100 வழங்கினால் யானைகளை குளிப்பாட்ட அனுமதிக்கப்படுவீர்கள். குளியல் முடிந்ததும், யானை உணவு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது மற்றும் எப்படி உணவளிக்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். யானைகள் எவ்வாறு கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகின்றன என்பதையும், மரம் வெட்டும் நடவடிக்கைகளில் அவை எவ்வாறு செயல்பட்டன என்பதையும் மஹவுட்கள் விளக்குவார்கள்.

sakrebyleelephantcamp1

3. சக்ரேபைல் யானைகள் முகாம், கர்நாடகா

துங்கா ஆற்றின் கரையில் அமைந்துள்ள சக்ரேபைல் யானைகள் முகாம், நடத்தை குறைபாடுகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ள யானைகளின் இல்லமாகும். கர்நாடக வனத்துறையால் பராமரிக்கப்படும் இந்த முகாம் வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை மட்டுமின்றி யானைகளைப் பற்றி அறிந்துகொள்ள விரும்பும் ஆர்வலர்களையும் ஈர்க்கிறது. முகாமில் உள்ள யானைகளின் நடத்தை முறைகளை அவர்கள் உன்னிப்பாகக் கண்காணிக்க இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

thekkadyelephantcamp

4. தேக்கடி யானைகம் முகாம், கேரளா

கேரளாவின் பல இடங்களிலும் நீங்கள் மிக சாதாரணமாக யானைகளைக் காணலாம். ஆனால் தேக்கடியில் இருக்கும் பெரியார் வனவிலங்கு சரணாலயத்திற்கு செல்வது தான் மிகச் சரியாக இருக்கும். இங்கே நீங்கள் யானைகளுடன் குளிக்கலாம், விளையாடலாம், உணவளிக்கலாம். ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனியாக கட்டணம் வசூலிக்கப்படுமே தவிர உங்களுக்கு கிடைக்கும் சந்தோஷம் நீங்கள் எதிர்பார்க்கததாக இருக்கும்.

உங்களுக்கு யானைகள் பிடிக்குமென்றால் வாழ்வில் ஒரு முறையேனும் இந்த இடங்களுக்கு சென்று வந்து விடுங்கள்!

More News

    Read more about: travel guide elephant camps
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+