Search
 • Follow NativePlanet
Share
» »இப்படி ஒரு கோவில எந்த ஊர்லயும் பாக்கமுடியாது! ஏன்னா இது இங்க மட்டும்தான் இருக்கு!

இப்படி ஒரு கோவில எந்த ஊர்லயும் பாக்கமுடியாது! ஏன்னா இது இங்க மட்டும்தான் இருக்கு!

கர்நாடக மாநிலத்தின் மேற்கு மூலையில் பொதிக்கப்பட்டுள்ள ஒரு மஹோன்னத வரலாற்றுக்காலத்தின் பதிவுதான் இந்த கடக் நகரம். 4656 சதுர மீட்டரில் பரந்துள்ள இந்த சிறு நகரம் அதிக எண்ணிக்கையில் பயணிகளின் வருகையை கொண்டிராமல் இருக்கலாம். ஆனால் இந்தியச் சிற்பக்கலை மற்றும் கட்டிடக்கலை ரசிகர்களை இங்குள்ள பலவகை கோயில் வளாகங்களும் கோபுரங்களும் வசீகரித்து ஈர்க்கும் இயல்பு கொண்டவை.

இப்படி ஒரு கோவில எந்த ஊர்லயும் பாக்கமுடியாது! ஏன்னா இது இங்க மட்டும்தான் இருக்கு!

Shriram Swaminathan

கடக்'கில் பார்க்க வேண்டியவை சாளுக்கியர் கால கலை அம்சங்களின் பல உன்னதமான படைப்புகளை கடக் ஸ்தலம் கொண்டுள்ளது. வெகு வித்தியாசமான தனித்தன்மையான சிற்பச்செதுக்கு பாணியையும் அலங்கார கலையம்சங்களையும் கொண்டுள்ள இந்த கோயில்கள் அக்காலத்தின் மேன்மையை நமக்கு எடுத்துச்சொல்கின்றன. கடக்'கில் காணப்படும் ஒரு அற்புதமான காட்சிகளின் ஒன்று திரிகூடேஷ்வர கோயிலாகும். கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை மட்டுமல்லாமல், ஆன்மீக அம்சங்களும் யாத்ரீகர்களுக்காக இங்கு நிறைந்துள்ளன.

சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய கடவுள்களுக்கான கோயில்கள் இங்கு உள்ளன. இவை தவிர கடக்'கில் வீராநாராயணர் கோயில், தம்பலா மற்றும் காஷிவிஷ்வேஷ்வரா கோயில் போன்றவையும் முக்கியமான இடங்களாக காணப்படுகின்றன. கட்டிடக்கலையும் ஆன்மிகமும் மட்டுமல்ல இங்கு இயற்கை ரசிகர்களுக்கான சிறப்பம்சமாக மகதி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இது கடக்'கிலிருந்து 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. கடக் நகரம் ரயில் பாதையின் மூலம் நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது. இது பல முக்கிய நகரங்களிலிருந்து கடக் நகரத்துக்கு ரயில் சேவகைளை தருகிறது.

இப்படி ஒரு கோவில எந்த ஊர்லயும் பாக்கமுடியாது! ஏன்னா இது இங்க மட்டும்தான் இருக்கு!

Manjunath Doddamani Gajendragad

கடக் நகரத்துக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் அவசிய பார்க்க வேண்டிய அம்சம் இந்த திரிகூடேஷ்வர கோயிலாகும். இந்த கோயில் வளாகம் பல கோயில்களை உள்ளடக்கியுள்ளது. திரிகூடேஷ்வர கோயில், சரஸ்வதி கோயில் மற்றும் சோமேஷ்வரர் கோயில் போன்றவை அவற்றுள் பிரதானமான கோயில்களாகும். சிவபெருமானுக்கான இந்த திரிகூடேஷ்வரர் கோயில் கடக் பகுதியிலேயே புராதனமான கோயிலாக பெருமை பெற்றுள்ளது.

10 ம் நூற்றாண்டு மற்றும் 12ம் நூற்றாண்டில் கல்யாண சாளுக்கிய அரசர்களால் இது கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.இந்தக் கோயிலை விஜயம் செய்யும் பயணிகள் ஒரு கல்லின் மீது அமைக்கப்பட்டிருக்கும் மூன்று சிவலிங்கங்களை காணலாம். இந்த மூன்று சிவலிங்கங்களை குறிக்கும் விதமாகவே இந்த ஸ்தலம் திரிகூடேஸ்வர ஆலயம் என்று அழைக்கப்படுகிறது. பிரம்மா, மஹேஷ்வரா, விஷ்ணு எனும் மூன்று தெய்வங்களை இந்த மூன்று சிவலிங்கங்கள் குறிப்பதாக சொல்லப்படுகிறது. இவை இந்த வளாகத்தின் கிழக்கில் அமைந்துள்ளன.

நுணுக்கமான செதுக்கு வடிவமைப்புடன் கூடிய கல்லால் ஆன மறைப்புகள் மற்றும் சிறு சிற்பங்கள் ஆகியவை இந்த கோயிலில் நிறைந்து காணப்படுகின்றன. அலங்கார சிற்பவேலைப்பாடுகளுடன் கூடிய தூண்கள் இங்கு ஒரு முக்கியமான கலையம்சமாகும். வளாகத்தின் கிழக்குப்பகுதியில் பலவிதமான உருவங்களின் சிறுசிற்ப (புடைப்புச்சிற்பம்)செதுக்கல்களைக்கொண்ட பாறைப்பலகைகள் புற வடிவமைப்புக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. திரிகூடேஸ்வரர் கோயில் தவிர்த்து இந்த வளாகத்தில் சரஸ்வதி, காயத்ரி மற்றும் சாரதா தேவி போன்ற பெண் தெய்வங்களுக்கான கோயில் ஒன்றும் உள்ளது. இந்த கோயிலின் வடிவமைப்பு மிகப்புராதனமாக தோற்றமளித்தாலும் இங்குள்ள சிலைகள் பிற்காலத்திய பாணியில் உருவாக்கப்பட்டுள்ளன.திரிகூடேஷ்வரர் கோயில் வளாகம் கடக் பகுதிக்கு சுற்றுலா வரும் பயணிகள் தவறாமல் பார்க்கவேண்டிய ஸ்தலமாகும்.

  Read more about: gadag
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more