வசதி, குறைந்த நேர பயணம், அவசரப் பணிகள் போன்ற பல காரணங்களுக்காக நாம் விமான பயணத்தை தேர்ந்தெடுக்கிறோம். ஆனால் அதன் விலையும் சீசன் நேரங்களில் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்து போவதை நாம் அறிவோம். ஆனால் ஒரு சில ட்ரிக்குகளை நாம் உபயோகப்படுத்தினால் விமான டிக்கெட்டுகளில் தள்ளுபடி பெறலாம். நீங்கள் உள்நாட்டு விமானங்களில் பயணிக்கும் போது செக் இன் லக்கேஜ் (Check in luggage) எதுவுமின்றி, ஹேன்ட் லக்கேஜ் (Hand luggage) மட்டும் எடுத்துச் சென்றால் 10-30 சதவீதம் வரை விமான கட்டணங்களில் தள்ளுபடி பெறலாம் பயணிகளே! இதை எப்படி உபயோகப்படுத்துவது என்று பார்ப்போம்!

தற்போது உள்ள கட்டணமில்லா லக்கேஜ் விவரம்
விமான நிறுவனங்கள் எந்தவிதமான செக்-இன் லக்கேஜ்களும் இல்லாமல் உள்நாட்டுப் பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தில் சலுகைகளை வழங்க அனுமதிக்கிறது. ஆம்! தற்போது, ஒரு பயணி 7 கிலோ கேபின் பேக்கேஜ் மற்றும் 15 கிலோ செக்-இன் லக்கேஜை எடுத்துச் செல்ல முடியும். அதற்கு பயணிகளிடம் இருந்து கூடுதலாக கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது.

கூடுதல் லக்கேஜ் இல்லை என்பதை தேர்வு செய்ய வேண்டும்
இந்த வழிகாட்டுதலைச் செயல்படுத்த, முன்பதிவு செய்யும் போது பேக்கேஜ் இல்லை என்பதைத் தேர்வுசெய்யும் பயணிகள், விமானக் கவுன்டரில் செக்-இன் செய்யும் போது பைகளை எடுத்துச் செல்ல முடிவு செய்தால், கூடுதல் கட்டணங்கள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்படும் என்று DGCA தெரிவித்துள்ளது. மேலும் டிக்கெட்டில் அச்சிடப்படும் என்பதையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

DGCA வின் வரவேற்கத்தக்க முடிவுகள்
பல்வேறு கருத்துகளின் அடிப்படையில், பல முறை விமான நிறுவனங்களால் வழங்கப்படும் இந்த சேவைகள் பயணிகளுக்கு பயணிகளுக்கு தேவைப்படாது என்று கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருந்தன. சேவைகள் மற்றும் அதற்கான கட்டணங்களை கட்டவிழ்ப்பது அடிப்படைக் கட்டணத்தை மிகவும் குறைக்கும் என்றும், பயணிகள் அவர்கள் விரும்பும் சேவைகளின் மீது அந்த பணத்தை பயன்படுத்தலாம் என்றும் பேசப்பட்டது. அவற்றையெல்லாம் கருத்தில் கொண்ட DGCA உள்நாட்டு விமான டிக்கெட்டுகளின் மீது லக்கேஜ் தள்ளுபடியை வழங்க அனுமதித்தது.

விமான டிக்கேட்டுகளில் 10 முதல் 30 சதவீத தள்ளுபடி
நீங்கள் ஒரு நாள் பயணமாகவோ அல்லது அலுவல் பயணமாகவோ அல்லது அவசர பயணமாகவோ செல்லும் போது ஒரேயொரு ஹேன்ட் லக்கேஜை எடுத்து செல்ல நேர்ந்தால் நீங்கள் உங்கள் விமான டிக்கெட்டின் விலையில் இருந்து 10 முதல் 30 சதவீத தள்ளுபடியை பெறுவீர்கள். இது குறித்து அறிவிப்பு ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டு வந்தாலும் பெரும்பாலான பயணிகள் லக்கேஜ் இல்லாமல் பயணம் செய்யவில்லை என்பதால் அது நடைமுறைக்கு இல்லாமல் போய்விட்டது. இந்த நிலையில் தற்போது அதிக விமான பயணிகளை ஈர்க்க வேண்டும் என்ற வகையில் இந்த சலுகையை மீண்டும் வழங்க இருப்பதாகவும் இதன் காரணமாக ஏராளமான பயணிகள் பயனடைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இது குறித்து விமான போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குனரகம் விரைவில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடும் என்று கூறப்படுகிறது. ஐரோப்பிய மற்றும் அமெரிக்கா விமான நிறுவனங்களில் கையில் ஹேண்ட் பேக் மட்டும் வைத்திருக்கும் விமான பயணிகளுக்கு சலுகை கட்டணம் ஏற்கனவே வழங்கி வரும் நிலையில் தற்போது இந்திய விமான நிறுவனம் இந்த சலுகையை வழங்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு விமான பயணங்களில் மட்டுமே
ஸ்பைஸ் ஜெட், ஏர் ஏசியா, ஏர் இந்தியா உள்பட சில விமான நிறுவனங்கள் லக்கேஜ் இல்லாமல் செல்லும் பயணிகளுக்கு சலுகையை அறிவிக்க உள்ளன என்ற செய்தியை கேட்டு விமான பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். அதே நேரத்தில் உள்நாட்டு விமான பயன்களுக்கு பயணங்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்படும் என்றும் வெளிநாட்டு பயணம் செய்யும் பயணிகளுக்கு இந்த சலுகை கிடையாது என்பதையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் பயணிகளே.



Click it and Unblock the Notifications





