Search
  • Follow NativePlanet
Share
» »விடுதலைப் போராட்டத்தின் கோரமான வரலாற்றுத் தளங்கள்..!

விடுதலைப் போராட்டத்தின் கோரமான வரலாற்றுத் தளங்கள்..!

இந்திய விடுதலைப் போராட்ட தியாகிகளை நினைவு கூறும் நாம், விடுதலைப் போராட்டத்தின், போரின் கோரமான மறுபக்கம் கொண்ட வரலாற்றுத் தளங்களையும் கவணிக்க வேண்டும்.

இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரது வாழ்விலும், மனதிலும் நிலைத்து நிற்கும் ஒரு நாள் இந்தியா சுதந்திரம் அந்நாள் தான். ஆயிரக் கணக்கானப் புரட்சியாளர்களின் வீரமும், தியாகமும் வரலாற்றின் சரித்திரப் பதிவுகளே. இருநூறு ஆண்டுகளாய், சொந்த நாட்டில் அடிமைப்பட்டுக் கிடந்து துணிச்சலும், கிளர்ச்சியும் கொண்டு வெற்றி பெற்ற இந்நாளை எந்தளவிற்கு நாம் போற்றுகிறோமோ அதே அளவிற்கு இதில் இன்னுயிர் நீத்த வீரர்களின் மதிப்பையும், அவர்களின் இறுதிப் பயணம் முடிவுற்ற இடத்தையும் கூடவே நினைவு கூர்ந்து பார்க்க வேண்டும். அந்த வகையில், இந்திய விடுதலைப் போராட்டத்தின், போரின் கோரமான மறுபக்கம் கொண்ட தளங்களையும் நோக்குவோம்.

மணியாச்சி ரயில் நிலையம்

மணியாச்சி ரயில் நிலையம்


ஒரு சிலர் மட்டுமே அறிந்த இந்த மணியாச்சி ரயில் நிலையம் குறித்து அறிந்துகொள்ள வேண்டும் என்றால் கூடவே வாஞ்சிநாதன் குறித்தும் அறிந்து கொள்ள வேண்டும். விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒருவர் தான் இந்த வாஞ்சிநாதன். ஆங்கிலேயர்களை எதிர்த்து நாடு முழுவதும் நடத்தப்பட்ட போராட்டம் உச்சகட்ட நிலையில் இருந்த போது, மணியாச்சி ரயில் நிலையத்தில் இவர் செய்த தியாகம் என்றும் மறக்காமல் போற்றப்பட வேண்டிய ஒன்று.

Sundar

மணியாச்சி ரயில் நிலையம்

மணியாச்சி ரயில் நிலையம்


1911 ஜூன் 17 அன்று மணியாச்சி ரயில் நிலையத்தில் அப்போது ஆங்கிலேயர்களின் கைக்கூலியாக இருந்த திருநெல்வேலி ஆட்சியர் ஆஷ்துரை தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்குச் செல்ல ரயில் அமர்ந்திருந்தார். அந்த நேரம் அங்கு வந்த வாஞ்சிநாதன் தான் கொண்டு வண்டிருந்த துப்பாக்கியால் ஆஷ்துரையை சுட்டுக் கொண்டுவிட்டு, தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆண்டுகள் பல கடந்தாலும் இன்றும் மணியாச்சி ரயில் நிலையம் வரலாற்றின் முக்கியத் துவம் பெற்றதாகவே உள்ளது.

பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை

பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை


18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, மதுரை நாயக்கர் அரசின் பாலயக்காரராக விளங்கிய, பாஞ்சாலங்குறிச்சி மன்னன் வீர பாண்டிய கட்டபொம்மனின் கட்டுப்பாட்டில் இருந்த கோட்டை தான் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை. ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்ட மறுத்த காரணத்திற்காகவும், அவர்களுக்கு எதிராக செயல்பட்டதற்காகவும் என கோட்டை பின்னாளில் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது.

Manikandan.J

கட்டபொம்மன் நினைவிடம்

கட்டபொம்மன் நினைவிடம்


பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை ஆங்கிலேயர் படை குறிவைத்து தாக்கினர். அங்கிருந்து தப்பிய கட்டபொம்மன் சிறிது காலத்திலேயே ஆங்கிலேயர்களால் சிறைபிடிக்கப்பட்டார். கோட்டையின் ஒரு பகுதியில் இருந்த மரத்தில் தூக்கிலிட தயார் செய்யப்பட்ட நிலையில் கட்டபொம்மனும், அவரது உடனிருந்த சகோதரர்களும் தங்களுக்கு தாங்களாகவே தூக்கிட்டு வீர மரணம் எய்தினர். இன்றும், கோட்டையின் ஒரு முகப்பில் கட்டபொம்மனின் நினைவு உருவச் சிலை கம்பீரத் தோற்றத்துடுன் அமைந்துள்ளது.

Selvakumar mallar

கோட்டையை கைப்பற்றிய ஊமைத்துரை

கோட்டையை கைப்பற்றிய ஊமைத்துரை


கட்டபொம்மனின் மறைவோடு கோட்டை வரலாறு முடியவில்லை. ஆங்கிலேயர்களால் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரை 1801-ல் பாஞ்சாலங்குறிச்சி வீரர்களால் மீட்கப்பட்டார். பாஞ்சாலங் குறிச்சிக் கோட்டைக்கும் புத்துயிர் கிடைத்தது. அப்போது, ஊமைத்துரையை கைது செய்ய வந்த ஆங்கிலேயர் மேஜர் மெக்காலே கோட்டையினுள் செல்ல முடியாமல் வீரர்களால் தாக்கப்பட்டார். பின், அவரது தலைமையில் மாபெரும் படை கோட்டையை முற்றுகையிட்டு கைப்பற்றியது.

Manikandan.J

வேலூர் கோட்டை

வேலூர் கோட்டை


16ம் நூற்றாண்டில் வேலூர் கோட்டை விஜயநகர பேரரசு ஆட்சியின் போது சின்ன பொம்மி நாயக்கரால் கட்டமைக்கப்பட்டது. 17-ஆம் நூற்றாண்டில் பிஜாப்பூர் சுல்தானால் கைப்பற்றப்பட்ட இக்கோட்டை பின்னர் மராட்டியர்களாலும், தில்லி தௌத் கானாலும் கைப்பற்றப்பட்டது. இதன் பின்னர் ஆற்காடு நவாபுகளின் பொறுப்பிற்கு சென்ற கோட்டை 1760 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியினரின் வசம் சென்றது. திப்பு சுல்தானை வென்ற ஆங்கிலேயர்கள் அவருடைய மகன்களை இக்கோட்டையினுள் தான் சிறை வைத்திருந்தனர்.

Fahad Faisal

வேலூர் சிப்பாய் கலகம்

வேலூர் சிப்பாய் கலகம்


சிப்பாய் கலகம் எனும் முதல் இந்திய சுதந்திர போராட்ட எழுச்சி இந்த வேலூர் கோட்டையில் தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் இன்றும் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா அம்சமாக இந்த வேலூர் கோட்டை அமைந்துள்ளது. 1806 ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கு எதிராக இக்கோட்டையில் இந்திய வீரர்கள் கலக நிகழ்ச்சியை நடத்தினர். இந்நிகழ்ச்சியை, வேலூர் சிப்பாய் எழுச்சி என்று வரலாற்றில் குறிப்பிடுகின்றனர்.

Soham Banerjee

ஜாலியன் வாலாபாக்

ஜாலியன் வாலாபாக்


விரிவாக சொல்லும் முன்பே அனைவரது கண்களும் சற்று அகல விரிக்கவைக்கும் ஓர் நிகழ்வு, தளம் தான் ஜாலியன் வாலாபாக். இந்திய விடுதலைப் போராட்டத்தில் நடைபெற்ற மாபெறும் படுகொலை நடைபெற்ற இடம் ஜாலியன் வாலாபாக். இன்று பூங்காவாக மாற்றப்பட்டுள்ள இங்கு விடுதலைப் போராட்டத்தின் போது ஆயிரக் கணக்கான மக்கள் எவ்வித பாகுபாடும் இன்றி சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

Joanjoc

ஜாலியன் வாலாபாக் படுகொலை

ஜாலியன் வாலாபாக் படுகொலை


பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரான அமிர்தசரசில் இருக்கும் ஜாலியன் வாலாபாக் என்ற பூங்காவில் 1919-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவில் நிகழ்த்திவரும் கொடுமைகளுக்கு எதிராக அமைதி வழியில் போராட கூடிய ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் ஜெனரல் டயர் என்பவரின் உத்தரவின் பேரில் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

Hermitage17

பாதுகாக்கப்படும் தடையங்கள்

பாதுகாக்கப்படும் தடையங்கள்


சுதந்திர போராட்ட வரலாற்றில் கோரமான இச்சம்பவம் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் பூங்காவில் தற்போது கூட அந்த துப்பாக்கிச் சூட்டின் தடயங்கள் சுதந்திர மக்களின் பார்வைக்காக பாதுக்காப்படுகின்றன. நம் வாழ்நாளில் ஒருமுறையேனும் நமக்காக உயிர்நீத்த பல தியாகிகளின் நினைவாக இந்த பூங்காவுக்கு சென்று வீரவணக்கம் செலுத்தி வர வேண்டும்.

Graham Beards

காலாபாணி சிறைச்சாலை

காலாபாணி சிறைச்சாலை


அந்தமான் தீவுகளின் தலைநகரான போர்ட்பிளேரில் அமைந்திருக்கும் இந்த சிறைச்சாலைக்கு சுற்றுலா செல்லும் எவரும் இங்கே படிந்திருக்கும் நம் வீரர்களிக் இரத்தக் கரையை உணர்ச்சிப் பூர்வமாகக் காண முடியும். பர்மாவில் இருந்து கொண்டு வரப்பட்ட செங்கற்கள், மரங்களைக் கொண்டு ஏழு பிரிவுகளாக கட்டமைக்கப்பட்டுள்ள இந்தச் சிறைச் சாலையில் தான் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்ட பல தலைவர்களும், புரட்சியாளர்களும் தனிமைப் படுத்தப்பட்டு சித்தரவதை செய்து கொல்லப்பட்டனர்.

FastilyClone

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X