Search
  • Follow NativePlanet
Share
» »ஹலேபீடு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

ஹலேபீடு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

ஹலேபீடு எனும் பெயருக்கு 'தொன்மையான நகரம்' என்பது பொருளாகும். இது முற்காலத்தில் ஹொய்சள சாம்ராஜ்யத்தின் தலைநகராக திகழ்ந்துள்ளது. அக்காலத்தில் இந்த நகரம் 'துவாரசமுத்ரா' எனும் பெயரால் அழைக்கப்பட்டுள்ளது. சமுத்திர வாயில் என்பது அந்த பெயரின் பொருளாகும். கர்நாடக மாநிலத்தில் ஹாசன் மாவட்டத்தில் மாநிலத்தலைநகரான பெங்களூரிலிருந்து 184 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த நகரம் கர்நாடகாவின் பாரம்பரிய தலைநகரமான மைசூரிலிருந்து 118 கி.மீ தூரத்தில் உள்ளது. 12ம் நூற்றாண்டு வரை ராஜகீர்த்தியுடன் விளங்கிய இந்த நகரம் இரண்டு முறை பாமனி சுல்தானால் சூறையாடப்பட்ட பின்னர் ஹலேபீடு (சிதில நகரம்) என்ற பெயரை பெற்றுவிட்டது.

காலத்தில் கரைந்து போன நகரத்தின் காட்சிகளும் ஒலிகளும்

காலத்தில் கரைந்து போன நகரத்தின் காட்சிகளும் ஒலிகளும்

இந்த ஸ்தலத்தில் அரசன் விஷ்ணுவர்த்தனன் மற்றும் அவரது ராணி ஷாந்தலா தேவியாரின் ஆணைப்படி கேதுமல்லாவால் கட்டப்பட்ட ஹொய்சளேஷ்வரா மற்றும் ஷாந்தலேஷ்வரா கோயில்கள் அமைந்துள்ளன. வழவழப்பான சோப்புக்கற்கள் எனப்படும் பாறைகளை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ள இந்த ஹொய்சளேஷ்வரா கோயிலின் முன்புறத்தில் ஒரு ஒற்றைக்கல் நந்தி காணப்படுகிறது.

Pawaskar Vinayak

ஆன்மீகம்

ஆன்மீகம்

12ம் நூற்றாண்டைச்சேர்ந்த அப்போதைய மன்னர்கள் ஜைனத்தை பின்பற்றி வந்த போதிலும் பல சிவன் கோயில்கள் அவர்களால் கட்டுவிக்கப்பட்டுள்ளன. அக்கால சிற்பக்கலையின் மேன்மையையும் மஹோன்னதத்தையும் இந்த கோயில்களின் உள்ளும் புறமும் காணப்படும் நுட்பமான சிற்ப வடிப்புகளிலிருந்து நாம் தெரிந்துகொள்ளலாம். தற்சயம் சிதிலமடைந்து காணப்பட்டாலும் பயணிகள் இந்த நகரின் வரலாற்றுச்சின்னங்களை தரிசிக்க அதிக அளவில் வருகை தருகின்றனர். ஹலேபீடு ஸ்தலத்துக்கு விஜயம் செய்ய அக்டோபர் மற்றும் ஜனவரி மாதங்கள் மிக உகந்ததாக கருதப்படுகிறது.

Ankush Manuja

வரலாற்று கலை

வரலாற்று கலை

2001 சென்சஸ் கணக்கெடுப்புப்படி தற்சமயம் இந்த நகரத்தின் மக்கள் தொகை 8962 என்பதாக உள்ளது. உன்னதமான கலை அம்சங்களும் அற்புத கட்டிடக்கலை அம்சங்களும் நிரம்பி வழியும் இந்த நகரம் மற்றொரு வரலாற்று கலைச்சின்னமான சென்னகேசவா கோயில் அமைந்துள்ள பேலூரிலிருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்தியாவின் பண்பாட்டு வரலாற்றுச்சின்ன ஸ்தலங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த ஹலேபீடு ஸ்தலம் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான சுற்றுலா ஸ்தலமாகும்.

Dineshkannambadi

கேதாரேஷ்வரர் கோயில்

கேதாரேஷ்வரர் கோயில்

ஹலேபீடு ஸ்தலத்தில் மற்றொரு முக்கியமான கோயில் இந்த கேதாரேஷ்வரர் கோயில் ஆகும். சாளுக்கிய கலையம்ச பாணியில் கட்டப்பட்டிருக்கும் இந்த கோயிலில் இரண்டு ஹொய்சள இலச்சினைகள் காணப்படுகின்றன. சாளுக்கிய மற்றும் ஹொய்சள கட்டிடக்கலை இரண்டும் கலந்த கலவையான பாணியில் இது கட்டப்பட்டுள்ளது. 1319 ம் ஆண்டு கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பக்கூடும் இந்த கோயில் பின்னாளில் இடிபாடடைந்து அதன் பின்னர் புதுப்பிப்பு செய்யப்படாமல் உள்ளது.வெகு நுட்பமாக வடிக்கப்பட்ட சுவர் மற்றும் உட்கூரைகளைக்கொண்டுள்ள இந்த கோயிலின் அடித்தளத்தில் மஹாபாரதம், பஹவத் கீதை போன்ற காவியங்களிலிருந்து காட்சிகள் வடிக்கப்பட்டுள்ளன.

Anoopratnaker

ஹொய்சளேஷ்வரா

ஹொய்சளேஷ்வரா

ஹலேபீடுக்கு வருகை தரும் பயணிகள் தவறாமல் இந்த ஹொய்சளேஷ்வரா கோயிலுக்கு விஜயம் செய்வது அவசியமாகும். 12ம் நூற்றாண்டில் கட்ட ஆரம்பிக்கப்பட்ட இந்த கோயில் டெல்லி சுல்தான்களின் படையெடுப்பால் நின்று போன நிலையில் உள்ளது. இங்கு பயணிகள் உன்னதமாக வடிக்கப்பட்ட சிற்பங்கள் மற்றும் பீட அமைப்பின் மீது காணப்படும் நுட்பமான தொடர் சிற்ப வேலைப்பாடுகள் போன்றவற்றை ரசிக்கலாம்.நட்சத்திர வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஷாந்தலேஷ்வரா கோயில் இரண்டு கோயில்களின் தொகுப்பாக காணப்படுகிறது. இவை இரண்டுக்கும் இடையில் பல மண்டபங்களும் சிறு சன்னதிகளும் அமைந்துள்ளன.

Dineshkannambadi

Read more about: karnataka
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more