Search
  • Follow NativePlanet
Share
» »உறைந்து கிடக்கும் நீர்வீழ்ச்சி, குவியும் சுற்றுலாப் பயணிகள் - இந்தியாவுக்குள் இப்படியொரு இடமா!

உறைந்து கிடக்கும் நீர்வீழ்ச்சி, குவியும் சுற்றுலாப் பயணிகள் - இந்தியாவுக்குள் இப்படியொரு இடமா!

இந்தியா பல இயற்கை அதிசயங்களால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது, பனி மூடிய சிகரங்கள் துவங்கி, பசுமையான பள்ளத்தாக்குகள், வெள்ளி போன்று ஓடுகின்ற ஆறுகள், காலம் கடந்த கோட்டைகள், புராதன கோயில்கள், வண்ணமயமான கடற்கரைகள் வரை நம்மை வியக்க வைக்கிறது. அவற்றில், தற்போது உறைந்து கிடக்கும் நீர்வீழ்ச்சி இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகளை தன் பக்கம் ஈர்க்கிறது! அந்த அழகிய அதிசயம் எங்கே இருக்கிறது, நாம் எப்படி செல்வது என்று பார்ப்போம்!

இந்தியாவின் உறைந்த நீர்வீழ்ச்சி

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் அமைந்துள்ள துராங் நீர்வீழ்ச்சி, குளிர்காலத்தில் இந்தியாவின் உறைந்த நீர்வீழ்ச்சி என்று அழைக்கப்படுகிறது. பனி மூடிய நிலப்பரப்புகளுக்கு மத்தியில் அமைந்திருக்கும் இந்த நீர்வீழ்ச்சி, அற்புதமான பனிக்கட்டியாக மாறி, நாடு முழுவதிலும் இருந்து பார்வையாளர்களை ஈர்க்கும் ஒரு அதிசயமான மற்றும் மாயாஜால காட்சியை உருவாக்கியுள்ளது. அழகிய மலைகள் மற்றும் அமைதியான அழகுகளால் சூழப்பட்ட, துராங் ஒரு மறைக்கப்பட்ட ரத்தினமாகும், இது இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சாகசக்காரர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது.

Frozen Waterfall

அழகிய காஷ்மீரின் மணிமகுடம்

குல்மார்க்கின் டாங்மார்க் தாலுகாவில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாகும். பசுமையான புல்வெளிகள், அழகிய மலைகள், பனி அடர்ந்த உச்சிகள் என இயற்கை அழகு நிரம்பிய கிராமமான கில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சியின் படங்களைப் பார்க்கும் எவருக்குமே அங்கு நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்துவிடும், அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனுடைய கூடுதல் அம்சம் இந்த உறைந்த நீர்வீழ்ச்சியாகும்.

கோடைக்காலத்தில் அருவியாய் கொட்டும் நீர்வீழ்ச்சி

கம்பீரமான மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள நீர்வீழ்ச்சி ஒரு கண்ணிற்கினிய சொர்க்கம் போல காட்சியளிக்கிறது. கோடைக்காலத்தில் இதிலிருந்து நீர் விழுவதை நாம் பார்த்து ரசிக்கலாம். மலைகளுக்கு நடுவே இருந்து பால் போன்று தெளிக்கின்ற நீருற்று நம் மனதை லேசானதாக மாற்றுகிறது. மேலும் சுற்றியுள்ள அருவி, ஏரிகள், நீரோடைகள், புல்வெளிகள் மற்றும் குகைகளை ஆராய்வதன் மூலம் இங்கு ஆனந்தமாக நேரத்தை செலவிடலாம்.

Frozen Waterfall

குளிர் காலத்தில் உறைந்து கிடக்கும் அதிசயம்

கோடைக்காலத்தை விட குளிர் காலத்தில் இங்கு வருவதே மிகவும் விசேஷமானது. ஏனென்றால் மிகக் குறைந்த வெப்பநிலை காரணமாக குளிர்காலத்தில் இந்த நீர்வீழ்ச்சி முற்றிலும் உறைந்துவிடும். உறைந்திருக்கும் இந்த நீர்வீழ்ச்சியைக் காண மக்கள் கூட்டம் அலை மோதுகின்றது என்பதே உண்மை! இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சாலை பனியால் மூடப்பட்டிருக்கும் மற்றும் சுற்றியுள்ள அனைத்து இடங்களிலும் நீங்கள் பனியைக் காணலாம். அருகாமையிலும், நீர்வீழ்ச்சியிலும் நீண்ட அடர்த்தியான பனிக்கட்டிகள் தொங்குவதை நீங்கள் கண்டு வியப்பீர்கள்.

நீர்வீழ்ச்சி எங்கே உள்ளது?

ஸ்ரீநகரில் இருந்து கிட்டத்தட்ட 42 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த , டாங்மார்க் நகரத்திலிருந்து 3.5 கிமீ தொலைவில் உள்ளது. குளிர்காலத்தில் இந்த இடத்தை ரசிக்க சிறந்த வழி, டாங்மார்க்கிலிருந்து 3 கிமீ நடந்து செல்வதுதான். நடந்து செல்லும் வழி முழுவதும் பனி மூடிய பனோரமிக் காட்சிகளுடன் சாலை ரம்மியமாக உள்ளது. முழு பாதையும் ஒரு விசித்திரக் கதை போன்று தெரிவதால் நடந்து செல்வதே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

Frozen Waterfall

எப்போது பார்வையிடலாம்?

கோடைக்காலத்தில் கில் வானிலையானது 28 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். அதுவே குளிர்காலத்தில் வானிலையானது ௦ டிகிரிக்கும் குறைவாக உள்ளது. அதாவது டிசம்பர் முதல் பிப்ரவரி இடையிலான நேரத்தில் கை பார்வையிடலாம், அந்த நேரத்தில் தான் நீர்வீழ்ச்சி உறைந்த நிலையில் இருக்கும்.

எப்படி இந்த இடத்தை அடைவது?

கில் விமான நிலையமோ அல்லது ரயில் நிலையமோ இல்லை. ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையம் கிலிருந்து சுமார் 48 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மேலும் ஸ்ரீநகரிலிருந்து பேருந்து அல்லது டாக்ஸி மூலம் சுமார் ஒன்றரை மணி நேரத்தில் கை அடைந்து விடலாம். நீங்கள் ரயிலில் பயணிக்க விருப்பப்பட்டால் கிற்கு அருகிலுள்ள ரயில் நிலையமான மஜோமை பயன்படுத்திக் கொள்ளலாம். ரயில் நிலையத்தில் இருந்து 45 நிமிடங்களில் கை அடைந்து விடலாம்.

Frozen Waterfall

துராங் நீர்வீழ்ச்சிக்கு அருகில் அமைந்துள்ள கண்கவர் சுற்றுலாத் தலங்கள்

1. இந்தியாவின் முதன்மையான பனிச்சறுக்கு இடமாக அறியப்படும் குல்மார்க் துராங் நீர்வீழ்ச்சிக்கு அருகில் அமைந்துள்ளது. உலகின் மிக உயரமான கேபிள் கார்களில் ஒன்றான குல்மார்க் கோண்டோலா, பனி படர்ந்த சிகரங்கள் மற்றும் பசுமையான பள்ளத்தாக்குகளின் மூச்சடைக்கக் கூடிய காட்சிகளை வழங்குகிறது.

2. அழகிய நிலப்பரப்புகளுக்கு பெயர் பெற்ற கண்கவர் நகரமான டாங்மார்க்கையும் நீங்கள் பார்வையிடலாம்.

3. கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வரலாற்று நகரமான பாரமுல்லாவுக்கு செல்லலாம். அங்கே ஈகோ பார்க், நிங்லி நல்லா மற்றும் பழமையான கான்போரா பாலம் பார்வையிடலாம்.

4. தால் ஏரி, சங்கராச்சாரியார் கோயில், முகலாய தோட்டங்கள் (ஷாலிமார், நிஷாத்), மற்றும் மிதக்கும் சந்தைகள் நிறைந்த ஸ்ரீநகருக்கு செல்லலாம்.

5. மூச்சடைக்கக்கூடிய பள்ளத்தாக்குகள் மற்றும் அடர்ந்த காடுகளுக்கு "காஷ்மீரின் கிரீடம்" என்று அழைக்கப்படும் குப்வாராவுக்கு செல்லலாம். பாங்கஸ் பள்ளத்தாக்கு மற்றும் லோலாப் பள்ளத்தாக்கு ஆகியவற்றையும் பார்வையிடலாம்.

6. இமயமலை சிகரங்களின் பரந்த காட்சிகளை வழங்கும் ஒரு சிறிய பள்ளத்தாக்கான கிலன்மார்க்கிற்கு செல்லலாம். இது மலையேற்றம் செய்யவும், இயற்கை அழகை ரசிக்க ஏற்ற இடமாகும்.

7. ஆசியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரிகளில் ஒன்றான உலார் ஏரிக்கு செல்லலாம், பறவை ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கான புகலிடமாகவும் இந்த இடம் விளங்குகிறது.

More News

    Read more about: kashmir travel guide
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+