Search
  • Follow NativePlanet
Share
» »திருப்பதியில் லட்டுவுக்கு பதில் ஜிலேபியா – நடிகர் விவேக் காமெடி உண்மை தானா?

திருப்பதியில் லட்டுவுக்கு பதில் ஜிலேபியா – நடிகர் விவேக் காமெடி உண்மை தானா?

ஒரு பிரபல தமிழ் திரைப்பட காமெடி காட்சி ஒன்றில் திருப்பதியில் லட்டுவுக்கு பதில் ஜிலேபி விற்கப்படுகிறது என மறைந்த நடிகர்களான திரு.விவேக் மற்றும் திரு.மயில்சாமி உரையாடிக் கொண்டிருப்பார்கள். அந்த காமெடி நாம் அனைவருமே ரசித்து பார்த்த ஒன்று தான். ஆனால், உண்மையிலேயே அப்படி ஒரு விஷயம் இருக்கிறது தெரியுமா மக்களே! ஆம் திருப்பதியில் சுவைமிகு ஜிலேபியும் பிரசாதமாக வழங்கப்படுகிறதாம். இது புதிய விஷயம் இல்லை, நீண்ட காலமாக திருப்பதியில் ஜிலேபி பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறதாம்!

திருமலையில் வழங்கப்படும் ஜிலேபி பிரசாதம்

திருப்பதி கோயில் இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் பிரபலமான கோயில்களில் முதன்மையானதாகும். மேலும் இங்கு வழங்கப்படும் பிரசாதம் தனித்துவமாக உள்ளது என்று சொல்லலாம். மிகவும் நேர்த்தியாக நெய், உளுந்து, உலர் பழங்கள், சர்க்கரை மற்றும் மசாலாப் பொருட்களால் செய்யப்படும் திருப்பதி லட்டுகள் பற்றி பெரும்பாலான மக்கள் அறிந்திருந்தாலும், கோவிலில் வழங்கப்படும் மற்றொரு பிரபலமான பிரசாதம் - ஜிலேபி மாலா பற்றி பலர் அறிந்திருக்க மாட்டார்கள். இது நீங்கள் வேறு எங்கும் சுவைக்காத ஒரு தனித்துவமான சுவையை கொண்டுள்ளது.

சுவையிலும் இனிப்பிலும் நம்மை வியக்க வைக்கும் ஜிலேபி பிரசாதம்

திருமலையில் வழங்கப்படும் ஜிலேபி பிரசாதம் அளவில் மிகவும் பெரியது. சுவையிலும் இனிப்பிலும் நம்மை அசத்துகிறது என்கிறார்கள் இதை வாங்கி சுவைத்த பக்தர்கள். பக்தர்கள் பின்னர், இந்த ஜிலேபியை தங்களுடைய அன்புக்குரியவர்களுக்கு விநியோகம் செய்வதற்காக வீட்டிற்கு பார்சல்களை எடுத்துச் செல்கின்றனர். திருப்பதியின் லட்டு பற்றி மட்டுமே அறிந்திருந்த நமக்கு இந்த ஜிலேபி பிரசாதம் சற்று வியப்பாக இருக்கலாம். ஆனால், ஒரு முறை வாங்கி சுவைத்தால் மட்டுமே உங்களால் இதன் அருமையை புரிந்து கொள்ள முடியும்.

jalebiprasadamprovidedattirumala

திருமலை ஜிலேபி பற்றிய சுவாரஸ்ய அம்சங்கள்

1. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய ஜிலேபி என்றும் சொல்லலாம். ஏனென்றால் ஒரு ஜிலேபியின் எடை கிட்டத்தட்ட 500 கிராமுக்கு மேலே இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

2. இந்த பிரமாண்டமான ஜிலேபி பாதி இனிப்பாகவும் பாதி சுவையாகவும் இருப்பதாக ஜிலேபியை சுவைத்த பக்தர்கள் கூறுகின்றனர்.

3. திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு பிரசாதம் அல்லது சமயப் பிரசாதம் பெற வருபவர்களுக்கு, TTD அறக்கட்டளை இப்போது tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் TTD லட்டு முன்பதிவை வழங்குகிறது. டிக்கெட்டுகள் புக் செய்யும் போது ஜிலேபி பிரசாதத்தையும் சேர்த்து நீங்கள் புக் செய்து கொள்ளலாம்.

4. பெங்களூர், ஹைதராபாத், மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் பல பெரிய நகரங்களில் தற்போது ஹோம் டெலிவரி சேவைகள் வழங்கப்படுகின்றன.

jalebiprasadamprovidedattirumala1

5. TTD வெங்கடேஸ்வர சுவாமி கோயிலுக்குச் செல்ல விரும்பும் யாத்ரீகர்களுக்காக TTD அறக்கட்டளை சட்டப்பூர்வமாக ஆன்லைன் டிக்கெட் மற்றும் லட்டு விற்பனை தளத்தை உருவாக்கியுள்ளது. யாத்ரீகர்கள் கூடுதல் TTD லட்டுகளை ஆன்லைனில் சாதாரண விலைக்கு வாங்கலாம். அதே போல ஜிலேபியையும் வாங்கலாம்.

6. இந்த ஜிலேபி பிரசாதம் எல்லா நாட்களும் கிடைப்பது இல்லை. பகவானுக்கு படைக்க ஒவ்வொரு புதன் அன்றும் ஜிலேபி மாலை செய்யப்படுகிறது.

7. பக்தர்கள் இந்த வியாழக்கிழமை சிறப்பு பிரசாதத்தை திறந்திருக்கும் கவுன்டர்களில் இருந்து வாங்க முடியும். தற்போது திருமலையில் விறகப்படும் ஜிலேபி பிரசாதத்தின் விலை ரூ.500 ஆகும், முன்பு இதே ஜிலேபி ரூ.100 க்கு விற்கப்பட்டு வந்தது.

8. விலை ரூ.500 என்று வியக்க வேண்டாம், சுமார் 10 பேருக்கு மேற்பட்டோர் இந்த ஜிலேபியை சுவைத்து மகிழலாம் மக்களே!

More News

    Read more about: tirupati travel guide jalebi
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+