Search
  • Follow NativePlanet
Share
» »இனி நீங்கள் உங்கள் வீட்டு செல்லப்பிராணிகளுடன் ரயிலில் பயணம் செய்யலாம் – IRCTCயின் புதிய அம்சம்!

இனி நீங்கள் உங்கள் வீட்டு செல்லப்பிராணிகளுடன் ரயிலில் பயணம் செய்யலாம் – IRCTCயின் புதிய அம்சம்!

செல்லப்பிராணிகள் வளர்க்கும் எவருக்குமே திடீர் பிரயாணம் செய்வது என்பது உடனே செய்ய முடியாத ஒரு செயலாக உள்ளது. அதற்கு நாம் அவற்றை வளர்க்கிறோம் என்ற கடமையை தாண்டி நம் குழந்தை போல பாசத்தை அதன் மேல் வைத்திருப்பதும் ஒரு காரணம் தான்! ஆனால் இனி நீங்கள் யார் அதை பார்த்துக் கொள்வது? அது உணவு உண்டதா இல்லையா? நலமாக இருக்கிறதா என்றெல்லாம் கவலை படாமல் உங்களுடனேயே அழைத்துச் செல்லலாம். ஆம் IRCTC ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி நீங்கள் ஆன்லைனில் உங்கள் செல்லப்பிராணிகளுக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்து அவற்றை உங்களுடன் பயணம் செய்ய வைக்கலாம். அதை எப்படி புக் செய்வது என்று பார்ப்போமா?

dogsandpetscover

செல்லப்பிராணிகளுடன் பயணம் செய்ய வசதி

ரயில்களில் செல்ல நாய்கள் மற்றும் பூனைகளுடன் பயணம் செய்ய விரும்பும் பயணிகளுக்கு ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வசதியை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக இந்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. சமீபத்திய வளர்ச்சியானது மக்கள் தங்கள் நான்கு கால் செல்லப்பிராணிகளை ரயில் பயணத்தில் கொண்டு செல்வதை எளிதாக்கும். இந்த செய்தியை செல்லப்பிராணிகள் வைத்திருக்கும் எவரும் மிகவும் வெகுவாக வரவேற்கின்றனர்.

இனி நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டாம்

செல்ல நாய்கள் மற்றும் பூனைகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வசதியை தொடங்க ரயில்வே அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இந்த வசதியின் மூலம் பயணிகள் தங்களுடைய வீட்டிலிருந்து செல்லப்பிராணிகளுக்கான டிக்கெட் முன்பதிவு செய்யலாம் மற்றும் பார்சல் முன்பதிவு கவுன்டர்களில் நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்க்கலாம். இதனால் பயணிகளின் நேரம் மிச்சமடையும்.

bookticketsfortheirpetdogsandcats

முழு கூபேவையும் புக் செய்ய வேண்டாம்

முன்னதாக, மக்கள் தங்கள் செல்லப்பிராணிகளுக்கான முதல் வகுப்பு ஏசி, கேபின்கள் அல்லது கூபேகளுக்கான டிக்கெட்டுகளை வாங்க வேண்டும் மற்றும் பிளாட்பாரத்தில் இருக்கும் பார்சல் புக்கிங் கவுண்டர்கள் மூலம் முழு கூபேக்கும் முன்பதிவு செய்ய வேண்டும். செல்லப்பிராணிகள் தங்களுடன் ஒரே பெட்டியில் பயணிக்க வேண்டுமென அவர்கள் விரும்பினால், ஏசி பெட்டியின் முதல் வகுப்பில் மட்டுமே பயணிகள் அவ்வாறு செய்ய முடியும். இதற்காக பயணம் செய்யும் அந்நாளில் நீங்கள் பயணம் செய்யும் நேரத்திற்கு முன்னரே நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும்.

முன்பு சிரமமாக இருந்த செயல்முறை

இரண்டாம் வகுப்பு சாமான்கள் மற்றும் பிரேக் வேனில் ஒரு பெட்டிக்குள் நான்கு கால் செல்லப்பிராணிகளை கொண்டு செல்ல பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், செயல்முறை அவர்களுக்கு சிரமமாக இருந்தது. எனவே, ரயில்வே அமைச்சகம் செல்லப்பிராணிகளுக்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யத் தொடங்கியுள்ளது.

bookticketsfortheirpetdogsandcats

TTEகளிடமும் கூட டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்

பயணச்சீட்டு பரிசோதகர்கள் அல்லது TTEகள் செல்லப்பிராணிகளுக்கு டிக்கெட் வழங்க அனுமதிப்பது குறித்தும் அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. பயணத்தின் போது TTE கள் பயணிகளுக்கு டிக்கெட்டுகளை வழங்குவது போல், பயணிகளின் செல்லப்பிராணிகளுக்கும் டிக்கெட் வழங்க முடியும் என்பதே இதன் பொருள். இதன் மூலம் செல்லப்பிராணிகளுக்கான ரயில் பயணம் மிகவும் சுலபமாகிறது.

bookticketsfortheirpetdogsandcats

புதிய அம்சத்தைப் பற்றி நாம் அறிந்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள்

1. புதிய அம்சம் ரயிலில் தங்கள் பூனைகள் மற்றும் நாய்களுடன் பயணிக்க விரும்பும் செல்லப் பெற்றோருக்கு பெரும் நிவாரணமாக இருக்கும்.

2. ஆன்லைனில் விலங்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு சில நிபந்தனைகள் உள்ளன.

3. ரயிலில் பயணிக்கும் பயணிகளின் டிக்கெட் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டாக இருக்க வேண்டும்.

4. பயணிகள் டிக்கெட்டை ரத்து செய்தால், விலங்கு டிக்கெட்டுக்கு பணம் திரும்ப வழங்கப்படாது.

5. ரயில் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது மூன்று மணி நேரத்திற்கு மேல் தாமதமாகினாலோ, விலங்குகளுக்கான டிக்கெட் கட்டணமும் திருப்பி அளிக்கப்படாது. பயணிகளின் பயணச்சீட்டு மட்டும் திருப்பி அளிக்கப்படும்.

6. செல்லப்பிராணி பெற்றோர்கள் ரயில் நிறுத்தங்களில் தங்கள் விலங்குகளுக்கு தண்ணீர் மற்றும் உணவு வழங்கலாம்.

இனி நீங்களும் உங்கள் செல்லப்பிராணிகளுடன் ரயிலில் பயணம் செய்யலாம். வீட்டில் அவை என்ன செய்து கொண்டிருக்கிறது என்று கவலைப்படாமல் இருக்கலாம்!

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+