Search
  • Follow NativePlanet
Share
» »திருப்பதியில் டிக்கெட் முன்பதிவு செய்யாமல் விரைவாக இலவச சுவாமி தரிசனம் செய்வது எப்படி?!

திருப்பதியில் டிக்கெட் முன்பதிவு செய்யாமல் விரைவாக இலவச சுவாமி தரிசனம் செய்வது எப்படி?!

உலகப்பிரசித்தி திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு உலகின் பல்வேறு இடங்களிலிருந்தும், இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். ஒரு நாளைக்கு சுமார் 65,000 முதல் 85,000 பக்தர்கள் வரை திருமலையில் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இவர்களில் பலர் முன்கூட்டியே சிறப்பு தரிசன டிக்கெட், ஆர்ஜித சேவாக்கள், விஐபி பிரேக் தரிசனம் என டிக்கெட் வாங்கி இருப்பார்கள். டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் அதிகபட்சம் 3 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இலவச தரிசனம் செய்யும் மக்களோ, 8-12 மணி நேரம் காத்து கிடக்கின்றனர். ஆனால், டிக்கெட் முன்பதிவு செய்யாமல் இலவசமாக எழுமலையானை விரைவாக தரிசனம் செய்வது எப்படி என்று இங்கே கொடுக்கப்பட்டுள்ளது!

மீண்டும் மீண்டும் வர தூண்டும் திருப்பதி

வாழ்வில் எத்தனை முறை சென்றாலும் மீண்டும் மீண்டும் வர தூண்டக் கூடிய இடம் தான் திருமலை திருப்பதி! கலியுகவரதனாக நமக்கு அருள் பாலிக்கும் திருவேங்கடமுடையானை நாம் எத்தனை முறை தரிசித்தாலும் நமக்கு சலிப்பதில்லை. மாறாக அவர் திருமுகத்தை மீண்டும் மீண்டும் காண வேண்டும் என்ற எண்ணம் பார்த்த வந்து விட்ட அடுத்த நொடியிலேயே நம்மைப் பற்றிக் கொள்ளும் என்று அனைவருமே நினைப்பார்கள்!

விரைவாக இலவச சுவாமி தரிசனம் பெறுவது எப்படி

அனைவருக்குமே திருப்பதி செல்ல வேண்டும் என்ற எண்ணமுண்டு. திருப்பதி செல்வதோ சாதாரண வேலை அல்ல! தரிசின டிக்கெட் மற்றும் தங்குமிடம் புக் செய்வது, பஸ் டிக்கெட் புக் செய்வது, எல்லாவற்றையும் எப்படி செய்வது, மற்றும் விரைவாக இலவச தரிசனம் செய்வது என்று இங்கே பார்ப்போம். ஆனால் சர்வ தர்ஷனில் அவர்கள் நம்மை குடவுனில் மணி கணக்கில் காத்திருக்க வைக்கிறார்கள். அவர்களும் கூட்டம் கூட்டமாக மக்கள் திருமலையை நோக்கி படையெடுக்கும் அவர்களுக்கும் வேறு வழியில்லை அல்லவா? ஆனால் விரைவாக இலவச சுவாமி தரிசனம் பெறுவது எப்படி என்று இங்கே பார்ப்போம்.

spot accommodation booking in tirupati

உங்கள் ஊர் to திருப்பதி பயணம்

நீங்கள் தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் உங்கள் ஊர் பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பதி செல்லும் பேருந்துகளில் ஏறிக் கொள்ளவும். பேருந்து வேண்டாம், எங்கள் ஊரில் ரயிலே திருப்பதிக்கு இயக்கப்படுகிறது என்றால், ரயிலிலும் நீங்கள் திருப்பதி அடையலாம். ஏனென்றால் திருப்பதியில் இரண்டு இடங்களில் மட்டுமே இலவச ஆதார் டிக்கெட் தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன.

இலவச தரிசனத்திற்கான டிக்கெட் வழங்குமிடங்கள்

நீங்கள் திருப்பதியை பேருந்து அல்லது ரயில் என இரு மார்க்கத்தில் அடைந்து இருந்தாலும் இலவச தரிசனத்திற்கான டிக்கெட் வாங்குவது மிகவும் சுலபம். ஏனென்றால்,

1. ஸ்ரீநிவாசம் காம்ப்ளக்ஸ், திருப்பதி பேருந்து நிலையம் அருகில்

2. விஷ்ணுநிவாசம் காம்ப்ளக்ஸ், திருப்பதி ரயில் நிலையம் அருகில்

இந்த இரண்டு இடங்களில் தான் நீங்கள் திருமலையில் இலவச விரைவு தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. நீங்கள் உங்கள் ஆதார் கார்டை கொடுத்து இலவச ஆதார் ஸ்லாட் புக்கிங் டிக்கெட்டை பெற்றுக் கொள்ளவும்.

சின்ன சுற்றுலா செல்லவும் நமக்கு நேரம் உண்டு

நீங்கள் சென்ற தேதியிலோ அல்லது, அடுத்த நாளோ உங்களுக்கு திருமலையான் தரிசனம் வழங்கப்படுவதற்கான சரியான நேரம் அந்த டிக்கெட்டில் கொடுக்கப்பட்டு இருக்கும். அவ்வளவு நேரத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் குழம்ப வேண்டாம். திருப்பதிக்கு அருகாமையில் இருக்கும் ஸ்ரீகாலஹஸ்தி, திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி திருக்கோயில், கோதண்டராமர் திருக்கோயில், ஸ்ரீனிவாசமங்காபுரம் உள்ளிட்ட இடங்களுக்கோ அல்லது திருப்பதியில் உள்ள நீர்வீழ்ச்சிகள், காடுகள் மற்றும் பூங்காக்கள் என இதர சுற்றுலாத் தளங்களுக்கோ செல்லலாம்.

spotaccommodationbookingintirupati

ஸ்பாட் ரூம் புக்கிங் செய்வது எப்படி

எனக்கு இது எல்லாம் வேண்டாம், திருமலைக்கு சென்று சற்று ஓய்வெடுத்துவிட்டு சுவாமி தரிசனம் செய்தால் போதும் என்று உங்களுக்கு தோன்றினாலும் அதற்கும் சுலபமான முறையில் ரூம் புக்கிங் செய்ய வசதியுண்டு. ஆம், நீங்கள் திருமலை பேருந்து நிலையத்திற்கு எதிரே இருக்கும் CRO ஆபிசில் ஆதார் டிக்கெட் காண்பித்து ரூ.50, ரூ.100 ரூம் வாங்கிக் கொள்ளலாம். இந்த ரூமுக்கு சென்று உங்களது பொருட்களை வைத்துவிட்டு ஓய்வெடுத்து பின்னர் திருமலையில் அந்த வெங்கடேசன் குடியிருக்கும் கோயில் சுற்று பிரகாரத்தை சுற்றிப் பார்க்கலாம்.

குளித்து ரெடியாகி புத்துணர்ச்சியுடன் செல்லவும்

நீங்களும் வீட்டில் உள்ளவர்களும் குளித்து ரெடி ஆன பின்னர், அன்ன பிரசாதம் அல்லது அங்கு இருக்கும் ஹோட்டல்களில் அல்லது அன்னபிரசாதம் சாப்பிட்டுவிட்டு டிக்கெட்டில் கொடுக்கப்பட்ட நேரத்திற்கு இலவச தரிசன நுழைவாயிலான ATGH சர்கிளுக்கு செல்லவும். உங்களது மொபைல் உட்பட எலக்ட்ரானிக் சாதனங்களை உங்களது அறையில் வைத்து விட்டு செல்லலாம், அல்லது உள்ளே சென்று கவுண்டரில் ஒப்படைக்கலாம்.

விரைவாக ஏழுமலையான் தரிசனம்

அடுத்த இரண்டு மணி நேரத்தில் எம்பெருமானான திருவேங்கடமுடையானின் தரிசனம் உங்களுக்கு கிட்டும். கோவிலில் சற்று அமர்ந்து மனதார வேண்டிக்கொண்டு பின்னர் திருமலையானின் பிரசாதமான லட்டைப் பெற்றுக்கொண்டு, உங்கள் ரூமுக்கு செல்லுங்கள். சற்று ஓய்வெடுத்த பின்னர் அல்லது ஒரு இரவு உறங்கிய பின்னர் உங்கள் ரூம் சாவியை ஒப்படைத்துவிட்டு உங்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பலாம் மக்களே!

More News

Read more about: tirupati andhra pradesh
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+